தபால் மூலம் வாக்களிக்க எதிர்பார்த்துள்ள வாக்காளர்களுக்கான விசேட அறிவித்தல்..

2024 நவம்பர் 14ஆம் திகதி நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் தபால் மூலம் வாக்களிக்க எதிர்பார்க்கும் வாக்காளர்களுக்கு தேர்தல் ஆணைக்குழு விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. ஆணைக்குழு வெளியிட்டு;ள்ள அறிக்கை பின்வருமாறு..

வியட்நாம் தூதுவருக்கும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் இடையில் சந்திப்பு

வியட்நாமிற்கும் இலங்கைக்கும் இடையிலான நேரடி விமான சேவைகளை மேம்படுத்துவதில் கவனம் இலங்கைக்கான வியட்நாம் தூதுவர் டிரின் தி டெம் (Trinh Thi Tam) இன்று (09) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை சந்தித்தார். இலங்கையின் புதிய ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டதற்காக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கு தனதும், வியட்நாம் அரச தலைவர் மற்றும் அரசாங்கத்தினதும் வாழ்த்துக்களைத் தெரிவித்த தூதுவர், இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்தி முன்னோக்கிச் செல்வதற்கு தனது சாதகமான கருத்துக்களை வெளிப்படுத்தினார். நேரடி வெளிநாட்டு … Read more

ஜனாதிபதிக்கும் சுங்கத் திணைக்களம் மற்றும் உள்நாட்டு இறைவரி திணைக்கள சிரேஷ்ட அதிகாரிகளுக்கும் இடையில் சந்திப்பு

வருமானம் ஈட்டல் மற்றும் செயல்பாட்டுத் திறனை மேம்படுத்துவதற்கான மூலோபாயத் திட்டமிடல் குறித்து அவதானம் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் இலங்கை சுங்கத் திணைக்களம் மற்றும் உள்நாட்டு இறைவரி திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரிகளுக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று (09) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. அரசாங்கத்தின் விரிவான பொருளாதார மற்றும் ஒழுங்குபடுத்தல் மறுசீரமைப்புகளுக்கு ஏற்ப இந்த இரண்டு திணைக்களங்களிலும் வருமானம் ஈட்டல் மற்றும் செயல்பாடுகளின் செயல்திறனை மேம்படுத்துவதற்கான மூலோபாய திட்டங்கள் குறித்து இங்கு கலந்துரையாடப்பட்டது. வருமான முகாமைத்துவம் மற்றும் வரி அறவீடுகளில் … Read more

நாட்டின் பல பிரதேசங்களில் பல இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழை..

சில இடங்களில் 75 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி.. இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு, தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. 2024 ஒக்டோபர் 09ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு 2024 ஒக்டோபர் 09ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது. மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் … Read more

இந்திய பிரதி உயர் ஸ்தானிகர் பாதுகாப்பு செயலாளரை சந்தித்தார்

பிரதி இந்திய உயர்ஸ்தானிகர் கலாநிதி சத்தியஞ்சல் பாண்டே அவர்கள் நேற்று (அக் 08) பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துயகோந்தாவை (ஓய்வு) சந்தித்தார். இந்த சந்திப்பு கோட்டே, ஸ்ரீ ஜயவர்தனபுரவில் உள்ள பாதுகாப்பு தலைமையக வளாகத்தில் இடம்பெற்றது. இந்திய இராஜதந்திரிக்கு பாதுகாப்புச் செயலாளரால் அன்பான வரவேற்பு அளிக்கப்பட்டதுடன், பரஸ்பர நலன் மற்றும் இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்கள் தொடர்பாக சுமுகமான கலந்துரையாடல் இடம்பெற்றது. இந்த சந்திப்பில் பாதுகாப்பு அமைச்சின் இராணுவ இணைப்பு அதிகாரி எயார் வைஸ் … Read more

கடற்றொழிலாளர்களுக்கு மானியம் வழங்குவதற்கான முதல் கட்ட பணிகளை ஆரம்பிக் நடவடிக்கை..

