2024 பாராளுமன்றத் தேர்தல் : தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளுக்காக செலவிட முடியுமான செலவு எல்லை..

2024 பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுகின்ற அனைத்து அரசியல் கட்சிகள், சுயேட்சை குழுக்கள் மற்றும் வேட்பாளர்கள் 2023 இல 3 தேர்தல் செலவினங்களை ஒழுங்குபடுத்தல் சட்டத்தின் மூன்றாம் பிரிவின் பிரகாரம் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளுக்காக செலவிட முடியுமான செலவு எல்லைகள் பின்வருமாறு தீர்மானிக்கப்பட்டுள்ளது என்று தேர்தல் ஆணைக்குழு அறிக்கை வெளியிட்டுள்ளது. ஆணைக்குழுவினால் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு..

பிரதமர் மற்றும் பல்கலைக்கழக மாணவர் சங்கங்களுக்கிடையிலான கலந்துரையாடல்

பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய மற்றும் மாணவர் சங்கங்களுக்கிடையில் (17) இடம்பெற்ற கலந்துரையாடலில் பல்கலைக்கழக மாணவர்களின் கல்விச் செயற்பாடுகள் மற்றும் மாணவ நலன்புரி விடயங்கள் தொடர்பில் பல்கலைக்கழக மாணவர்கள் இதுவரை முகம்கொடுத்த தீர்க்கப்படாத பல பிரச்சினைகள் தொடர்பில் இதன்போது அவதானம் செலுத்தப்பட்டது. இந்த கலந்துரையாடலில் அனைத்து பல்கலைக்கழக மாணவர் படையணி, மாணவர் உரிமைக்கான படையணி மற்றும் அதன் கீழுள்ள பல்கலைக்கழக மாணவர் சங்கங்கள், வைத்திய பீட மாணவர் செயற்பாட்டாளர் குழு மற்றும் அனைத்து மருத்துவ பீட மாணவர் … Read more

வாகன வருமான அனுமதிப்பத்திரங்களை பெற்றுக்கொள்வதில் மேல் மாகாணத்தை ஏனைய மாகாணங்களுடன் இணைக்க அமைச்சர் விஜித ஹேரத்தின் ஆலோசனை.

வாகன வருமான அனுமதிப்பத்திரம் பெறுவதில் மக்கள் எதிர்நோக்கிய பிரதான பிரச்சினை மாகாணங்களுக்கிடையிலான உறவின்மையாகும். அது அமுல்படுத்தப்பட்டதாக குறிப்பிடப்பட்டிருந்த போதிலும், அத்தியாவசியமான மாகாணமான மேல்மாகாணத்திற்கு இதுவரையில் நடைமுறைப்படுத்தப்படவில்லை. மேல்மாகாணத்தில் இருக்கும் வாகன உரிமையாளர் ஒருவரின் வாகனம் ஒன்று வேறு மாகாணத்தில் பதிவு செய்யப்பட்டிருந்தால், இந்த மாகாணத்தில் இருந்து வருமான அனுமதிப்பத்திரம் பெறுவது என்பது நேரத்தையும், உழைப்பையும், பணத்தையும் விரயமாக்கும் மிகவும் கடினமான பணியாகும் என மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். இந்த சிரமம் குறித்து கவனம் செலுத்திய போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், … Read more

திருகோணமலை செல்வநாயகபுரம் பகுதியில் ஐஸ் போதைப்பொருள் மற்றும் போதை மாத்திரைகளுடன் 02 சந்தேகநபர்கள் கைது

இலங்கை கடற்படையினர் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் இணைந்து 2024 ஒக்டோபர் 15 ஆம் திகதி திருகோணமலை செல்வநாயகபுரம் பகுதியில் மேற்கொண்டுள்ள விசேட கூட்டுத் தேடுதல் நடவடிக்கையின் போது விற்பனைக்கு தயார்செய்யப்பட்ட நான்கு (04) கிராம் முந்நூற்று நாற்பது (340) மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள், பத்து போதை காப்ஸ்யூல்கள் (10) மற்றும் இருபது போதை மாத்திரைகளுடன் (20) இரண்டு சந்தேக நபர்கள் (02) கைது செய்யப்பட்டனர். அதன்படி, கிழக்கு கடற்படைக் கட்டளைக்கு சொந்தமான இலங்கை கடற்படைக் கப்பல் … Read more

வலிமையிழப்பொன்றிற்கு இலக்காகிய வாக்காளர் ஒருவருக்கு வாக்களிப்பு நிலையத்தில் வாக்குச்சீட்டை அடையாளமிடுதல் தொடர்பான சட்ட விதிகள்

வலிமையிழப்பொன்றிற்கு இலக்காகிய வாக்காளர் ஒருவருக்கு வாக்களிப்பு நிலையத்தில் வாக்குச்சீட்டை அடையாளம் இட்டுக் கொள்வதற்கு உதவியாளர் ஒருவரை உடன்னழைத்துச் செல்வதற்கு தேவையான சட்ட விதிகளை ஏற்பாடுகள் செய்தல் தொடர்பாக தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கை..

