கிழக்கு மாகாண ஆளுநர் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்திற்கு விஜயம்

கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர மட்டக்களப்பு புதிய மாவட்ட செயலகத்திற்கு உத்தியோக பூர்வ விஜயம் ஒன்றினை நேற்று (09) மேற்கொண்டார். இதன் போது மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்தி வேலைத் திட்டங்கள் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் தொடர்பாகவும் மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் ஜஸ்டினா முரளிதரனுடன் கலந்துரையாடியமை குறிப்பிடத்தக்கது. இந் நிகழ்வில் கிழக்கு மாகாண பிரதம செயலாளர் ஆர்.எம். பி.எஸ். ரத்நாயக்க, மேலதிக அரசாங்க அதிபர் நவருபரஞ்சினி முகுந்தன் மற்றும் பதவி நிலை உத்தியோகத்தர் … Read more

தனியார் பிரிவுகளில் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு தேர்தலின் போது வாக்களிப்பதற்கு விடுமுறை

தனியார் பிரிவுகளில் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு தேசிய மட்டத்திலான தேர்தல்களின் போது சம்பளம் அல்லது சொந்த லீவுகள் இழப்பொன்றின்றி தமது வாக்கை அளிப்பதற்கு வசதியாக விடுமுறை வழங்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.  இது தொடர்பாக தேர்தல்கள் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கை பின்வருமாறு:  

இராணுவத் தளபதியின் இராணுவ தினச் செய்தி

நல்லிணக்க நடவடிக்கைகளை வலுப்படுத்துவதற்கும், நாட்டின் பொருளாதார, சமூக மற்றும் கலாசார விழுமியங்களைப் பாதுகாப்பதற்கும் தீவிரமாக பங்களிக்கும் அதேவேளை, தேசத்தைப் பாதுகாப்பதில் இலங்கைப் படையினர் தொழில் ரீதியாகவும் செயற்பாட்டில் இருக்க வேண்டும் என இராணுவத் தளபதி தனது 75ஆவது இராணுவ தினச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். தளபதியின் இராணுவ தின முழு செய்தி பின்வருமாறு: தேசத்தின் பாதுகாவலராக இலங்கை இராணுவம் 2024 ஒக்டோபர் மாதம் 10 ம் திகதி அபிமானமிக்க 75 வது ஆண்டு நிறைவை கொண்டாடும் இவ்வேளையில் இராணுவ … Read more

2024 ஆம் ஆண்டிற்கான ஜனாதிபதி ஊடக விருது விழா…

நாட்டில் சிறந்த ஊடகக் கலாச்சாரத்தை கட்டியெழுப்புவதற்காகவும், ஊடகவியலாளர்களினால் மேற்கொள்ளப்படும் பணிகளைப் பாராட்டுவதற்கும் அவர்களை ஊக்குவிப்பதற்கும் 2024 ஆம் ஆண்டிற்கான ஜனாதிபதி ஊடக விருது விழாவை இரண்டாவது முறையாகவும் நடத்துவதற்கு புத்தசாசனம், சமயம், மற்றும் கலாச்சார அலுவல்கள், தேசிய ஒருமைப்பாடு, சமூக பாதுகாப்பு மற்றும் வெகுஜன ஊடக அமைச்சு தயாராகி வருகிறது. செய்தித்தாள்கள், வானொலி, தொலைக்காட்சி, இணையதளங்கள், ஊடக ஆய்வு மற்றும் பாடசாலை ஊடகம் ஆகிய துறைகளுக்கு 50 விருதுகளும், ஊடகத்துறையில் தனித்துவமான பணியை ஆற்றிய 04 நிபுணர்களுக்கு … Read more

பல்வேறு தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்கள் ஜனாதிபதியுடன் இன்று சந்திப்பு

