பல்வேறு அரச நிறுவனங்களில் இருந்து ஜனாதிபதி செயலகத்திற்கு பெறப்பட்டிருந்த வாகனங்கள் மீண்டும் அந்த நிறுவனங்களிடம் கையளிப்பு

கடந்த காலங்களில் அமைச்சுகள், திணைக்களங்கள் உள்ளிட்ட பல்வேறு அரச நிறுவனங்களில் இருந்து ஜனாதிபதி அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்ட வாகனங்கள் ஜனாதிபதி அலுவலகத்திற்கு அருகில் வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்த வளாகத்தில் வைத்து இன்று (01) பிற்பகல் அந்தந்த நிறுவனங்களுக்கே மீண்டும் கையளிக்கப்பட்டன. இதன்போது 19 வாகனங்களை மீள கையளிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்ததோடு, அவற்றில் 15 வாகனங்கள், முன் அறிவித்தலுக்கமைய வருகை தந்திருந்த குறித்த நிறுவனங்களின் அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டன. அதன்படி, வீதி அபிவிருத்தி அதிகார சபையின் 8 வாகனங்ளும், நிதி அமைச்சின் … Read more

பண்டாரநாயக்க விமான நிலைய அபிவிருத்தியின் இரண்டாம் கட்டம் மற்றும் ரூபவாஹினி டிஜிட்டல் ஔிபரப்பு திட்டங்கள் விரைவில்

ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு முகவர் நிறுவனத்தின் தலைமை பிரதிதிநிதி யாமோடா டெட்சூயா (YAMADA TETSUYA) உள்ளிட்ட சிரேஷ்ட பிரதிநிதிகள் குழுவினர் இன்று (01) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவை சந்தித்தனர். ஜயிக்கா நிறுவனத்தினால் இலங்கையில் முன்னெடுக்கப்பட்டு வரும் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய அபிவிருத்தி திட்டத்தின் இரண்டாம் கட்டம் மற்றும் தொலைக்காட்சி ஔிபரப்பை டிஜிட்டல் மயமாக்குதல் போன்ற வேலைத்திட்டங்களை விரைவில் ஆரம்பிப்பது குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டது. ஜயிக்கா (JICA) நிறுவனத்தின் … Read more

ரஷ்ய தூதுவருக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் சந்திப்பு: இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து கலந்துரையாடல்

இலங்கைக்கான ரஷ்யத் தூதுவர் லெவன் எஸ். ஜகார்யன் (Levan S. Dzhagaryan) இன்று (01) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை சந்தித்தார். இந்த சந்திப்பில் புதிதாக தெரிவான ஜனாதிபதி திசாநாயக்கவிற்கு தூதுவர் எஸ். ஜகார்யன் தனது வாழ்த்துகளைத் தெரிவித்ததுடன், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினின் தனிப்பட்ட வாழ்த்துச் செய்தியொன்றையும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கு வழங்கினார். ஜனாதிபதி அநுர திசாநாயக்கவின் தலைமையில் இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகள் மேலும் வலுவடையும் என எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி … Read more

பல பகுதிகளுக்கு நீர் விநியோகம் தடை..

கரஸ்னாகலை நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து நீரை விநியோகிக்கும் பிரதான குழாயின் திருத்தப் பணிகள் காரணமாக இன்று இரவு 10.00 மணி முதல் நாளை (02) இரவு 10.00 மணி வரை நீர் விநியோகம் தடைப்படும் என்று நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது. இதன்படி பஸ்யால, கலல்பிட்டிய, எல்லேருமுல்ல, வத்துபிட்டிவல, மாஒம்புல, அத்தனகல்ல, கொடகம, அலவல, ஊரபொல, திக்கந்த, வல்கம்முல மற்றும் மிடிகம்மான ஆகிய பகுதிகளுக்கு நீர் விநியோகம் நிறுத்தப்படவுள்ளது. நீர் விநியோகம் இடைநிறுத்தப்படுவதால் … Read more

இன்று நள்ளிரவு முதல் பஸ் கட்டணங்கள் குறைக்கப்படவுள்ளன

இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் பஸ் கட்டணங்கள் குறைக்கப்பட உள்ளன என்று தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிவித்துள்ளது. அதன்படி, 4.24 சதவீதத்தினால் பஸ் கட்டணங்கள் குறைக்கப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளது. இதற்கமைய, குறைந்தபட்ச பஸ் கட்டணம் 28 ரூபாவிலிருந்து 27 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளதாகவும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. திருத்தப்பட்ட புதிய பஸ் கட்டணங்கள்..

