ஐஸ் போதைப் பொருள் மற்றும் ஹெரோயினுடன் நால்வர் கைது – கஹதுடுவை பொலிஸ் பிரிவு.

12.12.2024 அன்று இரவு வேளையில் கஹதுடுவை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மூனமலவத்த பிரதேசத்தில் கஹதுடுவை பொலிஸ் உத்தியோகத்தர்களால் சந்தேகத்திற்கிடமான முச்சக்கர வண்டியை பரிசோதனை மேற்கொண்ட போது ஐஸ் போதை பொருள் 5 கிராம் 140 மில்லிகிராமுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்கள் நுகேகொடை மற்றும் கிருலப்பனை பிரதேசத்தைச் சேர்ந்த 22 மற்றும் 25 வயதுடைய நபர்களாவர். மேலும், சந்தேக நபர்களிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்ட போது அவர்களிடமிருந்து பெற்றுக் கொள்ளப்பட்ட தகவலுக்கமைய மூனமலவத்த பிரதேசத்திலுள்ள வீடுடொன்றை … Read more

யாழ்ப்பாண மாவட்டத்தின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் தனது கடமையினை பொறுப்பேற்பு

யாழ்ப்பாணம் மாவட்டத்தின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவராக ஜனாதிபதி அவர்களினால் நியமிக்கப்பட்ட கடற்றொழில் நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தில் இன்று (13.12.2024) காலை 08.45 மணிக்கு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவராக உத்தியோகபூர்வமாகத் தமது கடமையினைப் பொறுப்பேற்றார். இந் நிகழ்வில் வட மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன்;, யாழ்ப்பாண மாவட்டத்தின் பாராளுமன்ற உறுப்பினர்களான கருணாநாதன் இளங்குமரன், வைத்திய கலாநிதி சண்முகநாதன் சிறிபவானந்தராஜா, ஜெயச்சந்திரமூர்த்தி றஜீவன், அரசாங்க அதிபரும் ஒருங்கிணைப்புக் குழுவின் … Read more

எந்த தரத்தில் இருப்பவராயினும் தவறு செய்திருந்தால் அதற்குரிய நடவடிக்கை எடுக்கப்படும் – ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வலியுறுத்தல்

“மக்கள் எம்மீது வைத்துள்ள நம்பிக்கை எந்த வகையிலும் பழுதடைவதற்கு இடமளியோம்” “எமது அரசாங்கத்தின் எந்த பொறுப்பை வகிப்பவர் தவறு செய்திருந்தாலும் நாம் நடவடிக்கை எடுப்போம்” அரச ஊடக பிரதானிகளுடன் இன்று (13) காலை நடைபெற்ற சந்திப்பின் போதே ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இதனைத் தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், “ஏழு தசாப்தங்களுக்கும் அதிகமாக இந்நாட்டு மக்கள் பல்வேறு அரசாங்கங்களை தெரிவு செய்தனர். பல அரசாங்கங்களை கவிழ்த்துள்ளனர். வரலாற்றில் முதல் முறையாக இம்முறை நாட்டு மக்கள் இரண்டு … Read more

தொற்றா நோயிலிருந்து எம்மைப் பாதுகாப்பதற்கான அறிவுரைகள்

‘ஓய்விற்கு முன்னர் ஆயத்தமாதல் தொடர்பான செயற்திறனான முதுமைப்பருவம் ‘ எனும் தலைப்பிலான செயலமர்வு யாழ்ப்பாணம் மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன்; தலைமையில் நேற்றைய தினம் (12.12.2024) மு.ப 9.00 மணிக்கு மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. ஓய்வுக் காலத்தில் உடலியல், உளவியல் நலம்’ தொடர்பாக யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை வைத்திய நிபுணர் த. பேரானந்தராஜா அவர்களால் கருத்துரை வழங்கப்பட்டது. அவர்தம் கருத்துரையில், மனிதனுடைய வாழ்வில் நோய்களானது இரண்டு வகையாக ஆதிக்கம் செலுத்தும் எனவும், அவை தொற்று … Read more

புனரமைக்கப்பட்ட கண்டி தலதா மாளிகை வளாகத்தில் அமைந்துள்ள பழைய அரண்மனை மற்றும் தொல்பொருளியல் அருங்காட்சியகம் பொதுமக்கள் பார்வைக்காக திறப்பு

புனரமைக்கப்பட்ட கண்டி தலதா மாளிகை வளாகத்தில் அமைந்துள்ள பழைய அரண்மனை மற்றும் தொல்பொருளியல் அருங்காட்சியகம் பொதுமக்கள் பார்வைக்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது அமெரிக்க அரசின் உதவியுடன் புணர் நிர்மாணிக்கப்பட்ட கண்டி தலதா மாளிகை வளாகத்தில் அமைந்துள்ள பழைய அரண்மனை மற்றும் தொல்பொருளியல் அருங்காட்சியகம் என்பன கடந்த 11ஆம் திகதி பொதுமக்கள் பார்வைக்காக திறந்து வைக்கப்பட்டது. இலங்கையில் உள்ள அமெரிக்க தூதுவர் ஜூலி ஜே. சங் (Julie J.Chung) மற்றும் புத்தசாசன, சமய மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் … Read more

பொலன்னறுவை மாவட்டத்தில் பிரதான அரிசி விநியோக நிறுவனங்களின்  செயற்பாடுகளை கண்காணிக்கும் நடவடிக்கை தொடர்கிறது