இரண்டு தூதுவர்கள், மூன்று உயர்ஸ்தானிகர்கள் மற்றும் ஆறு நாடுகளின் பிரதிநிதிகளுடன் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று (10) உயர்மட்ட கலந்துரையாடலில் ஈடுபடுகிறார். இலங்கை மற்றும் அந்த நாடுகளுடனான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது மற்றும் உலகளாவிய கூட்டுச் செயற்பாடுகளை மேம்படுத்துவது என்ற தற்போதைய அரசாங்கத்தின் கொள்கைக்கு இணங்க இந்த சந்திப்புகள் முன்னெடுக்கப்படுகின்றன. சவூதி அரேபியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், துருக்கி, பலஸ்தீனம் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளின் தூதுவர்கள், உயர்ஸ்தானிகர்கள் மற்றும் பிரதிநிதிகள் பல்வேறு துறைகளில் இலங்கைக்கும் தமது நாடுகளுக்கும் … Read more

சவூதி அரேபிய தூதுவருக்கும் ஜனாதிபதிக்குமிடையில் சந்திப்பு

இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார உறவுகளை மேம்படுத்துதல் மற்றும் இலங்கை தேயிலை ஏற்றுமதியை ஊக்குவித்தல் தொடர்பில் விசேட கவனம் இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் காலித் ஹமூத் நசார் அல்தசம் அல்கஹ்தானி (Khalid Hamoud Nasser Aldasam Alkahtani) இன்று (10) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை சந்தித்தார். ஜனாதிபதித் தேர்தலில் அநுரகுமார திசாநாயக்கவின் வெற்றியை சவூதி அரேபியாவின் மன்னர் சல்மான் பின் அப்துல் அஸீஸின் வாழ்த்துச் செய்தியை, தூதுவர் அல்கஹ்தானி ஜனாதிபதியிடம் கையளித்தார். … Read more

பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை சந்தித்தார்

கல்வித் துறையில் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை வளர்ப்பது தொடர்பில் கவனம் இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) பஹீம் உல் அஸீஸ் ஹி (Major General (Retd) Faheem Ul Aziz HI (M) இன்று (10) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை சந்தித்தார். கடந்த ஜனாதிபதித் தேர்தலில் வெற்றியீட்டிய ஜனாதிபதிக்கு தனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்த பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர், இலங்கையுடனான உறவுகளை வலுப்படுத்துவதற்கு பாகிஸ்தானின் அர்ப்பணிப்பையும் வலியுறுத்தினார். இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான … Read more

பதில் பிரதம நீதியரசர் ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம்..

இலங்கையின் பதில் பிரதம நீதியரசராக உயர் நீதிமன்ற நீதிபதி முர்து நி)ரூபா பிதுஷினி பெர்னாண்டோ இன்று (10) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் தமது வாக்கை அளிப்பதற்காக விடுமுறை

தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் தமது வாக்கை அளிப்பதற்காக விடுமுறை வழங்குவது தொடர்பாக உள்ளூர் அதிகார சபைகள் தேர்தல்கள் கட்டளைச் சட்டத்தின் (262 ஆம் அத்தியாயம்) 84 அ ஆம் பிரிவின் ஏற்பாடுகள் தொழிலாளர்களினதும் தகவலுக்காக தேர்தல்கள் ஆணைக்குழு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.  இது தொடர்பாக தேர்தல்கள் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:

தபால் மூல வாக்களிப்பிற்கான விண்ணப்பங்கள் கோரும் பணி இன்று நள்ளிரவுடன் நிறைவு

தபால் மூல வாக்களிப்பிற்கான விண்ணப்பங்கள் கோரும் பணி இன்று (10) நள்ளிரவு 12.00 மணியுடன் நிறைவடையும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. கடந்த ஒக்டோபர் 08 நள்ளிரவு 12.00 மணியுடன் முடிவடையவிருந்த பாராளுமன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளும் திகதி, தபால்களில் ஏற்படக்கூடிய தாமதங்கள் மற்றும் ஆணைக்குழுவிடம் விடுக்கப்பட்ட கோரிக்கைகளை கருத்திற்கொண்டு, அவற்றை ஏற்றுக்கொள்வதை நீடிக்க தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. அதன்படி, விண்ணப்பங்களை இன்று நள்ளிரவு 12.00 மணிக்கு முன்பதாக அந்தந்த மாவட்ட தேர்தல் … Read more