ஓய்வூதியதாரர்களுக்கு அடுத்த வாரம் முதல் ரூ.3000 மாதாந்தக் கொடுப்பனவு – அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பணிப்புரை

அனைத்து ஓய்வூதியதாரர்களுக்கும் மாதாந்த இடைக்கால கொடுப்பனவாக 3000 ரூபாவை அடுத்த வாரம் முதல் வழங்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நிதி அமைச்சின் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். இடைக்கால கொடுப்பனவான 3000 ரூபா ஒக்டோபர் மாத ஓய்வூதியத்துடன் சேர்க்கப்படாமை தொடர்பில் ஆராய்ந்த ஜனாதிபதி, அதே தொகையை அடுத்த வாரத்திற்குள் ஓய்வூதியதாரர்களின் வங்கிக் கணக்கில் வைப்பிலிடுமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் நிதியமைச்சின் உயர் அதிகாரிகளுடன் நேற்று (10) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் … Read more

கடும் காற்று மற்றும் கடல் கொந்தளிப்புத் தொடர்பாக அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை …

புத்தளத்திலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான பகுதிகளில் பலத்த காற்று மற்றும் கடல் கடும் கொந்தளிப்பாகக் காணப்படும் என கடற்தொழில், நீரியல் வளத்துறை திணைக்களம் அறிவித்துள்ளது. 2024 அக்டோபர் 11ஆம் திகதி காலை ஏழு மணி வரையான தகவலுக்கு இணங்க புத்தளத்திலிருந்து கொழும்பு, காலி மற்றும் மாத்தறை ஊடாக ஹம்பாந்துட்டை வரையான கடற் பகுதியில் சகல மீன்பிடி போக்குவரத்துக்களையும் மறு அறிவித்தல் வரை மேற்கொள்ள வேண்டாம் என சகல மீனவர்கள் மற்றும் கடல் தொழிலில் … Read more

அமெரிக்கா இலங்கைக்கு விமானம் அன்பளிப்பு

இலங்கை விமானப்படைக்கு அமெரிக்காவினால் நன்கொடையாக வழங்கப்பட்ட பீச்கிராப்ட் கிங் எயார் (Beechcraft King Air 360ER) விமானம் நேற்று (10) கட்டுநாயக்க விமானப்படை தளத்தில் இடம்பெற்ற நிகழ்வின் போது உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது. இந்நிகழ்வில் பாதுகாப்புச் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துயகொந்தா (ஓய்வு), பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார். அமெரிக்க தூதுவர் அதிமேதகு ஜூலி சங் மற்றும் அமெரிக்க பசிபிக் கடற்படைத் தளபதி அட்மிரல் ஸ்டீபன் கோஹ்லர் ஆகியோரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர். இலங்கை … Read more

இலங்கை மத்திய வங்கி, 2024ஆம் ஆண்டிற்கான நிதியியல் உறுதித்தன்மை மீளாய்வினை வெளியிட்டிருக்கிறது

2023ஆம் ஆண்டின் 16ஆம் இலக்க மத்திய வங்கிச் சட்டத்தின் பிரிவு 70(1)இன் நியதிகளில் இலங்கை மத்திய வங்கி 2024 ஆம் ஆண்டிற்கான நிதியியல் உறுதித்தன்மை மீளாய்வினை வெளியிட்டிருக்கின்றது. இச்சட்டரீதியான அறிக்கை, நிதியியல் முறைமையின் உறுதித்தன்மை மீதான கணிப்பீட்டுடன் தொடர்பான இடர்நேர்வுகள் மற்றும் பாதிக்கப்படும் தன்மைகள் என்பனவற்றை அடையாளம் கண்டு, மதிப்பீடு செய்வதோடு மத்திய வங்கி மற்றும் ஏனைய ஒழுங்குமுறைப்படுத்தல் அதிகாரசபைகளினால் செயற்படுத்தப்பட்ட கொள்கை வழிமுறைகளையும் மேற்கோடிடுகிறது. 2024ஆம் ஆண்டின் யூன் வரையான தரவுகளை அறிக்கை உள்ளடக்குகின்றது. எனினும், … Read more

மியாவாடியில் உள்ள இணைய குற்ற மையங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கையர்களின் விடுதலைக்கு உதவுங்கள்

– பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தாய்லாந்து அரசாங்கத்திடம் கோரிக்கை.- மியான்மர் அரசாங்கம் மற்றும் புலம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பு (IOM) மூலம் மியான்மாரின் மியாவாடி பிராந்தியத்தில் இணைய குற்ற மையங்களில் இன்னும் தடுத்து வைக்கப்பட்டுள்ள மேலதிக இலங்கையர்களை மீட்பதற்கு தாய்லாந்து அரசாங்கத்தின் உதவியை பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய கோரினார். தாய்லாந்து தூதுவர் பைட்டூன் மஹாபன்னபோர்ன் (Paitoon Mahapannaporn, ) மற்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய ஆகியோருக்கு இடையில் நேற்று (10.10.2024) பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் … Read more

