நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மாலையில் அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை..

சில இடங்களில் 100 மி.மீ அளவான பல மழை வீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு, தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. 2024  செப்டம்பர் 28ஆம் திகதிக்கான  பொதுவான வானிலை முன்னறிவிப்பு 2024 செப்டம்பர் 28ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது. நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும். மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், குருநாகல் களுத்துறை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில … Read more

அரசாங்கத்தின் வெளிப்படைத் தன்மையுடன் கூடிய வேலைத்திட்டத்துக்கு கொரிய சர்வதேச ஒத்துழைப்பு முகவர் நிறுவனம் முழு ஆதரவு

தற்போதைய அரசாங்கத்தின் வௌிப்படை தன்மையுடன் கூடிய வேலைத்திட்டத்துக்கு முழு ஒத்துழைப்பு வழங்க கொரிய சர்வதேச ஒத்துழைப்பு முகவர் நிறுவனம் (KOICA) இணக்கம் தெரிவித்துள்ளது. கொரிய சர்வதேச ஒத்துழைப்பு முகவர் நிறுவனத்தின் உயர்மட்ட அதிகாரிகள் குழுவினர் நேற்று (27) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதியின் செயலாளர் நந்திக சனத் குமாநாயக்கவை சந்தித்து கலந்துரையாடியபோதே இதனைத் தெரிவித்தனர். இலங்கை அரசாங்கம் முன்னெடுக்கும் ஊழல், மோசடி ஒழிப்பு வேலைத்திட்டத்திற்கு நிதி உதவி வழங்கவும், இலங்கையின் தேவை அடிப்படையில் கடன்களை வழங்கவும் கொரிய சர்வதேச … Read more

வரி செலுத்துபவர்களுக்கான அறிவிப்பு…

2023/2024 மதிப்பீட்டு ஆண்டுக்கான வருமான வரியை செலுத்த வேண்டிய அனைவரும், அந்த மதிப்பீட்டு ஆண்டுக்குரிய அனைத்து வருமான வரியினையும் 2024 செப்டம்பர் மாதம் 30 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னதாக செலுத்தி முடிக்க வேண்டும் அவ்வாறில்லாவிடின் வருமான வரி செலுத்தாததற்கு அல்லது தாமதமாக செலுத்துவதற்கு விதிக்கப்படும் அபராதம் மற்றும் வட்டி தள்ளுபடி செய்யப்பட மாட்டாது என்று உள்நாட்டு இறைவரித் திணைக்களம் அறிக்கை வெளியிட்டுள்ளது. மேலும் 2024 ஒக்டோபர் மாதம் 30 ஆம் திகதி அல்லது அதற்கு … Read more

பதில் பொலிஸ்மா அதிபராக சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய நியமனம்

கௌரவ ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் பதில் பொலிஸ்மா அதிபராக சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய நியமிக்கப்பட்டுள்ளார். அரசியலமைப்புக்கு அமைவாக ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டிருக்கும் அதிகாரங்களுக்கு அமைவாக இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. அதற்கமைவான நியமனக் கடிதம் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவினால் நேற்று (27) ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து வழங்கப்பட்டது. 158 வருட பொலிஸ் வரலாற்றில் கான்ஸ்டபில் ஆக சேவையில் இணைந்துகொண்டவர்கள் வரிசையில் பொலிஸ்மா அதிபராக நியமனம் பெற்றுகொண்டிருக்கும் ஒரே அதிகாரி பிரியந்த வீரசூரிய … Read more

இலங்கை பாராளுமன்றத்திற்கும் பாகிஸ்தான் பாராளுமன்ற சேவைகள் நிறுவகத்திற்கும் (PIPS) இடையில் பாராளுமன்ற ஜனநாயக விழுமியங்களை வலுப்படுத்துவதற்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்து

பாராளுமன்ற ஜனநாயக மரபுகளை வளர்ப்பதற்கும், சட்டவாக்க நிறுவனங்களுக்கிடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கும் ஒரு முக்கியமான நடவடிக்கையாக, இலங்கை பாராளுமன்றத்திற்கும் பாகிஸ்தான் பாராளுமன்ற சேவைகள் நிறுவகத்திற்கும் (Pakistan Institute for Parliamentary Services – PIPS) இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடும் நிகழ்வு அண்மையில் (19) பாராளுமன்றத்தில் இடம்பெற்றது.  அதற்கமைய, இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் பாகிஸ்தான் பாராளுமன்ற சேவைகள் நிறுவகம் சார்பில் பாகிஸ்தானின் இலங்கைக்கான உயர்ஸ்தானிகர் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் பாஹீமுல் அஸீஸ் அவர்களும், இலங்கை பாராளுமன்றம் சார்பில் … Read more