கடற்றொழில் அமைச்சின் ஊடாக கடற்றொழிலாளர்களுக்கு மானியம் வழங்குவதற்கான முதல் கட்ட பணிகளை ஆரம்பிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக புத்தசாசன, மத கலாசார அலுவல்கள், தேசிய ஒருமைப்பாடு, சமூக பாதுகாப்பு மற்றும் ஊடகத்துறை அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (08) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். கடந்த காலங்களில் எரிபொருள் விலையேற்றத்தினால் கடற்றொழிலாளர்கள் மிகவும் பாதிக்கப்பட்டதாகவும், டீசல் மற்றும் மண்ணெண்ணெய் விலை குறைக்கப்பட்டமை … Read more

வெடிபொருட்களை பயன்படுத்தி பிடித்ததாக சந்தேகிக்கப்படும் சந்தேகநபர்கள் கைது

திருகோணமலை நிலாவெளி கடற்கரைப் பகுதியில் 2024 ஒக்டோபர் 07 ஆம் திகதி இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது வெடிபொருட்களை பயன்படுத்தி சட்டவிரோதமாக பிடிபட்டதாக சந்தேகிக்கப்படும் 1084 கிலோகிராம் மீன்களுடன் இரண்டு சந்தேகநபர்கள் (02) மற்றும் ஒரு டிங்கி படகு (01) கைப்பற்றப்பட்டது. வணிக வெடிபொருட்களைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படுகின்ற சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளால் கடல் சுற்றுச்சூழல் அமைப்புக்கு ஏற்படும் சேதத்தைத் தடுக்க கடற்படை பல நடவடிக்கைகளை மேற்கொள்கிறது. அதன்படி, 2024 ஒக்டோபர் மாதம் 7 ஆம் … Read more

கொழும்பு – பதுளை புகையிரதம் எல்லே வரை மாத்திரமே பயணிக்கும்…

இந்திய – இலங்கை சினிமா நிகழ்ச்சித் திட்டத்தின் ஒளிப்பதிவு நடவடிக்கைகள் காரணமாக இன்று (09) முதல் எதிர்வரும் 15ஆம் திகதி வரை மலை நாட்டு புகையிரதப் பாதையில் கொழும்பிலிருந்து பதுளை வரை பயணிக்கும் புகையிரதம் எல்லே புகையிரத நிலையம் வரை மாத்திரமே பயணிக்கும் என புகையிரத திணைக்களம் அறிவித்துள்ளது. எல்லேயிலிருந்து பதுளை வரையும், பதுளையிலிருந்து எல்லே வரை புகையிரதத்தில் பயணிப்பவர்களுக்காக இலங்கை போக்குவரத்து சபையின் பதுளை டிப்போ ஊடாக விசேட பஸ் சேவை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. பஸ் சேவை … Read more

இலங்கை கடற்படை மரீன்ஸ் படையணியின் ‘ப்ளூ வேல் 2024’ களமுனை பயிற்சி ஆரம்பமானது

இலங்கை கடற்படையின் (SLN) மரீன்ஸ் படையணியினரால் மூன்றாவது (3வது) முறையாக ஏற்பாடு செய்யப்பட்ட ‘ப்ளூ வேல் 2024’ (Blue Whale 2024), களமுனை பயிற்சி திருகோணமலை, சம்பூரில் உள்ள விதுர முகாமில் அக்டோபர் 05 ஆம் திகதி ஆரம்பமானது. இலங்கை கடற்படை ஊடக தகவல்களுக்கமைய இந்த ஆண்டு பாகிஸ்தான், மாலத்தீவு மற்றும் பங்களாதேஷ் கடற்படைகளை பிரதிநிதித்துவப்படுத்தி 25 கடற்படை வீரர்கள் இதில் கலந்துக்கொன்கின்றனர். மேலும், இலங்கை கடட்படையின் SLNS ஷக்தி கப்பல், கடலோர ரோந்துக் படகுகள், மற்றும் … Read more

விவசாயிகளுக்கு உர மானியம் 

நெல் விவசாயிகளுக்கான 25,000 ரூபா உர மானியம் வழங்கும் திட்டம் எதிர்வரும் திங்கட்கிழமையிலிருந்து ஆரம்பிக்கப்படும் என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.  நேற்று  (08) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பிலேயே அமைச்சரவைப் பேச்சாளர் விஜித ஹேரத் (Vijitha Herath) இவ்வாறு தெரிவித்துள்ளார். குறித்த வேலைதிட்டமானது அம்பாறை (Ampara) மாவட்டத்திலிருந்து  ஆரம்பமாகுமென குறிப்பிட்டுள்ளார்.  அதன் பின்னர் பொலன்னறுவை, அநுராதபுரம், மஹியங்கனை மற்றும் மகாவலி பிரதேசங்களில் உள்ள விவசாயிகளுக்கு இதனை வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்படும்.” … Read more