புதிய அமைச்சரவை பேச்சாளராக வெகுஜன ஊடகத்துறை அமைச்சர்..

அமைச்சரவைப் பேச்சாளராக புத்தசாசன, சமய மற்றும் கலாச்சார விவகாரங்கள், தேசிய ஒருமைப்பாடு, சமூகப் பாதுகாப்பு மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் விஜிதஹேரத் நியமிக்கப்பட்டுள்ளார். நேற்று (30.09.2024) நடைபெற்ற அiமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டு இவ்வாறு நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை புதிய அரசாங்கம் பதவிக்கு வந்ததன் பின்னர் அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (01) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் புத்தசாசன, சமய மற்றும் கலாச்சார விவகாரங்கள், தேசிய ஒருமைப்பாடு, சமூகப் பாதுகாப்பு மற்றும் வெகுசன ஊடக அமைச்சரும் … Read more

அரசியல்மயப்பட்டுள்ள கல்விமுறைமையை அதிலிருந்து விடுவிக்க வேண்டும்.

கல்வி பற்றிய நம்பிக்கையை கட்டியெழுப்புவது எமது அரசாங்கத்தின் பிரதான பொறுப்பாகும். தொழிலுக்காக மட்டுமன்றி நல்லொழுக்கமுள்ள சமூகத்தை உருவாக்கும் வகையில் கல்வி முறைமையில் சீர்திருத்தங்கள் கொண்டுவரப்பட வேண்டும். பிள்ளைகள் தரமான கல்வியை பெறுவதற்கு குடும்பத்தின் பொருளாதார நிலை தடையாக இருக்கக்கூடாது. மொத்த தேசிய உற்பத்தியில் 6% கல்விக்காக ஒதுக்கப்பட வேண்டும் என்று எமது கொள்கைத் திட்டத்தில் கூறப்பட்டுள்ளது. ஐந்து வருடங்களின் பின்னர், நாடளாவிய ரீதியில் உள்ள 396 தேசிய பாடசாலைகளின் அதிபர்கள் பங்குபற்றிய விசேட செயலமர்வொன்று (28) கொழும்பு … Read more

சிறுவர்களின் உலகத்தை நம் கரங்களினால் உருவாக்குவோம்.

உலகம் சிறுவர்களுக்கானது., அவர்களின் உலகத்தை நம் கரங்களினால் உருவாக்குவோம் என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அவர்கள் உலக சிறுவர் தின வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். ஏழ்மை, போசாக்குக் குறைபாடு, சுகாதாரம் மற்றும் சுகாதாரப் பாதுகாப்பு, கல்வியில் ஏற்றத்தாழ்வு, சமூக வாய்ப்புகளில் ஏற்றத்தாழ்வு, போதைப்பொருள், அத்துடன் தொழில் நுட்பத்தின் தவறான பயன்பாட்டிற்கு பலியாவது போன்றன இந்த மிலேனியத்தில் சிறுவர்கள் எதிர்கொள்ளும் சவால்களாக நாம் அடையாளம் கண்டுள்ளோம். மேலும், சிறுவர்களின் உளவியல் சமூக வளர்ச்சியைத் தடுக்கும் சமூக விளைவுகள் மற்றும் … Read more

பாராளுமன்றத் தேர்தல்- 2024 : அஞ்சல் வாக்காளர்களின் வசதி கருதி தேருநர் இடாப்புக்களை காட்சிப்படுத்தல்

2024 பாராளுமன்றத் தேர்தலுக்கான அஞ்சல் வாக்காளர்களின் வசதி கருதி தேருநர் இடாப்புக்டகளை காட்சிப்படுத்தல் தொடர்பாக தேர்தல் ஆணைக்குழு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பு பின்வருமாறு..

புதிய அமைச்சரவை முதன்முறையாக இன்று கூடுகிறது 

புதிய அமைச்சரவை இன்று (30) பிற்பகல் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தலைமையில் முதன்முறையாக கூடவுள்ளது. அங்கு சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளது, அமைச்சரவை கூட்டத்திற்கு பிறகு அது குறித்து ஊடகங்களுக்கு தெரிவிக்கப்படும்.