பாதுகாப்பு குழுக்களின் பிரதானி, இராணுவ தளபதி, கடற்படை தளபதி மற்றும் பிரதமருக்கிடையிலான சந்திப்பு

.பாதுகாப்பு குழுக்களின் பிரதானி ஷவேந்த்ர சில்வா, இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் விகும் லியனகே, கடற்படை தளபதி வைஸ் எட்மிரல் பிரியந்த பெரேரா மற்றும் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய ஆகியோருக்கிடையிலான சந்திப்பொன்று இன்று (24) காலை பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்றது. புதிய பிரதமரின் நியமனத்தின் பின்னர் பாதுகாப்பு பிரதானிகளை சந்தித்த முதற் சந்தர்ப்பம் இதுவாகும். பிரதமர் ஊடக பிரிவு2024.10.24

அரச சேவையில் செயற்திறன் மற்றும் வெளிப்படைத்தன்மையை ஏற்படுத்த அரச சேவை டிஜிட்டல்மயப்படுத்தப்பட வேண்டும்

அரச சேவையில் செயற்திறன் மற்றும் வெளிப்படைத்தன்மையை ஏற்படுத்துவதற்கு அரச சேவை டிஜிட்டல்மயப்படுத்தப்பட வேண்டுமென பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார். நேற்று (23) மாலை கொழும்பில் இடம்பெற்ற இலங்கை தகவல் தொழில்நுட்ப பட்டய நிறுவனத்தின் 26ஆவது ஆண்டு நிறைவை கொண்டாடும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தகவல் தொழில்நுட்ப தேசிய விருது வழங்கல் விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இதனை தெரிவித்துள்ளார். இங்கு கருத்து தெரிவித்த பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய, இலங்கையை டிஜிட்டல்மயப்படுத்தும் தொலைநோக்கு பார்வை … Read more

மாத்தறை தாதியர் கல்லூரிக்கு 167 மில்லியன் ரூபா செலவில் நான்கு மாடிகளைக் கொண்ட விரிவுரை மண்டபங்கள்..

சுகாதார அமைச்சின் 167 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் மாத்தறை தாதியர் கல்லூரியில் (Nilwala College of Nursing) நவீன வசதிகளுடன், தாதியர் கல்வி நடவடிக்கைகளுக்காக நிர்மாணிக்கப்பட்ட நான்கு மாடிகளைக் கொண்ட விரிவுரை மண்டபங்கள் நேற்று (23) திறந்து வைக்கப்பட்டது. மாத்தறை தாதியர் கல்லூரியின் அபிவிருத்திக்காக சுகாதார அமைச்சினால் 410 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் செயற்திட்டமொன்று அமுல்படுத்தப்பட்டுள்ளதுடன் அதன் பயனாக இந்த நான்கு மாடிகளை கொண்ட விரிவுரை மண்டபங்கள் இன்று சுகாதார அமைச்சின் செயலாளர் டாக்டர். … Read more

இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் மாரி-நொயில் டூரிஸ் மற்றும் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு..

இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் மாரி-நொயில் டூரிஸ் நேற்று (23) பிரதமர் அலவலகத்தில் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவை சந்தித்தார். இதன்போது இடம்பெற்ற கலந்துரையாடலில் இலங்கையுடனான பிரான்சின் நீண்டகால நட்பு குறித்து கவனம் செலுத்தப்பட்டதுடன், இலங்கைக்கு தொடர் ஒத்துழைப்பு வழங்குவது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது. இந்த கலந்துரையாடலில் இலங்கை மற்றும் பிரான்ஸ் நாடுகளுக்கிடையிலான இராஜதந்திர உறவின் 75 வருட ஆண்டு நிறைவு குறித்தும் விசேடமாக கருத்து வெளியிடப்பட்டதுடன் இரு நாடுகளுக்குமிடையிலான பல்வேறு துறைகள் சார்ந்த ஒத்துழைப்புகள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.

துல்லியமான தகவல்களை வழங்குவதனூடாக 2024 குடிசன வீட்டு வசதிகள் தொகை மதிப்புக்கு ஆதரவளியுங்கள் – தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம்

வீடுகளுக்கு வரும் தொகைமதிப்பு கணக்கெடுப்பு அதிகாரிகளுக்கு துல்லியமான தகவல்களை வழங்குவதனூடாக 2024 குடிசன வீட்டு வசதிகள் தொகை மதிப்புக்கு ஆதரவளிக்குமாறு தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் டீ.டீ.ஜீ.ஏ. செனவிரத்ன தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். 2024ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 19ஆம் திகதி ‘தொகை மதிப்பு தினம்’ என்று பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதுடன், இலங்கையின் தொகைமதிப்பு வரலாற்றில் முதற் தடவையாக … Read more

