அதிபர் சேவை சங்கத்தின் பிரதிநிதிகள் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவை சந்தித்தனர்.

கலாநிதி ஹரினி அமரசூரிய மற்றும் அதிபர் சேவை சங்கத்தின் பிரதிநிதிகள் ஆகியோருக்கிடையிலான சந்திப்பொன்று நேற்றைய தினம் (25) பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்றது. அதிபர் சேவையில் காணப்படும் பிரச்சினைகள் தொடர்பில் பிரதமருடன் கலந்துரையாடப்பட்டதுடன் இதுவரை தீர்க்கப்படாத பிரச்சினைகள் தொடர்பிலும் அதிபர் சேவை சங்கத்தின் பிரதிநிதிகள் பிரதமரின் கவனத்திற்கு கொண்டுவந்தனர்.  குறித்த சந்திப்பில் பிரதமரின் செயலாளர் பிரதீப் சப்புதந்த்ரி, அதிபர் சேவை சங்கத்தின் தலைவர் சுனில் பிரேமதிலக, செயலாளர் செல்வராஜா கோகுலன் உள்ளிட்ட பலர் பங்கேற்றிருந்தனர்.  

பிரதமர் ஹரிணி அதிபர் ஆசிரியர்கள் தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் சந்திப்பு

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்களுக்கும் அதிபர், ஆசிரியர்கள் தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கும் இடையிலான கலந்துரையாடலொன்று நேற்று (25) பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்றது. இதன்போது ஆசிரியர் சேவை, அதிபர் சேவை, ஆசிரியர் ஆலோசகர் சேவை, பிரிவெனா ஆசிரியர் சேவை உள்ளிட்ட சேவைகளில் உள்ள பிரச்சனைகள் குறித்து தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் பிரதமரிடம் தெரிவித்தனர். இந்நிகழ்வில் பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி மற்றும் அதிபர், ஆசிரியர்கள் சேவையை பிரதிநிதித்துவப்படுத்தும் பல தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.      

அரச பல் சத்திரசிகிச்சை வைத்திய நிபுணர்கள் சங்கம் மற்றும் பிரதமருக்கிடையிலான சந்திப்பு.

அரச பல் சத்திரசிகிச்சை வைத்திய நிபுணர்கள் சங்கம் (GDSA) மற்றும் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய ஆகியோருக்கிடையிலான சந்திப்பொன்று நேற்று முன்தினம் (24) மாலை பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்றது.  அரச பல் சத்திரசிகிச்சை வைத்திய நிபுணர்கள் மற்றும் வாய் சுகாதார சேவை நேரடியாக முகம்கொடுக்கும் பிரச்சினைகள் தொடர்பில் இதன்போது பிரதமருக்கு தெளிவுபடுத்த அரச பல் சத்திரசிகிச்சை வைத்திய நிபுணர்கள் சங்கம் நடவடிக்கை எடுத்தது.  குறித்த சந்திப்பில் அரச பல் சத்திரசிகிச்சை வைத்திய நிபுணர்கள் சங்கத்தின் தலைவர் விசேட … Read more

அரிசி சந்தையை சமநிலைப்படுத்த சிறிய மற்றும் நடுத்தர அளவிலான அரிசி வர்த்தகர்களின் களஞ்சியக் கொள்ளளவை அதிகரிக்க அரசு ஆதரவு

நியாயமற்ற முறையில் இலாபம் ஈட்ட அரிசி கட்டுப்பாட்டு விலையில் மாற்றம் செய்யப்படமாட்டாது – சிறிய மற்றும் நடுத்தர அரிசி வியாபாரிகளுடனான சந்திப்பில் ஜனாதிபதி தெரிவிப்பு அரிசி சந்தையை சமநிலைப்படுத்துவதற்கு சிறிய மற்றும் நடுத்தர அளவிலான அரிசி வியாபாரிகளின் களஞ்சியக் கொள்ளளவை அதிகரிக்க அரசாங்கம் ஆதரவு வழங்கும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். சிறிய மற்றும் நடுத்தர அரிசி வியாபாரிகளுடன் ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று (25) இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார். … Read more

இலங்கையின் பொருளாதார அபிவிருத்தி, சுற்றுலா மேம்பாடு மற்றும் முதலீடுகளுக்கு உதவிகளை வழங்குவதாக நியூசிலாந்து உயர்ஸ்தானிகர் உறுதி