பொலன்னறுவை மாவட்டத்தில் பிரதான அரிசி விநியோக நிறுவனங்களின்  செயற்பாடுகளை கண்காணிக்கும் நடவடிக்கை தொடர்கிறது  பொலன்னறுவை மாவட்டத்தின் பிரதான அரிசி வழங்கும்  நிறுவனங்களினால் மேற்கொள்ளப்படும்  உற்பத்தி மற்றும் விநியோக செயற்பாடுகளை கண்காணிக்கும்  நடவடிக்கைகள் தொடர்ந்தும் இடம்பெறுவதாக பொலன்னறுவை மாவட்ட ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.   அன்றாட அரிசித் தேவையில்  நூற்றுக்கு 25 வீதமான அரிசியை பொலன்னறுவையின் பிரதான 9 விநியோக நிறுவனங்கள் ஊடாக   அன்றாடம் விநியோகிக்கப்பட்டு வருவதாக பாவனையாளர்கள் அலுவல்கள்  அதிகார சபையின் கண்காணிப்பிற்கு   இணங்க அறியக் … Read more

மருந்துத் தட்டுப்பாட்டை நிவர்த்திசெய்ய சர்வதேச நிறுவன வழிமுறைகள்

ஒட்டுமொத்த சுகாதார அமைப்பிலும், அவ்வப்போது ஏற்படும் மருந்துத் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்வதற்காக சர்வதேச நிறுவன வழிமுறைகள் ஆய்வு செய்யப்பட்டு வருவதாக சுகாதார மற்றும் வெகுசன ஊடகத்துறை பிரதி அமைச்சர் வைத்தியர் ஹங்சக விஜேமுனி தெரிவித்தார். கண்டி மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற, மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் கலந்துகொண்டு ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர்; மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்.. சுகாதாரத் துறையில் நிறுவன தொடர்புகள் இல்லாத காரணத்தினால் மருந்து விநியோக நடைமுறை தாமதமடைந்துள்ளது. மருந்து … Read more

எரிபொருள் தட்டுப்பாடு தொடர்பாக வீணாக அச்சம் கொள்ளத் தேவையில்லை – இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர்

எந்தவொரு எரிபொருள் நிரப்பு நிலையத்திலும் அல்லது எரிபொருள் தட்டுப்பாடு எக்காரணத்தைக் கொண்டும் இடம்பெறாது என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஜனக ராஜகருணா தெரிவித்தார். இன்று (12) அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற விசேட ஊடக சந்திப்பின் போது, ஊடகவியலாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதில் அளிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டார். அதன்படி நாட்டில் போதிய எரிபொருள் காணப்படுவதாகவும், நாட்டில் தொடர்ச்சியான எரிபொருள் விநியோகத்திற்காக அரசாங்கத்தின் நிறுவனமாக அந்தப் பொறுப்பை இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் ஏற்றுக்கொள்வதாகவும் … Read more

பிரான்ஸ் நாட்டின் ஐரோப்பா மற்றும் வெளியுறவுகள் தொடர்பான அமைச்சின் பொதுச் செயலாளர் மற்றும் பிரதமருக்கிடையிலான சந்திப்பு.

இலங்கைப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்கள் பிரான்சின் ஐரோப்பா மற்றும் வெளியுறவுகள் தொடர்பான அமைச்சின் பொதுச் செயலாளர் திருமதி Anne-Marie Descotes அவர்களை சந்தித்தார்.  டிசம்பர் 11ம் திகதி கொழும்பு பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்ற இச்சந்திப்பின்போது பிரான்ஸ் மற்றும் இலங்கைக்கு இடையிலான இருதரப்பு தொடர்புகளை வலுப்படுத்தல் பற்றி கலந்துரையாடப்பட்டது. இரு நாடுகளுக்கிடையிலான தொடர்புகளை பலப்படுத்துவதற்காக பிரான்ஸ் மேற்கொள்ளும் அர்ப்பணிப்புகள் பற்றி பொதுச்செயலாளர் Descotes அவர்கள் இங்கு விளக்கினார்.  அத்துடன் சமுத்திரவியல் ஆய்வு தொடர்பான பிராந்திய நிலைய … Read more

இவ்வருடம் சுங்கத் திணைக்களத்தின் ஊடாக 200 பில்லியனுக்கும் அதிகமான வருமானம்

2024ஆம் ஆண்டு  சுங்கத் திணைக்களத்தினூடாக 232 பில்லியன் வருமானத்தினை எதிர்பார்த்திருந்ததாகவும், 2024.11.30ஆம் திகதி வரை 200 பில்லியன்களுக்கும் அதிகமான வருமானத்தை ஈட்டியுள்ளதாக சுங்கத் திணைக்களம் அறிவித்துள்ளது. சுங்கத் தணைக்களத்தின் 120 வருடகால வரலாற்றில் 200 பில்லியன்களுக்கும் அதிகமான வருமானத்தை ஈட்டியது இதுவே முதல் தடைவயாகும் என்றும் திணைனக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில்  தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், மதுபான உற்பத்திக்கான வரியூடாகவும், புகையிலை வரி சட்டத்தின் கீழ் பெறப்படும் வரியினூடாகவுமே இந்த வருமானமானம் கிடைக்கப்பெற்றுள்ளது என்றும் சுங்கத் திணைக்களம் அறிக்கையில் மேலும்  … Read more