போக்குவரத்து அமைச்சருக்கும் இந்திய உயர்ஸ்தானிகருக்கும் இடையில் விசேட சந்திப்பு

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா (Santosh Jha), போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்கவை நேற்று (13) பத்தரமுல்ல, மகனெகும வளாகத்தில் அமைந்துள்ள அமைச்சரின் அலுவலகத்தில் சந்தித்தார். அமைச்சருக்கும் உயர்ஸ்தானிகருக்கும் இடையில் சிறிது நேரம் கலந்துரையாடல் இடம்பெற்றது. இலங்கையின் தற்போதைய பொருளாதார நிலைமை குறித்து விசேட கவனம் செலுத்தி, இந்திய உயர்ஸ்தானிகர் இங்கு உரையாற்றினார். அண்டை நாடான இலங்கையுடன் வலுவான, நீண்டகால உறவைப் பேணுவதற்குத் தேவையான ஆதரவை இந்திய … Read more

பாராளுமன்ற இனையத்தளத்தில் நீதி அமைச்சர் சட்டத்தரணி கௌரவ ஹர்ஷன நானாயக்கார அவர்களின் பெயருக்கு முன்னால் குறிப்பிடப்பட்டிருந்த கலாநிதிப் பட்டம் தொடர்பானது 

பாராளுமன்ற இனையத்தளத்தில் உறுப்பினர்களின் தகவல் திரட்டில் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் சட்டத்தரணி கௌரவ ஹர்ஷன நானாயக்கார அவர்களின் பெயருக்கு முன்னால் குறிப்பிடப்பட்டிருந்த கலாநிதிப் பட்டம் தொடர்பாக ஊடகங்களில் வெளியிடப்படும் அறிக்கைகள் தொடர்பில் பாராளுமன்ற சட்டவாக்க சேவைகள் பணிப்பாளரும் தொடர்பாடல் திணைக்கள பதில் பணிப்பாளருமான எம். ஜயலத் பெரேரா ஊடக அறிக்கையொன்றின் மூலம் பின்வரும் விடயங்களை வலியுறுத்துகிறார்.  அமைச்சரினால் பாராளுமன்றத்துக்கு வழங்கப்பட்ட தனது தகவல்கள் அடங்கிய படிவத்தில் கலாநிதிப் பட்டம் உள்ளடங்கப்படவில்லை என்பதுடன், பாராளுமன்ற இணையத்தளத்தில் … Read more

கொழும்பு துறைமுகத்திற்கு விசேட கண்காணிப்பு விஜயம்

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க மற்றும் பிரதியமைச்சர் ஜனித்த ருவன் கொடிதுவக்கு ஆகியோர் நேற்று (13) கொழும்பு துறைமுகத்திற்கு விசேட கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டிருந்தனர். அங்கு கிழக்கு கொள்கலன் முனையம், மேற்கு கொள்கலன் முனையம், ஜய கொள்கலன் முனையம், CICT, SAGT ஆகிய அனைத்து முனையங்களையும் பார்வையிட்ட அமைச்சர், ஊழியர்களின் பிரச்னைகள் கலந்துரையாடினார். அனைத்து முனையங்களின் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்த அமைச்சர், இதனை கவர்ச்சிகரமான துறைமுகமாக மாற்ற … Read more

பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் மன்றம் இலங்கையில் முன்னெடுக்கும் சேவைகளை விரிவுபடுத்துவது குறித்து அவதானம்

அரசாங்கத்தின் முதன்மை தேவைகள் அடிப்படையில் உதவிகளை வழங்கத் தயார் போஷாக்குத் திட்டம், பாடசாலை மாணவர்களுக்கு பகல் உணவு வழங்கும் வேலைத்திட்டம், விவசாய நவீனமயமாக்கல் வேலைத்திட்டம், டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் கால்நடை அபிவிருத்தி வேலைத்திட்டம் என்பவற்றுக்கு நிதி மற்றும் தொழில்நுட்ப உதவிகளை வழங்க இணக்கம் பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் மன்றம் இலங்கையில் முன்னெடுக்கும் சேவைகளை விரிவுபடுத்துவது குறித்து அவதானம் செலுத்தியுள்ளது. அதன்படி, போஷாக்குத் திட்டம், பாடசாலை மாணவர்களுக்கு பகல் உணவு வழங்கும் வேலைத்திட்டம், விவசாய நவீனமயமாக்கல் வேலைத்திட்டம், … Read more

இந்திய உயர் ஸ்தானிகர் இலங்கை பிரதமருடன் சந்திப்பு

இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா அவர்கள், இலங்கை பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவை இன்று பிரதமர் அலுவலகத்தில் சந்தித்தார். இந்த சந்திப்பு இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவு மற்றும் மூலோபாய கூட்டாண்மையை எடுத்துக்காட்டுவதாக அமைந்திருந்தது. தற்போது பல்வேறு அபிவிருத்தி நிலைகளில் உள்ள பல இருதரப்பு திட்டங்களின் முன்னேற்றம் குறித்து இந்த கலந்துரையாடலின் போது கவனம் செலுத்தப்பட்டது. இந்த தூதுக்குழுவில் உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா அவர்களுடன் இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் சிரேஷ்ட அதிகாரிகளும் … Read more

