பொலன்னறுவை மாவட்ட விவசாயிகளின் பயிர் சேதத்திற்கு 139 மில்லியன் ரூபாய் இழப்பீடு

அண்மைய வெள்ளத்தினால் சேதமடைந்த பொலன்னறுவை மாவட்ட விவசாயிகளின் விளைநிலங்களுக்கு இழப்பீடாக 139 மில்லியன் ரூபாவை வழங்குவதற்கான மதிப்பீட்டுப் பணிகள் தற்போது இடம்பெற்று வருவதாக விவசாயிகள் காப்புறுதிச் சபை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பொலன்னறுவை மாவட்ட செயலகத்தில் அண்மையில் (13) நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தின் போதே இது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக, விவசாயியிகளிடம் சென்று மதிப்பீட்டை மேற்கொள்ளுமாறு, வீடமைப்பு பிரதியமைச்சர் டீ.பீ.சரத் உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கியுள்ளதாக பொலன்னறுவை மாவட்ட ஊடகப் பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது. இந்தக் … Read more

மாத்தளை மாவட்ட செயலகத்திற்கு சூரிய சக்தி கட்டமைப்பு

மாத்தளை மாவட்ட செயலக அலுவலகக் கட்டடத் தொகுதியின் கூரையின் மீது பொருத்தப்பட்ட 96 கிலோ வோட் கொள்ளளவு ​கொண்ட சூரிய சக்தி மின் கட்டமைப்பு அண்மையில் (11) திறந்து வைக்கப்பட்டது.   மாத்தளை மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும் மலைநாட்டு தசாப்தம் வேலைத்திட்டத்தின் பெறுகை சேமிப்பு மற்றும் நிருவாக செலவுகளை பயன்படுத்தி 10.5 மில்லியன் ரூபா பெறுமதியான இந்த சூரிய சக்தி மின் கட்டமைப்பு பொருத்தப்பட்டதாக மாத்தளை மாவட்ட ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது மாதாந்தம் 10560 மின்சார அலகுகள், இந்த கட்டமைப்பின் … Read more

ஜனாதிபதி மற்றும் இந்திய இராஜதந்திரிகளுக்கு இடையில் பேச்சுவார்தை ஆரம்பம்

இலங்கையில் பொருளாதார மறுமலர்ச்சியை ஏற்படுத்த இந்தியாவின் மிகப்பெரிய சந்தையை பயன்படுத்திக்கொள்வது குறித்து கவனம் இந்தியாவுக்கான மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருக்கும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தங்கியிருக்கும் புதுடில்லி ITC MAURYA ஹோட்டலுக்கு வருகைத் தந்த இந்திய நிதி மற்றும் நிறுவன அலுவல்கள் அமைச்சர் நிர்மலா சீதாராமன், வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர், (Dr.S.jayashankar) மற்றும் இந்திய பாதுகாப்பு ஆலோசகர் ஸ்ரீ அஜித் தோவால் ஆகியோர் ஜனாதிபதியை சந்தித்து கலந்துரையாடினர். இந்தியா – இலங்கை பொருளாதார ஒத்துழைப்புக்களை … Read more

மத்திய பாதுகாப்புப் படைத் தலைமையகத் தளபதி 12 வது காலாட் படைப்பிரிவுக்கு விஜயம்

மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத் தளபதி மேஜர் ஜெனரல் வைஏபிஎம் யஹாம்பத் ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சி அவர்கள் 10 டிசம்பர் 2024 அன்று 12 வது காலாட் படைப்பிரிவு பிரதேசத்திற்கு தனது அதிகாரப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டார். பிரதான நுழைவாயிலை வந்தடைந்த சிரேஷ்ட அதிகாரியை 122 வது காலாட் பிரிகேட் தளபதி பிரிகேடியர் கேஎச்எம்யூபி கொலங்கஹபிட்டிய யூஎஸ்பீ அவர்கள் மரியாதையுடன் வரவேற்றார். பின்னர், 12 வது கஜபா படையலகு படையினர் மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத் தளபதியின் … Read more

ஜனாதிபதி அநுரவிற்கு இந்தியாவில் ஆரவாரமான வரவேற்பு 

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று (15) பிற்பகல் 5.30 மணியளவில் புதுடில்லி இந்திராகாந்தி விமான நிலையத்தை சென்றடைந்தார்.  இந்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சர் கலாநிதி எஸ்.முருகன் (Dr S.Murugan) , இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, (Santosh Jha), இந்து சமுத்திர வலயத்தின் மேலதிகச் செயலாளர் புனித் அகர்வால் (Puneet Agrawal), இந்திய உபசரணைப் பிரதானி அன்ஷுமன் கவூர் (Anshuman Gaur) உள்ளிட்ட இராஜதந்திரிகள் ஜனாதிபதிக்கு விமான நிலையத்தில் சிறப்பு வரவேற்பளித்தனர்.  ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் விஜயம் … Read more

