எல்பிட்டிய பிரதேச சபை தேர்தலில் வாக்குரிமை பெற்றுள்ள அனைத்து வாக்காளர்களுக்கும் அஞ்சல் வாக்காளர்களுக்கும், தேர்தல் ஆணைக்குழு வித்துள்ள அறிக்கை

எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலில் வாக்காளர்கள் எவ்வாறு வாக்குரிமையை பயன்படுத்த வேண்டும் என்பது குறித்து தேர்தல் ஆணைக்குழு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. ஆணைக்குழுவினால் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு..  

அரசாங்கத்தின் மறுசீரமைப்புக்களை செயற்படுத்த உலக வங்கி வேலைத்திட்டத்தின் இரண்டாம் கட்டத்திற்கு அமைவாக 200 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வழங்க அனுமதி

இலங்கையின் பொருளாதார முன்னேற்றம் மற்றும் பொருளாதார மறுசீரமைப்பு வேலைத்திட்டங்களுக்கு ஒத்துழைக்கும் வகையில் உலக வங்கி குழுமத்தின் (WBG) சர்வதேச அபிவிருத்திச் சங்கத்தினால் (IDA) மேலும் 200 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதற்கு அமைவான ஒப்பந்தத்தில் கைசாத்திடும் நிகழ்வு இன்று (07) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றதோடு, இந்த ஒப்பந்தத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க முன்னிலையில் இலங்கை அரசாங்கத்தின் நிதி அமைச்சர் ​கே.எம்.மஹிந்த சிறிவர்தன மற்றும் உலக வங்கியின் இலங்கைக்கான பணிப்பாளர் டேவிட் சிஸ்லேன் … Read more

ஆசிய அபிவிருத்தி வங்கியின் பிரதிநிதிகள் ஜனாதிபதியுடன் சந்திப்பு – பொருளாதார அபிவிருத்திக்கு தொடர்ந்தும் உதவி

இலங்கையின் சுற்றுலா,வலுசக்தி மற்றும் சிறு தொழில்துறைகளின் அபிவிருத்திக்கு நிதி உதவி வழங்குவதாக ஆசிய அபிவிருத்தி வங்கி உறுதியளித்துள்ளது. ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, ஆசிய அபிவிருத்தி வங்கியின் இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி டகபூமி கடோனோவை (Takafumi Kadono) இன்று (07) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார். இலங்கையின் பொருளாதார அபிவிருத்திக்காக ஆசிய அபிவிருத்தி வங்கியினால் இதுவரையில் முன்னெடுக்கபட்டுவரும் அனைத்து ஒப்பந்தங்களும் அவ்வண்ணமே முன்னெடுத்துச் செல்லப்படும் என்றும், ஆசிய அபிவிருத்தி வங்கியின் இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி டகபூமி கடோனோ … Read more

வடமாகாணத்தில் கொண்டாடப்பட்ட  உலக சிறுவர் தினம்

‘’பிள்ளைகளை பாதுகாப்போம் சமமாக நடத்துவோம்’’ எனும் கருப்பொருளில் வட மாகாண நன்னடத்தை பாதுகாவல் சிறுவர் கவனிப்பு சேவைகள் திணைக்களத்தால் சிறுவர் தின நிகழ்வுகள் யாழ்ப்பாணம் இலங்கை வேந்தன் மண்டபத்தில் 05.10.2024 திகதி காலை இடம் பெற்றது.  இந்த நிகழ்வின் பிரதம விருந்தினராக கலந்துகொண்ட வடக்கு மாகாண ஆளுநர் திரு நாகலிங்கம் வேதநாயகன் கருத்து தெரிவிக்கும் போது சிறுவர்களுக்கான உரிமைகளில் சுகாதாரம், கல்வி, பாதுகாப்பு, போன்றன முக்கியமானவை. அதனை வடக்கு மாகாணத்தில் இயங்குகின்ற சிறுவர் அபிவிருத்தி நிலையங்கள் சிறந்த முறையில் … Read more

பாராளுமன்றத் தேர்தல் 2024 : வேட்பாளர்களின் சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் பற்றிய தகவல்களை வெளிப்படுத்தல்..

