சீரற்ற காலநிலைக்கு மத்தியில் கடற்படை வெள்ள நிவாரணக் குழுக்கள் நிவாரண நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன

இலங்கையை பாதித்த சீரற்ற காலநிலை காரணமாக பெய்து வரும் கடும் மழையால் மேல் மற்றும் வடமேற்கு மாகாணங்களில் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. அதன் படி, பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்துடன் (DMC) ஒருங்கிணைந்து செயற்படும் 08 கடற்படை வெள்ள நிவாரணக் குழுக்கள் கம்பஹ, கொழும்பு மற்றும் புத்தளம் மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன.  கடும் மழை காரணமாக களு கங்கை, களனி கங்கை, அத்தனகலு ஓய மற்றும் தெதுரு ஓய ஆகிய பிரதான மற்றும் கிளை … Read more

கடற்படையின் புதிய பிரதித் தலைமை அதிகாரியாக ரியர் அட்மிரல் நிஷாந்த பீரிஸ் நியமிக்கப்பட்டுள்ளார்

இலங்கை கடற்படையின் புதிய பிரதித் தலைமை அதிகாரியாக பணிப்பாளர் நாயகம் செயற்பாடுகள், ரியர் அட்மிரல் நிஷாந்த பீரிஸ் 2024 ஒக்டோபர் 11 ஆம் திகதி நியமிக்கப்பட்டதுடன், அதற்கான நியமனக் கடிதம் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவினால் (2024 ஒக்டோபர் 14) வழங்கப்பட்டது. மேலும் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள துணைத் தலைமை அதிகாரிக்கு தனது வாழ்த்துகளையும் கடற்படை தளபதி தெரிவித்துள்ளார். கண்டி புனித சில்வெஸ்டர் கல்லூரியின் சிறந்த பழைய மாணவரான ரியர் அட்மிரல் நிஷாந்த பீரிஸ், ஜெனரல் … Read more

பாடசாலை மாணவர்கள் பயணிக்கும் வேன் மற்றும் பஸ் கட்டணங்களை குறைப்பது குறித்து அரசாங்கம் கவனம்..

பாடசாலை மாணவர்கள் பயணிக்கும்; வேன் மற்றும் பஸ் கட்டணங்களை குறைப்பது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்துவதாகவும், இது தொடர்பாக அடுத்த இரண்டு வாரங்களில் அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என்றும் புத்தசாசனம், சமயம்; மற்றும் கலாச்சார அலுவல்கள், தேசிய ஒருமைப்பாடு, சமூக பாதுகாப்பு மற்றும் ஊடகத்துறை அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (15) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்.. அரசாங்கம் எரிபொருளின் … Read more

நாட்டின் பல பிரதேசங்களில் பிற்பகலில் அல்லது இரவில் ஆங்காங்கே மழை..

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு, தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. 2024 ஒக்டோபர் 15ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு 2024 ஒக்டோபர் 15ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது. மேல், சப்ரகமுவ, வடமேல் மற்றும் வட மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி, நுவரெலியா மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல், சப்ரகமுவ, வடமேல், மற்றும் வடக்கு மாகாணங்களிலும் காலி, மாத்தறை … Read more

சீரற்ற காலனிலையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் –   84 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு 

தற்போது நிலவி வரும் மழையுடனான காலநிலையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக அரசாங்கத்தினால் 84 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சின் அனர்த்த முகாமைத்துவ பிரிவின் மேலதிக செயலாளர் கே.ஜி.தர்மதிலக்க தெரிவித்தார்.  அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (14) நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.  இங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்.. சீரற்ற காலநிலை காரணமாக 16 மாவட்டங்களின் 69 பிரதேச செயலாளர் பிரிவுகளைச் … Read more

வெள்ளக் கட்டுப்பாட்டுக்கு நிலையான தீர்வு ஒன்றின் அவசியத்தை ஜனாதிபதி வலியுறுத்தினார்

சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட கொழும்பு, கம்பஹா, புத்தளம் மற்றும் களுத்துறை மக்களுக்கு உடனடி நிவாரணம் வழங்குப் பணிகளை முதன்மைப்படுத்துங்கள்நிவாரணம் வழங்குவதற்காக கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ள 50 மில்லியன் ரூபாவுக்கு மேலதிகமாக பணம் தேவைப்படுமாயின், அதற்கான நிதியை ஒதுக்க ஏற்பாடு செய்யுங்கள். இவ்வருடம் இரண்டு தடவைகள் வெள்ள அனர்த்தம் ஏற்பட்டதாகவும், அதற்கமைவாக அடிக்கடி ஏற்படும் வெள்ளத்தை கட்டுப்படுத்துவதற்கு சரியான மற்றும் நிலையான வேலைத்திட்டம் அவசியம் எனவும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். அனர்த்த முகாமைத்துவ அமைச்சு மற்றும் நிதி அமைச்சின் … Read more

ஐக்கிய நாடுகள் சபையின் (UNDP) உதவிச் செயலாளருக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் சந்திப்பு

அரச நிர்வாகம் மற்றும் பொருளாதார மறுசீரமைப்புகளுக்கு ஒத்துழைப்பு வழங்க உறுதி ஐக்கிய நாடுகள் சபையின் உதவிச் செயலாளர் நாயகம் கன்னி விக்னராஜா இன்று (14) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை சந்தித்தார். ஆட்சி நிர்வாகம், அரசியலமைப்பு சீர்திருத்தங்கள் மற்றும் தேர்தல் முறைமை என்பன தொடர்பில் இதன் போது முக்கியமாக கவனம் செலுத்தப்பட்டது. “பல் பரிமாண அபாய சூழ்நிலைகளைப் புரிந்துகொள்வது மற்றும் இலங்கை மக்கள் மீதான அவற்றின் தாக்கம்” என்ற தலைப்பில் தயாரிக்கப்பட்ட அறிக்கையும் ஐ.நா … Read more

அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட பாடசாலைகளுக்கு நாளையும் விடுமுறை..

நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக, மாவட்ட அனர்த்த முகாமைத்துவக்  குழுவுடன் கலந்துரையாடி, வெள்ளம் மற்றும் அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட பாடசாலைகளுக்கு நாளைய (15) தினமும் விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது என்று கல்வி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சு அறிவித்துள்ளது. இதற்கமைய, கொழும்பு, கம்பஹா, களனி கல்வி வலயங்கள் மற்றும் கடுவெல, கொலன்னாவ கல்விப் பிரிவுக்குட்பட்ட வெள்ளம் மற்றும் அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட பாடசாலைகளுக்கு நாளைய (15) தினமும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இது தவிர மாகாண பிரதம செயலாளர், மாகாண கல்வி … Read more

14 வயதுடைய பாடசாலை மாணவியிடமிருந்து பிரதமருக்கு கிடைத்த மகஜர்

காத்தான்குடியிலிருந்து கொழும்புக்கு சைக்கிளில் பயணம் செய்த 14 வயதுடைய பாத்திமா நடா என்ற மாணவி இன்று (14) முற்பகல் பிரதமர் அலுவலகத்தில் வைத்து பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவிடம் மகஜர் ஒன்றை கையளித்துள்ளார். சிறுவர் மற்றும் இளைஞர் பரம்பரையை பாதிப்புக்கு உள்ளாக்கியுள்ள போதைப்பொருள் நெருக்கடிக்கு எதிராகவும் சிறுவர் துஷ்பிரயோகத்தை தடுப்பதற்கு உடனடி நடவடிக்கைகள் எடுக்குமாறும் கோரி மாணவி இந்த மகஜரை கையளித்துள்ளார். பிரதமர் ஊடகப் பிரிவு

மழை காரணமாக அதிகளவில் பாதிக்கப்பட்ட மாவட்டங்கள் குறித்து அதிக கவனம் செலுத்தப்படும்

இந்த நாட்களில் பெய்து வரும் கடும் மழை காரணமாக புத்தளம், கம்பஹா, கொழும்பு மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்கள் குறித்து அதிக கவனம் செலுத்தப்பட்டு வருவதாகவும், அம்மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்குவதற்கு தயாராக இருப்பதாகவும் அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பதில் பணிப்பாளர் நாயகம் அதிப திலகரத்ன தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (14) நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். கடும் மழை … Read more