ஜனாதிபதி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பதவியேற்றுக் கொண்டதன் பின்னர் மேற்கொள்ளும் முதல் சுற்றுப்பயணமாக இன்று (15) பிற்பகல் நாட்டிலிருந்து  இந்தியா புறப்பட்டுச்  செல்லவுள்ளார். இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்முவின் அழைப்பின் பேரில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருக்கும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க 17 ஆம் திகதி  வரையில் இந்தியாவில் தங்கியிருப்பார். இந்தச் சுற்றுப் பயணத்தின் போது இந்திய பிரதமர் நரேந்திர  மோடியுடனான இருதரப்பு சந்திப்பில் முக்கிய விடயங்கள் குறித்தும் கலந்துரையாடப்படவுள்ளது. ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, இந்தியாவின் துணை ஜனாதிபதி ஸ்ரீ ஜக்தீப் … Read more

சபாநாயகரின் இராஜினாமாவை ஏற்றுக்கொண்டதாக ஜனாதிபதியின் செயலாளர், பாராளுமன்ற செயலாளர் நாயகம் ஆகியோர் அறிப்பு

சபாநாயகர் அசோக ரன்வல அவர்களின் இராஜினாமாவை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டதாக ஜனாதிபதியின் செயலாளர், பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீரவுக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளார். பத்தாவது பாராளுமன்றத்தின் புதிய சபாநாயகராகத் தெரிவு செய்யப்பட கௌரவ அசோக ரன்வல அவர்கள் தனது பதவியிலிருந்து இராஜினாமா செய்வதாக ஜனாதிபதிக்கு எழுத்து மூலம் அறிவித்திருந்தார். அரசியலமைப்பின் 64(2) யாப்புக்கு அமைய சபாநாயகர், பிரதி சபாநாயகர், குழுக்களின் பிரதித் தவிசாளர் ஆகிய எந்தவொரு பதவியிலிருந்தும் இராஜினாமா செய்வதாயின், அது தொடர்பாக தன் கையொப்பத்துடனான கடிதம் … Read more

போக்குவரத்து அமைச்சருக்கும் இந்திய உயர்ஸ்தானிகருக்கும் இடையில் விசேட சந்திப்பு

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா (Santosh Jha), போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்கவை நேற்று (13) பத்தரமுல்ல, மகனெகும வளாகத்தில் அமைந்துள்ள அமைச்சரின் அலுவலகத்தில் சந்தித்தார். அமைச்சருக்கும் உயர்ஸ்தானிகருக்கும் இடையில் சிறிது நேரம் கலந்துரையாடல் இடம்பெற்றது. இலங்கையின் தற்போதைய பொருளாதார நிலைமை குறித்து விசேட கவனம் செலுத்தி, இந்திய உயர்ஸ்தானிகர் இங்கு உரையாற்றினார். அண்டை நாடான இலங்கையுடன் வலுவான, நீண்டகால உறவைப் பேணுவதற்குத் தேவையான ஆதரவை இந்திய … Read more

பாராளுமன்ற இனையத்தளத்தில் நீதி அமைச்சர் சட்டத்தரணி கௌரவ ஹர்ஷன நானாயக்கார அவர்களின் பெயருக்கு முன்னால் குறிப்பிடப்பட்டிருந்த கலாநிதிப் பட்டம் தொடர்பானது 

பாராளுமன்ற இனையத்தளத்தில் உறுப்பினர்களின் தகவல் திரட்டில் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் சட்டத்தரணி கௌரவ ஹர்ஷன நானாயக்கார அவர்களின் பெயருக்கு முன்னால் குறிப்பிடப்பட்டிருந்த கலாநிதிப் பட்டம் தொடர்பாக ஊடகங்களில் வெளியிடப்படும் அறிக்கைகள் தொடர்பில் பாராளுமன்ற சட்டவாக்க சேவைகள் பணிப்பாளரும் தொடர்பாடல் திணைக்கள பதில் பணிப்பாளருமான எம். ஜயலத் பெரேரா ஊடக அறிக்கையொன்றின் மூலம் பின்வரும் விடயங்களை வலியுறுத்துகிறார்.  அமைச்சரினால் பாராளுமன்றத்துக்கு வழங்கப்பட்ட தனது தகவல்கள் அடங்கிய படிவத்தில் கலாநிதிப் பட்டம் உள்ளடங்கப்படவில்லை என்பதுடன், பாராளுமன்ற இணையத்தளத்தில் … Read more

கொழும்பு துறைமுகத்திற்கு விசேட கண்காணிப்பு விஜயம்

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க மற்றும் பிரதியமைச்சர் ஜனித்த ருவன் கொடிதுவக்கு ஆகியோர் நேற்று (13) கொழும்பு துறைமுகத்திற்கு விசேட கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டிருந்தனர். அங்கு கிழக்கு கொள்கலன் முனையம், மேற்கு கொள்கலன் முனையம், ஜய கொள்கலன் முனையம், CICT, SAGT ஆகிய அனைத்து முனையங்களையும் பார்வையிட்ட அமைச்சர், ஊழியர்களின் பிரச்னைகள் கலந்துரையாடினார். அனைத்து முனையங்களின் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்த அமைச்சர், இதனை கவர்ச்சிகரமான துறைமுகமாக மாற்ற … Read more