ஜப்பான் அரசாங்கத்தின் உதவியுடன் ஆரம்பிக்கப்பட்டு, தற்போது இடைநடுவில் நிறுத்தப்பட்டிருக்கும் 11 திட்டங்கள் விரைவாக ஆரம்பிக்கப்படும்

ஊழல் மற்றும் முறைகேடுகளை ஒழிப்பதற்கான புதிய அரசாங்கத்தின் திட்டத்திற்கு ஜப்பான் முழு ஆதரவு கௌரவ ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கத்தின் முதன்மை பணியாக கருதப்படும் ஊழல் மற்றும் முறைகேடுகளை இல்லாதொழிக்கும் வேலைத்திட்டத்திற்கு ஜப்பான் அரசாங்கம் முழு ஒத்துழைப்பு வழங்குவதோடு இலங்கையுடன் தொடர்ந்தும் நெருக்கமாக செயற்பட தயாராக இருப்பதாகவும் இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் மிசுகோஷி ஹிடேகி (MIZUKOSHI Hideaki) தெரிவித்தார். ஜப்பானிய தூதுவர் மிசுகோஷி ஹிடேகி ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவை … Read more

கொழும்பு கோட்டை ஜனாதிபதி மாளிகையை அண்மித்த வீதிகள் பொது மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படுகிறது

கொழும்பு கோட்டை ஜனாதிபதி மாளிகையை அண்மித்த பகுதியில் இதுவரை வீதித் தடைகளால் மூடப்பட்டிருந்த வீதிகளை மக்கள் பாவனைக்காக திறந்து வைக்குமாறு கௌரவ ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பணிப்புரை விடுத்துள்ளார். ஜனாதிபதி மாளிகையும் அதனைச் சூழவுள்ள பகுதிகளும் இதுவரை உயர் பாதுகாப்பு வலயமாக அறிவிக்கப்பட்டு மூடப்பட்டிருந்தன. ஆனால் அநுரகுமார திசாநாயக்க, ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் அந்த அனைத்து வீதித் தடைகளும் அகற்றப்பட்டு பல வருடங்களின் பின்னர் அப்பகுதியிலுள்ள வீதிகள் மக்கள் பாவனைக்காக திறந்து விடப்பட்டுள்ளன. அதன்படி, ஜனாதிபதி மாளிகைக்கு … Read more

மக்களின் வளங்களை அனுபவிக்காது ஜனரஞ்சகமான அரச சேவைக்காக ஒன்றிணைந்து செயற்படுவோம்” – பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய 

மக்களின் வளங்களை அனுபவிக்காது ஜனரஞ்சகமான அரச சேவைக்காக ஒன்றிணைந்து செயற்படுமாறு புதிய பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். பிரதமர் அலுவலகத்தின்  (26)  அதிகாரிகளுடன் கொழும்பு பிளவர் வீதியில் அமைந்துள்ள பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இதனை குறிப்பிட்டார். தொடர்ந்து உரையாற்றிய பிரதமர் ஹரிணி அமரசூரிய;  “இன்னுமொரு ஜனாதிபதி தேர்தலில் தெரிவாகாத ஒருவரே தற்போது ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டார் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இருந்த அரசாங்கத்திற்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட போராட்டத்தின் பின்னர் இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் … Read more

டெங்கு நோயாளர் எண்ணிக்கை அதிகரிப்பு

இந்த வருடம் இதுவரையான காலப்பகுதியில் வரை 39,045 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு நோய் ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.  கொழும்பு, களுத்துறை மற்றும் யாழ்ப்பாணம் மாவட்டங்களில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகமாகக் காணப்படுகின்றது. மக்கள் தமது சுற்றுச்சூழலில் நீர் தேங்கும் இடங்களை அடையாளம் கண்டு அவற்றை அகற்றி டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ளதற்கும் அறிவுறுத்தப்படுகின்றனர்.  

புதிய வடக்கு மாகாண ஆளுநர் கடமைகளைப் பொறுப்பேற்பு

வடக்கு மாகாண ஆளுநராக   திரு.நாகலிங்கம் வேதநாயகம்  இன்றைய தினம் (27.09.2024) யாழ் மாவட்ட ஆளுநர் அலுவலகத்தில் தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.  ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க முன்னிலையில் நேற்று முன்தினம் (25)  வடமாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.