2024.11.14 ஆம் திகதி நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கு பெயர் குறித்த நியமனங்களைக் கையளிக்கும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளதும் சுயேச்சைக் குழுக்களது அனைத்து வேட்பாளர்களினாலும் தேர்தல் தினம் பிரகடனம் செய்யப்பட்ட தினத்தில் தமது சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் பற்றிய வெளிப்படுத்தல்களை உரிய தெரிவத்தாட்சி அலுவலருக்கு பெயர் குறித்த நியமனப்பத்திரங்களுடன் ஒப்படைக்க வேண்டுமென்று தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. பெயர் குறித்த நியமனப்பத்திரத்துடன் சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் பற்றிய தகவல்களை வெளிப்படுத்தாமல் இருப்பது தண்டனைக்குரிய குற்றம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது … Read more

150வது உலக அஞ்சல் தினத்தை முன்னிட்டு தேசிய முத்திரைக் கண்காட்சி

150வது உலக அஞ்சல் தினத்தை முன்னிட்டு, நாளை (08) முதல் ஒக்டோபர் 12ஆம் திகதி வரை தேசிய முத்திரைக் கண்காட்சி ஒன்று இடம்பெறவுள்ளது. இக்கண்காட்சி நடைபெறும் நாட்களில் காலை 09.00 மணி முதல் மாலை 06.00 மணி வரை தபால் தலைமையகத்தில் நடைபெற தபால் திணைக்களம் ஏற்பாடு செய்துள்ளது. புத்தசாசனம், மதம் மற்றும் கலாச்சார அலுவல்கள், தேசிய ஒருமைப்பாடு, சமூக பாதுகாப்பு மற்றும் ஊடகத்துறை அமைச்சின் செயலாளர் ரஞ்சித் ஆரியரத்ன தலைமையில் இக் கண்காட்சி நடைபெறவுள்ளது. அதன்படி, … Read more

சில மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை 

சில மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது.  இந்த எச்சரிக்கை இன்று (07) காலை 9.30 மணி முதல் நாளை இரவு 9.30 மணி வரை அமுலில் இருக்கும் என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.  இதன்படி, காலி மாவட்டத்தின் நாகொட, எல்பிட்டிய, களுத்துறை மாவட்டத்தின் வல்லாவிட்ட ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு செம்மஞ்சல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  அத்துடன், காலி மாவட்டத்தின் நயாகம, கேகாலை மாவட்டத்தின் தெஹியோவிட்ட, மாத்தறை மாவட்டத்தின் … Read more

இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக சனத் ஜயசூரிய நியமனம்..

இலங்கை தேசிய அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளராக முன்னாள் கிரிக்கெட் தலைவர் சனத் ஜயசூரிய நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்தியா, இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்துக்கு எதிரான சுற்றுப்பயணங்களின் போது இலங்கை அணியின் இடைக்கால தலைமைப் பயிற்றுவிப்பாளராக சனத் ஜயசூரிய பணியாற்றியதோடு, இலங்கை அணியின் செயற்பாடுகளை கருத்திற் கொண்டு இலங்கை கிரிக்கெட் செயற்குழு இந்த முடிவை எடுத்துள்ளது. இந்த நியமனம் 2024 ஒக்டோபர் மாதம் 1ஆம் திகதி முதல் 2026 மார்ச் மாதம் 31ஆம் … Read more

பாராளுமன்றத் தேர்தல் 2024 : அனைத்து அரச ஊழியர்களும் அஞ்சல் மூலம் வாக்களிப்பதற்கு விண்ணப்பிக்க வேண்டும்

1981 ஆம் ஆண்டின் 1ஆம் இலக்க பாராளுமன்ற தேர்தல் சட்டத்தின் 26 ஆம் பிரிவிற்கு இணங்க இப் பாராளுமன்றத் தேர்தலில் அனைத்து அரச ஊழியர்களும் அஞ்சல் மூலம் வாக்களிப்பதற்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது. மேலும், அஞ்சல் மூலம் வாக்களிப்பதற்கு விண்ணப்பிக்காதிருத்தல் அல்லது சில குறைபாடுகளின் காரணமாக விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படல் தேர்தல் கடமைகளில் இருந்து விடுபடுவதற்கான ஒரு காரணமாக அமையாது என்றும் தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இது குறித்து தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ள ஊடக … Read more

அனைத்து வேட்பாளர்களினதும் சொத்து, பொறுப்புக்கள் பற்றிய வெளிப்படுத்தல்களை வழங்கும் தேவைப்பாடு 

2024.11.14 ஆம் திகதி நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கு பெயர் குறித்த  நியமனங்களைக் கையளிக்கும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளதும் சுயேச்சைக் குழுக்களது அனைத்து வேட்பாளர்களினாலும்  தேர்தல் தினம் பிரகடனம் செய்யப்பட்ட தினத்தில் தமது சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் பற்றிய வெளிப்படுத்தல்களை உரிய தெரிவத்தாட்சி அலுவலருக்கு பெயர் குறித்த நியமனப்பத்திரங்களுடன் ஒப்படைக்க வேண்டுமென்று தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.  இது தொடர்பாக தேர்தல்கள் ஆணைக்குழுவினால் இன்று (07.10.2024) வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கை பின்வருமாறு?