தேசிய திரைப்படக் கூட்டுத்தாபனத்தை நவீன யுகத்திற்கு ஏற்றவாறு மாற்றியமைக்க வேண்டும் – ஊடகத்துறை அமைச்சர் விஜித ஹேரத்

தேசிய திரைப்படக் கூட்டுத்தாபனத்தை நவீன யுகத்திற்கு ஏற்றவாறு தனியார் நிறுவனங்களுடன் போட்டியிட்டு முன்னேறக் கூடிய வகையில் மாற்றியமைக்க வேண்டும் என்று புத்தசாசனம், மத அலுவல்கள், தேசிய ஒருமைப்பாடு, சமூக பாதுகாப்பு மற்றும் ஊடகத்துறை அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார். தேசிய திரைப்படக் கூட்டுத்தாபனம் மற்றும் இலங்கை மன்றம் ஆகியவற்றிற்கான பணிப்பாளர் சபையை நியமிக்கும் நிகழ்வு, ஊடக அமைச்சின் கேட்போர் கூடத்தில் இன்று (18) நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். கடந்த … Read more

ஜெனீவாவில் நடைபெற்ற 149வது அனைத்துப் பாராளுமன்ற ஒன்றியத்தின் பேரவையில் இலங்கை பாராளுமன்றத்தின் செயலாளர் நாயகம் மற்றும் பிரதி செயலாளர் நாயகம் பங்கேற்பு

சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் 2024 ஒக்டோபர் 13 முதல் 17 வரை நடைபெற்ற 149வது அனைத்துப் பாராளுமன்ற ஒன்றியத்தின் (IPU) பேரவையில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி இலங்கை பாராளுமன்றத்தின் செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர மற்றும் பணியாட்தொகுதியின் பிரதானியும் பிரதி செயலாளர் நாயகமுமான சமிந்த குலரத்ன ஆகியோர் கலந்துகொண்டனர். பாராளுமன்ற ஒத்துழைப்பு மற்றும் நிர்வாகத்தை முன்னேற்றுவதற்கான உலகளாவிய அர்ப்பணிப்பை எடுத்துக்காட்டும் வகையில் 130 நாடுகளைச் சேர்ந்த 630 பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டிருந்தனர். இதில் கலந்துகொண்ட இலங்கை பாராளுமன்ற செயலாளர் … Read more

கெரம் உலக கிண்ணத் தொடரில் பங்கேற்கும் தேசிய கெரம் அணிக்கு பிரதமரின் வாழ்த்து.

இம்முறை ஐக்கிய அமெரிக்காவில் நடைபெறும் கெரம் உலக கிண்ணத் தொடரில் பங்கேற்கும் வீர, வீராங்கனைகள் உள்ளிட்ட இலங்கை தேசிய கெரம் அணி இன்றைய தினம் (18) பிரதமர் அலுவலகத்தில் பிரதமர் கலாநிதி ஹரனி அமரசூரியவை சந்தித்தது. 2024 நவம்பர் மாதம் 10ஆம் திகதியிலிருந்து 17ஆம் திகதி வரை அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தின் சென் பிரான்சிஸ்கோவில் இடம்பெறும் ஆறாவது கெரம் உலக கிண்ணத் தொடரில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தும் அணியில் முகாமையாளருடன் 8 வீர, வீராங்கனைகள் பங்கேற்கவுள்ளனர். ஶ்ரீ லங்கா … Read more

பாராளுமன்றத் தேர்தல் – 2024 : தேர்தல் முறைப்பாடுகளின் சாரம்சம்

கடந்த 24 மணித்தியாலங்களுக்குள் (2024.10.17 பி.ப 04.30 வரை) தேர்தல் சட்டவிதிகளை மீறி செயற்பட்டமை தொடர்பாக 33 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன என்று தேர்தல் ஆணைக்குழு அறிக்கை வெளியிட்டுள்ளது. இதேவேளை, 2024.09.26ஆம் திகதி தொடக்கம் 2024.10.17ஆம் திகதி வரையிலும் கிடைக்கப்பெற்றுள்ள மொத்த முறைப்பாடுகளின் எண்ணிக்கை 290 என்றும் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை பின்வருமாறு..

டி-20 தொடரை கைப்பற்றியது இலங்கை அணி

சுற்றுலா மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான  மூன்றாவதும் இறுதியுமான இருபதுக்கு 20 போட்டியில் இலங்கை அணி 09 விக்கெட்டுக்களால் வெற்றிப்பெற்றுள்ளது. தம்புள்ளையில் இடம்பெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய அந்த அணி 20 ஓவர்கள் நிறைவில் 08 விக்கெட்டுக்களை இழந்து 162  ஓட்டங்களை பெற்றது. துடுப்பாட்டத்தில் அந்த அணி சார்பில் அதிகபட்சமாக அணித்தலைவர் Rovman Powell 37 ஓட்டங்களையும், Gudakesh Motie 32 … Read more