அடுத்த சில நாட்களில் நாட்டின் தென்மேற்குப் பகுதியில் மழை நிலைமை சற்று அதிகரிக்கக் கூடிய சாத்தியம் 

சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு, தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. 2024  ஒக்டோபர்11ஆம் திகதிக்கான  பொதுவான வானிலை முன்னறிவிப்பு 2024 ஒக்டோபர் 10ஆம் திகதி நண்பகல் 12.00 மணிக்கு வெளியிடப்பட்டது. இலங்கையைச் சூழவுள்ள பகுதிகளில் ஏற்பட்ட வளிமண்டலத் தளம்பல் நிலை காரணமாக இன்றிலிருந்து  (10ஆம் திகதி) அடுத்த சில நாட்களில் நாட்டின் தென்மேற்குப் பகுதியில் மழை நிலைமை சற்று அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல், சப்ரகமுவ, தென் … Read more

பங்களாதேஷ் உயர்ஸ்தானிகர் அண்டலிப் எலியாஸ், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை சந்தித்தார்

• முன்னுரிமை வர்த்தக ஒப்பந்தத்தை (PTA)மேலும் வலுப்படுத்த இரு தரப்பும் இணக்கம் இலங்கைக்கான பங்களாதேஷ் உயர்ஸ்தானிகர் அந்தலிப் எலியாஸ் (Andalib Elias) நேற்று (10)முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை சந்தித்தார்.   இந்த சந்திப்பில் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்ற ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கு உயர்ஸ்தானிகர் எலியாஸ் வாழ்த்துக்களை தெரிவித்ததுடன், பங்களாதேஷ் இடைக்கால அரசாங்கத்தின் தலைவரான முஹம்மத் யூனுஸ் அவர்களின் வாழ்த்துச் செய்தியும் ஜனாதிபதிக்கு கையளிக்கப்பட்டது.   இங்கு ஜனாதிபதியும் பங்களாதேஷ் உயர்ஸ்தானிகரும் இரு … Read more

பலஸ்தீனத் தூதுவருக்கும் ஜனாதிபதிக்குமிடையில் சந்திப்பு

• பலஸ்தீனத்துடனான இலங்கையின் நீண்ட கால நட்புறவுக்கு பாராட்டு இலங்கைக்கான பலஸ்தீன தூதுவர் ஹிஷாம் அபு தாஹா (Hisham Abu Taha) நேற்று (10) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை சந்தித்தார்.   இச்சந்திப்பில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்த தூதுவர் அபுதாஹா, ஜனாதிபதித் தேர்தலில் வெற்றியீட்டியதற்காக பலஸ்தீன அரசாங்கத் தினதும் மக்களினதும் வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.   பலஸ்தீனத்திற்கு இலங்கை வழங்கும் நீண்டகால ஆதரவைப் பாராட்டிய தூதுவர், பலஸ்தீன் எதிர்நோக்கிய சர்வதேசப் … Read more

துருக்கி -இலங்கை இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் வகையில் துருக்கித் தூதுவருக்கும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் இடையில் சந்திப்பு

துருக்கியில் இலங்கையர்களுக்கான வேலை வாய்ப்புகளை அதிகரிப்பது குறித்து கவனம் துருக்கி குடியரசின் தூதுவர் செமி லுதுபி துர்குட்(Semih Lütfü Turgut) நேற்று (10) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை சந்தித்தார்.   கடந்த ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்ற ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு வாழ்த்து தெரிவித்த தூதுவர், துருக்கி ஜனாதிபதி ரிசப் தையிப் எர்டோகன் மற்றும் துருக்கி மக்களின் வாழ்த்துச் செய்தியையும் ஜனாதிபதியிடம் கையளித்தார்.   ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கு அனுப்பி வைத்துள்ள வாழ்த்துச் செய்தியில் … Read more

அமெரிக்க பசுபிக் கடற்படையின் கட்டளை அதிகாரி, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை சந்தித்தார்

அமெரிக்க பசுபிக் கடற்படையின் கட்டளை அதிகாரி அட்மிரல் ஸ்டீவ் கோஹ்லர், (Admiral Steve Koehler, a 4-star U.S. Navy Admiral and Commander of the U.S. Pacific Fleet) நேற்று (10) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை சந்தித்தார். இந்து சமுத்திரத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பாதுகாப்பு சவால்களுக்கு முகங்கொடுத்தல், கடல்சார் பிராந்தியங்கள் குறித்த விழிப்புணர்வை மேம்படுத்துவது மற்றும் அனர்த்தங்களை எதிர்கொள்ளும் திறனை மேம்படுத்துவது குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது. போதைப்பொருள் … Read more