அசோக ரன்வல்ல சபாநாயகர் பதவியிலிருந்து இராஜினாமா

பாராளுமன்ற சபாநாயகர் அசோக ரன்வல்ல தனது பதவி தொடர்பாக இன்று (13) கையெழுத்திட்டு ஊடக அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளார். அதற்கிணங்க சபாநாயகர் அசோக ரன்வல தற்போதைய நிலைமையை கருத்தில் கொண்டு தான் வகிக்கும் சபாநாயகர் பதவியை இராஜினாமாச் செய்வதாக அவ்வறிவித்தலில் குறிப்பிட்டுள்ளார். மேலும் அவ்வறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது.. கடந்த சில தினங்களாக தன்னுடைய கல்வித் தகைமை தொடர்பான கருத்து முரண்பாடு சமூகத்தில் ஏற்பட்டுள்ளது. தன்னுடைய கல்வித் தகைமை தொடர்பாக எவ்வித பொய்யான அறிவித்தலும் தன்னால் பிரசுரிக்கப்படவில்லை. ஆனால் அந்தக் … Read more

சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவினர் யாழில் ஆய்வு

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பரவிவரும் காச்சல் தொடர்பில் சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவினர் நேற்றைய தினம் (12) யாழ்ப்பாணம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு சென்று அங்குள்ள நிலைமைகள் தொடர்பில் ஆராய்ந்தனர். அண்மையில் சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கை தொடர்ந்து அதிகளவான நோயாளர்கள் பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இது தொடர்பாக ஆராய்வதற்காக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவின் சமூக மருத்துவ ஆலோசகர் பிரபா அபயக்கோண்  தலைமையிலான குழுவினர் பருத்தித் துறை ஆதார வைத்தியசாலைக்கு … Read more

 புலம்பெயர் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு புலமைப்பரிசில் வழங்குவதற்கான விண்ணப்ப இறுதித் திகதி டிசம்பர் 31

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் பதிவு செய்து வெளிநாட்டு வேலைவாய்ப்பில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் புலம்பெயர் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு புலமைப்பரிசில் வழங்குவதற்கான விண்ணப்பங்களை ஏற்கும் நடவடிக்கை நவம்பர் மாதம் ஆரம்பிக்டகப்பட்டுள்ளதுடன், அதன் இறுதித் திகதி 2024 டிசம்பர் மாதம் 31ஆம் திகதியுடன் முடிவடையும் என்று, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் அறிவித்துள்ளது. அத்துடன், புலம்பெயர் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு இந்தப் புலமைப்பரிசில் வழங்கப்படுவது குறித்து பாடசாலை மட்டத்தில் அறிவுறுத்துவதற்கு அதிபர்கள் கவனம் செலுத்த வேண்டும் என்றும் பணியகம் கேட்டுக்கொண்டுள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் … Read more

சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் மட்டக்களப்பு ஒல்லாந்தர் கோட்டையை மாற்றுதல்

உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை கவர்வதற்கு ஏற்றவாறு மட்டக்களப்பு ஒல்லாந்தர் கோட்டையை பயன்படுத்தல் தொடர்பான கலந்துரையாடல் மாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்டினா முரளிதரன் தலைமையில் பழைய மாவட்ட செயலகத்தில் நேற்று (12) இடம் பெற்றது. இதன்போது, கிழக்கு மாகாணத்தின் புராதன சுற்றுலாத் தளங்களில் ஒன்றான மட்டக்களப்பு ஒல்லாந்தர் கோட்டையினைப் பயன்படுத்தி உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை கவர்வதற்கு தேவையான செயற்திட்டங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது. மாவட்டத்திற்குத் தேவையான நூதனசாலை ஒன்றை அமைத்தல், ஒல்லாந்தர் கோட்டைக்கான இணையத்தளம் … Read more

கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு உறுப்பினர்கள் நியமனம்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கொழும்பு துறைமுக நகர ஆணைக்குழு உறுப்பினர்களை நியமித்துள்ளார்.  அதற்கமைவான நியமனக் கடிதங்கள் இன்று (13) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவினால் வழங்கி வைக்கப்பட்டன. அதன்படி கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழுவின் தலைவராக ஜனாதிபதி சட்டத்தரணி ஹர்ஷ அமரசேகர நியமிக்கப்பட்டுள்ளார்.  டெமியன் அமல் கப்ரால், மொஹான் ரே அபேவர்தன, சஞ்சய குலதுங்க மற்றும் கலாநிதி ஹர்ஷ சுபசிங்க ஆகியோர் குழுவின் ஏனைய உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.  ஜனாதிபதி ஊடகப் … Read more