மதுவரி ஆணையாளர் நாயகம் பதவிக்கான நியமனம்

இலங்கை மதுவரித் திணைக்களத்தின் மதுவரி ஆணையாளர் நாயகம் பதவிக்கு ஜனாதிபதி செயலத்தில் ஜனாதிபதியின் மேலதிக செயலாளராக (நிறுவன ஒருங்கிணைப்பு ii) சேவையாற்றும் உள்நாட்டு இறைவரி சேவையின் விசேடதர அலுவலர் திரு. யு.டி.என். ஜயவீர அவர்களை உடனடியாக அமுலாகும் வகையில் நியமிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது. இலங்கை மதுவரித் திணைக்களம் அரசின் பிரதான வருமான சேகரிப்பு நிறுவனமாகும். மேற்குறித்த நிறுவனத்தின் வினைத்திறன் மற்றும் நல்லாளுகை அரச வருமானத்தில் நேரடியாக தாக்கம் செலுத்துகிறது. மேற்குறித்த திணைக்களத்தின் வருமான இலக்கை அடையும் … Read more

இலங்கை பொருளாதார அபிவிருத்திக்கு அமெரிக்கா உதவி

இலங்கையின் பொருளதாரத்தை பலப்படுத்த தேவையான எந்தவொரு ஒத்துழைப்பையும் வழங்கத் தயாரென அமெரிக்கா உறுதியளித்துள்ளது. இலங்கையின் ஏற்றுமதி வர்த்தக பொருளாதாரத்தை உருவாக்குவதற்கு அவசியமான ஒத்துழைப்பை வழங்கத் தயாரென இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் தெரிவித்தார். ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி சனத் நந்திக குமாநாயக்க மற்றும் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று இன்று (08) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. இதன்போது ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்து அமெரிக்க ஜனாதிபதி … Read more

தபால் மூல வாக்காளர் விண்ணப்பங்கள் ஒக்டோபர் 10ஆம் திகதி வரை நீடிப்பு

2024 பாராளுமன்றத் தேர்தலில் அஞ்சல் மூலம் வாக்களிக்க தகுதி பெற்றவர்களுக்கான விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் இறுதித் திகதி ஒக்டோபர் மாதம் 8ஆம் திகதி நள்ளிரவு 12 மணியுடன் முடிவடையவிருந்த போதிலும், அஞ்சலில் ஏற்படக்கூடிய தாமதங்களையும் ஆணைக்குழுவுக்கு விடுக்கப்பட்டுள்ள கோரிக்கைகளையும் கருத்தில் கொண்டு, அஞ்சல் மூலம் வாக்களிக்க எதிர்பார்த்திருக்கும் விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் இறுதித் திகதி ஒக்டோபர் மாதம் 10ஆம் திகதி நள்ளிரவு 12 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளது என்று தேர்தல் ஆணைக்குழு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் … Read more

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் வாழ்த்து

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தனது மனப்பூர்வமான வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அமெரிக்காவுக்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால உறவுகளை நினைவு கூர்ந்துள்ள ஜோ பைடன், முழு அமெரிக்க மக்களின் சார்பாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளதோடு, இலங்கையின் ஜனநாயகத்தை மேலும் பலப்படுத்துவதன் மூலம் கடந்த ஜனாதிபதித் தேர்தல் மற்றும் ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னரான காலப்பகுதியை அமைதியான முறையில் முன்னெடுத்தமைக்கும் தனது பாராட்டுக்களையும் தெரிவித்தார். “இந்த தேர்தல் இலங்கையின் ஜனநாயக நிறுவனங்களின் பலத்தையும்,ஜனநாயகத்தின் அடிப்படைகளான … Read more

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான ஆரம்பகட்ட பணிகள் குறுகிய காலத்திற்குள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன – அமைச்சரவைப் பேச்சாளர் விஜித ஹேரத்

ஈஸ்டர் தாக்குதலுக்கு வழிவகுத்தவர்களுக்கு எதிராக கண்டிப்பாக சட்டம் அமுல்படுத்தப்படும் என்பதாகவும், ஜனாதிபதி ஆட்சிக்கு வந்த குறுகிய காலத்திலேயே அதற்கான ஆரம்பகட்ட பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்றும் வெகுஜன ஊடகத்துறை, புத்தசாசன, மத கலாசார அலுவல்கள், தேசிய ஒருமைப்பாடு மற்றும் சமூக பாதுகாப்பு அமைச்சர், அமைச்சரவைப் பேச்சாளர்; விஜித ஹேரத் தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (08) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இங்கு தொடர்ந்தும் … Read more

இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்கு மற்றும் வெங்காயத்திற்கு வரி விதிப்பதன் மூலம் உள்நாட்டு அறுவடைக்கு நியாயமான விலை – அமைச்சரவைப் பேச்சாளர்

இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்கு மற்றும் வெங்காயம் மீதான வரி விதிப்பினால் உள்நாட்டு விவசாயிகள் தனது விளைச்சலை நியாயமான விலையில் விற்பனை செய்யும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக வெகுஜன ஊடகத்துறை, புத்தசாசன, மத கலாசார அலுவல்கள், தேசிய ஒருமைப்பாடு மற்றும் சமூக பாதுகாப்பு அமைச்சர், அமைச்சரவைப் பேச்சாளர்; விஜித ஹேரத் தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (08) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். … Read more

அமைச்சரவை அங்கீகாரத்துக்கமைய சில நியமனங்களை இரத்துச் செய்தல்

அமைச்சரவை அங்கீகாரத்துக்கமைய தேசிய மக்கள் சபை செயலகம்’ மற்றும் ‘விவசாய நவீனமயப்படுத்தல் நிகழ்ச்சித்திட்டம்’ ஆகியவற்றை அமுல்படுத்துவதற்காக ஒப்பந்த அடிப்படையில் ஆட்சேர்ப்புச் செய்யப்பட்டுள்ள அலுவலர்கள் / ஆலோசகர்களின் சேவையை 2024-09-30 திகதியிலிருந்து அமுலாகும் வகையில் முடிவுறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேற்குறித்த அலுவலகங்கள் மற்றும் நிகழ்ச்சித்திட்டங்கள் மூலம் எதிர்பார்க்கப்படும் கருமங்களை தொடர்புடைய அமைச்சுக்கள் ஊடாக அமுல்படுத்தவதற்கான இயலுமை இருப்பதனால், அதற்காக ஒப்பந்த அடிப்படையில் ஆட்சேர்ப்புச் செய்யப்பட்டுள்ள அலுவலர்கள் / ஆலோசகர்களின் சேவையை முடிவுறுத்த நேற்று (08.10.2024) நடைபெற்ற அமைச்சரவையில் ஒப்புதலை … Read more

பாராளுமன்றத் தேர்தல் – 2024 – தபால் மூல வாக்களிப்பிற்காக விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் இறுதி நாள் இன்று

1981 ஆம் ஆண்டின் 1ஆம் இலக்க பாராளுமன்ற தேர்தல் சட்டத்தின் 26 ஆம் பிரிவிற்கு இணங்க இப் பாராளுமன்றத் தேர்தலில் அனைத்து அரச ஊழியர்களும் அஞ்சல் மூலம் வாக்களிப்பதற்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது. அதன்படி தபால் மூல வாக்களிப்பிற்காக விண்ணப்பங்கள் இன்று (08-10-2024) நள்ளிரவு 12.00மணி வரை ஏற்றுக்கொள்ளப்படும் என தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இதுவரை தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியாதவர்கள் தமது விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்து அருகில் உள்ள … Read more

காலநிலை மாற்றங்களால் அதிகரிக்கும் விளைவுகள் மூலம் இடர்களுக்கு ஆளாகக்கூடிய இலங்கை இந்திய சமூகங்களின் தாங்குதிறனை பலப்படுத்துவதற்கான பிராந்திய கருத்திட்டம்

சுற்றாடல், வனசீவராசிகள், வனவளங்கள், நீர் வளங்கள், பெருந்தோட்டம் மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சு, ஐக்கிய நாடுகள் சபையின் உலக உணவுத் திட்டத்துடன் இணைந்து காலநிலை மாற்றங்களின் அதிகரிக்கின்ற விளைவுகள் மூலம் இடர்களுக்கு ஆளாகக்கூடிய இலங்கை மற்றும் இந்திய சமூகங்களின் தாங்குதிறனை பலப்படுத்துவதற்கான கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை இலங்கை மற்றும் உலக உணவுத் திட்டத்திற்கும் இடையில் கையொப்பமிடுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. சுற்றாடல், வனசீவராசிகள், வனவளங்கள், நீர் வளங்கள், பெருந்தோட்டம் மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் … Read more

எல்பிட்டிய பிரதேச சபை தேர்தல் : வலிமையிழப்பொன்றிற்கு உட்பட்ட வாக்காளர் ஒருவர் வாக்குச்சீட்டை அடையாளமிடுவதற்கு வழங்கப்பட்டுள்ள சட்ட ஏற்பாடுகள்..

வலிமையிழப்பொன்றிற்கு உட்பட்ட வாக்காளர் ஒருவருக்கு வாக்களிப்பு நிலையத்தில் வாக்குச்சீட்டை அடையாளமிட்டுக் கொள்வதற்கு உதவியாளர் ஒருவரை உடனழைத்துச் செல்வதற்கு தேவையான சட்ட ஏற்பாடுகள் குறித்து தேர்தல் ஆணைக்குழு அறிக்கை ஒன்றை விடுத்துள்ளது. ஆணைக்குழுவினால் வெளியிட்டுள்ள அறிக்கை..