மாலைதீவு உயர்ஸ்தானிகர் பாதுகாப்பு செயலாளரை சந்திப்பு 

இலங்கைக்கான மாலைதீவு குடியரசின் உயர்ஸ்தானிகர் அதிமேதகு மசூத் இமாத் நேற்று (அக்டோபர் 23) கோட்டே ஸ்ரீ ஜயவர்தனபுரவில் உள்ள பாதுகாப்பு அமைச்சில் பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தாவை (ஓய்வு) சந்தித்தார்.  வரவேற்பை தொடர்ந்து, நிகழ்ந்த சுமுகமான கலந்துரையாடலில் இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகள் மற்றும் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து கவனம் செலுத்தப்பட்டது.  பாதுகாப்பு அமைச்சின் இராணுவ இணைப்பு அதிகாரி எயார் வைஸ் மார்ஷல் பத்மன் டி கொஸ்தா,  மாலைதீவு உயர்ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு … Read more

கனேடிய உயர் ஸ்தானிகர் பிரதமருடன் சந்திப்பு

இலங்கைக்கான கனேடிய உயர் ஸ்தானிகர் எரிக் வோல்ஷ், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவை இன்று (23) பிரதமர் அலுவலகத்தில் சந்தித்தார்.  இந்த சந்திப்பு இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால இராஜதந்திர உறவுகளை மீண்டும் உறுதிப்படுத்தியதுடன், எதிர்கால ஒத்துழைப்புக்கான துறைகளை ஆராய்வதாக அமைந்திருந்தது. உயர் ஸ்தானிகர் வால்ஷ், இலங்கையுடனான வலுவான இருதரப்பு உறவுகளைப் பேணுவதற்கான கனடாவின் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினார். இலங்கையின் சமூகப் பாதுகாப்பு முறைமையை வலுப்படுத்துதல், பெண்களின் தொழில்முயற்சியை ஊக்குவித்தல் மற்றும் நாட்டின் பொருளாதாரத்தில் சிறிய மற்றும் … Read more

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் 50ஆவது பட்டமளிப்பு விழா இம்மாதம் 28, 29 மற்றும் 30ஆம் திகதிகளில்..

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் 50 ஆவது பட்டமளிப்பு விழா இம்மாதம் 28, 29 மற்றும் 30 ஆம் திகதிகளில் கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ளதாக ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சிரேஷ்ட பேராசிரியர் எம். எம். பத்மலால் குறிப்பிட்டார். ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் 50 ஆவது பட்டமளிப்பு விழாவை முன்னிட்டு அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (23) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்.. 2024ஆம் ஆண்டில் … Read more

கடவுச்சீட்டுக்களை பெற்றுக்கொள்வதில் எதிர்காலத்தில் எவ்வித சிக்கல்களும் ஏற்படாது – அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத்

வெளிநாட்டு கடவுச்சீட்டுகளை பெற்றுக்கொள்வது குறித்து எதிர்காலத்தில் எவ்வித சிக்கல்களும் ஏற்பட மாட்டாது என்றும், இந்த வார இறுதியுடன் வெளிநாட்டு கடவுச்சீட்டுகளைப் பெறுவதற்கான வரிசை முடிவடையும் என்றும் அமைச்சரவை ஊடகப் பேச்சாளர், புத்தசாசனம், சமய மற்றும் கலாச்சார அலுவல்கள், தேசிய ஒருமைப்பாடு, சமூக பாதுகாப்பு மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (22) இடம்பெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர்களுடனான கலந்துரையாடலின் போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இங்கு தொடர்ந்தும் … Read more

யாழ்ப்பாண பொருளாதார மத்திய நிலையத்தை மீள ஆரம்பித்தல் தொடர்பான கலந்துரையாடல்

யாழ்ப்பாண பொருளாதார மத்திய நிலையத்தை மீள ஆரம்பித்தல் தொடர்பான ஆரம்ப கட்ட கலந்துரையாடல் மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமான திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் நேற்று (22.10.2024) காலை 10.30 மணிக்கு யாழ்ப்பாண மாவட்ட செயலக அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது.  யாழ்ப்பாண பொருளாதார மத்திய நிலையத்தை வர்த்தக நடவடிக்கைகளுக்காக மீள ஆரம்பிப்பது மற்றும் பொருளாதார மத்திய நிலையத்திலிருந்து விவசாயம் மற்றும் பழ வகைகள் போன்ற உள்ளூர் உற்பத்திப் பொருட்களை வெளி மாவட்ட பொருளாதார மத்திய … Read more