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் நியூசிலாந்து உயர்ஸ்தானிகர் டேவிட் பயின்(David Pine) ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று நேற்று (25) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. ஜனாதிபதித் தேர்தல் வெற்றிக்கு வாழ்த்து கூறிய நியூசிலாந்து உயர்ஸ்தானிகர், பொதுமக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதற்காக நாட்டிற்குள் வலுவான மற்றும் பலன் மிக்க பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப தொடர்ச்சியாக ஒத்துழைப்பு வழங்குவதாகவும் ஜனாதிபதியிடம் உறுதியளித்தார். தற்போது வருடாந்தம் இலங்கைக்கு 7,500 சுற்றுலாப் பயணிகள் வருகை தருவதாகவும், அந்த எண்ணிக்கையை 50,000 வரையில் அதிகரிக்க இலங்கைக்கு ஒத்துழைப்பு … Read more

ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் ஜனாதிபதியை சந்தித்தனர்

சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து ஜனாதிபதி பிரதிநிதிகளுக்கு விளக்கம். இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் கார்மென் மொரேனோ (H.E. Carmen Moreno) தலைமையிலான ஐரோப்பிய ஒன்றிய (EU) பிரதிநிதிகள் குழு நேற்று (25) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை சந்தித்தனர். இலங்கையின் தற்போதைய பாதுகாப்பு நிலைமைகள் குறித்து ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகளுக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க விளக்கமளித்ததுடன், சுற்றுலாப் பயணிகள் மற்றும் இலங்கை மக்களின் பாதுகாப்பை அதிகரிப்பதற்கு … Read more

ஈரான் தூதுவர் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுடன் சந்திப்பு

ஈரான் தூதுவர் கலாநிதி அலிரேஷா டெல்கோஷ் (Dr. Alireza Delkhosh) நேற்று (25) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை சந்தித்தார். ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்றமைக்கு மனப்பூர்வமாக வாழ்த்து கூறிய அவர், ஈரான் ஜனாதிபதி மசூத் பெசஷ்கியானின் (Masoud Pezeshkian) விசேட வாழ்த்துச் செய்தியையும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடம் கையளித்தார். தற்போதைய பொருளாதார மற்றும் அரசியல் நிலைமைகள் தொடர்பிலும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டதுடன், இலங்கையின் தற்போதைய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஜனாதிபதி விளக்கமளித்தார். இலங்கைக்கு வரும் சுற்றுலா … Read more

யானை – மனித மோதலுக்கு தீர்வு காண்பது குறித்து கலந்துரையாடல்..

யானை – மனித மோதலுக்கு தீர்வு காண்பதற்காக விரைவான மற்றும் நிரந்தர தீர்வு காணப்பட வேண்டியதன் அவசியம் எழுந்துள்ளதாக சுற்றாடல், வனஜீவராசிகள், வனவளங்கள், நீர் வழங்கல், பெருந்தோட்டம் மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.  வனஜீவராசிகள், வனவளங்கள் மற்றும் புகையிரத திணைக்களங்களின் தலைவர்களுடன் சுற்றாடல் அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். மேலும், ரயிலில் மோதி யானைகள் உயிரிழப்பதைத் தடுக்க பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட ரயில்வே … Read more

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் பிரதமருடன் சந்திப்பு.

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் (GMOA)  பிரதிநிதிகள் மற்றும் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய ஆகியோருக்கிடையிலான கலந்துரையாடலொன்று நேற்று (24) மாலை பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்றது. வைத்தியர்கள் மற்றும் சுகாதார கட்டமைப்பு முகம்கொடுக்கும் பிரச்சினைகள் தொடர்பில் பிரதமர் இதன்போது கவனம் செலுத்தினார். அத்துடன் சிறந்த சுகாதார சேவையை முன்னெடுத்துச் செல்வதற்கென அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் எதிர்காலத் திட்டங்கள் பிரதமரிடம் கையளிக்கப்பட்டன. அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் விசேட வைத்திய நிபுணர் சஞ்ஜீவ தென்னகோன், செயலாளர் … Read more

இஸ்ரேல் பிரஜைகள் குறித்து தொடர்பு கொள்வதற்கான விசேட தொலைபேசி இலக்கம் அறிமுகம்

இஸ்ரேல் பிரஜைகள் அவசர சந்தர்ப்பத்தில் தொடர்பு கொள்வதற்கான விசேட தொலைபேசி இலக்கம் தொடர்பான அறிவித்தலொன்றை பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ளது சுற்றுலாப் பயணிகளாக அல்லது ஏதேனும் தேவைக்காக இலங்கைக்கு வந்துள்ள இஸ்ரேல் நாட்டு பிரஜைகளுக்கு ஏதேனும் தனிப்பட்ட பாதுகாப்பை பெற்றுக் கொள்வதற்கு அவசியமாயின் 071-8592651 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அறிவிக்கலாம் என இலங்கை பொலிஸ் தெரிவித்துள்ளது. இந்த தொலைபேசி இலக்கத்தில் சுற்றுலா மற்றும் கடற்பகுதிக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் தமயந்த விஜயஸ்ரீ உடன் தொடர்பு கொள்வதனால், … Read more