சர்வதேச சிறுவர் தினத்தன்று தேசிய மிருகக்காட்சிசாலையில் பல நிகழ்ச்சிகள்..
ஒக்டோபர் 01ஆம் திகதி சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு தேசிய விலங்கியல் திணைக்களத்தனூடாக விசேட நிகழ்ச்சிகள் பல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இத் தினத்தில் 12 வயதுக்ககு கீழ்ப்பட்ட அனைத்து சிறுவர்களுக்கும் மிருகக்காட்சிசாலையை பார்வையிடுவதற்கு கட்டணம் அறவிடப்பட மாட்டாது என்றும் அன்றைய தினம் மிருகக்காட்சிசாலையை பார்வையிடவரும் அனைத்து சிறுவர்களுக்கும் பரிசுப்பொருட்கள் வழங்கப்படும் என்றும் திணைக்களம் தெரிவித்துள்ளது.