கிளிநொச்சி மாவட்டத்தில் 2024 ஜனாதிபதித் தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி!

கிளிநொச்சி மாவட்டத்தில் தற்போதைய தேர்தல் நிலவரங்கள் தொடர்பாக கிளிநொச்சி மாவட்ட பதில் அரசாங்க அதிபர் எஸ்.முரளிதரன் இன்று (19) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் : கிளிநொச்சி மாவட்டத்தில் 2024 ஜனாதிபதித் தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. இங்கு 100,907 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளதுடன் 108 வாக்களிப்பு மற்றும் 8 வாக்கெண்ணல் நிலையங்களும் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளன. தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்பட்ட தினத்தில் இருந்து இதுவரை 11 தேர்தல் தொடர்பான முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. இன்று (20) காலை வாக்குப் … Read more

முல்லைத்தீவில் வாக்களிப்பு நிலையங்களுக்குமான வாக்குப் பெட்டிகள் அனுப்பி வைப்பு

நாளை நடைபெறவுள்ள – 2024 ஜனாதிபதி தேர்தலுக்காக முல்லைத்தீவு மாவட்டத்தின் 137 வாக்களிப்பு நிலையங்களுக்குரிய வாக்கு பெட்டிகள் முல்லைத்தீவு மகா வித்தியாலயத்தில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. 9 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட இலங்கை ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான நாடளாவிய ரீதியில் இடம்பெறவுள்ள தேர்தலுக்காக முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள 137 வாக்களிப்பு நிலையங்களிற்கே இவ் வாக்கு பெட்டிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இம்முறை தேர்தலில் 39 வேட்பாளர்கள் போட்டியிடவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தில் 86,889 வாக்காளர்கள் … Read more

யாழ் மாவட்டத்தில் முதலாம் கட்ட வாக்குப் பெட்டி விநியோகம் ஆரம்பம்.

நாளைய தினம் (21.09.2024) நடைபெறவுள்ள சனாதிபதித் தேர்தல் தொடர்பாக, சிரேஷ்ட தலைமை தாங்கும் அலுவலகர்களிற்கான நியமனக் கடிதம் வழங்கும் முதலாம் கட்ட நிகழ்வானது யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான திரு.மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் இன்றைய தினம் (20.09.2024) காலை 07.15 மணிக்கு யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் நடைபெற்றது. இவ் நியமனக் கடிதம் வழங்களைத் தொடர்ந்து சரியாக 08.30 மணிக்கு முதலாம் கட்ட வாக்குப் பெட்டி விநியோகம் ஆரம்பமாகியது.

இலங்கையின் வௌிநாட்டு தனியார் கடன் வழங்குநர்களுடன் கடன் மறுசீரமைப்பிற்கு கொள்கை ரீதியில் இணக்கம்

2023 ஆம் ஆண்டு இறுதியில் காணப்பட்ட இலங்கையின் 17.5 டொலர் பில்லியன் தனியார் வணிகக் கடன் மறுசீரமைப்பு தொடர்பிலான இணக்கப்பாடு நேற்று (19) எட்டப்பட்டது. சர்வதேச முதலீட்டாளர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் (Ad Hoc Group of Bondholders – AHGB) மற்றும் உள்நாட்டு நிதி நிறுவனங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் (Local Consortium of Sri Lanka – LCSL) கூட்டு நிறுவனம் ஆகியவற்றுக்கு இடையிலான கலந்துரையாடலின் பின்னர், தனியார் பிணைமுறி வழங்குநர்களுடனான இணக்கப்பாட்டு எட்டப்பட்டுள்ளது. இந்நாட்டின் தனியார் பிணைமுறிகளில் 50% … Read more

மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை..

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு, தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. சப்ரகமுவ மாகாணத்திலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மத்திய மலைநாட்டின் மேற்கு … Read more

18 ஆம் திகதி 12 .00 மணிக்கு பின்னர் அனைத்து பிரச்சார நடவடிக்கைகளுக்கும் தடை

வாக்கெடுப்பிற்கு 48 மணி நேரத்திற்கு முன்னர் அதாவது 18 ஆம் திகதி 12 .00 மணிக்கு பின்னர் சனாதிபதி வேட்பாளர்களின் அனைத்து பிரச்சார நடவடிக்கைகளையும் முடிவுறுத்த வேண்டும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இது தொடர்பான அறிக்கை பின்வருமாறு:

அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறை

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை வெள்ளிக்கிழமை (20)   விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. எதிர்வரும் சனிக்கிழமை (21) நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல் காரணமாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் வேண்டுகோளுக்கிணங்க இது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன் திங்கட்கிழமை (23) வழமை போன்று பாடசாலைகள் ஆரம்பிக்கப்படும் எனவும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தேர்தல் தொடர்பிலான உத்தியோகபூர்வ முடிவுகளை பார்வையிட

எதிர்வரும் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள தேர்தல் தொடர்பில்  தேர்தல் ஆணைக்குழுவினால் வெளியிடப்படுகின்ற உத்தியோகபூர்வ தேர்தல் முடிவுகள் அரசாங்க தகவல் திணைக்களத்தினால் ஊடக நிறுவனங்களுக்கு வழங்கப்படவுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக அரசாங்க தகவல் திணைக்களத்தினால் (19) வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கை பின்வருமாறு:

  அனர்த்த இடையூறுகளை முகாமை செய்வதற்காக விசேட  அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம்

  இன்று (19) முதல் 22 ஆம் திகதி வரை விசேட தேர்தல் ஒருங்கிணைந்த அனர்த்த முகாமைத்துவ பிரிவு அனர்த்த நிலைமைகளை அறிவிப்பதற்காக தொலைபேசி இலக்கங்கள் சிலவற்றை வழங்கியுள்ளது.   இம்முறை ஜனாதிபதித் தேர்தல் இடம்பெறும் காலப்பகுதியில் ஏற்படக்கூடிய எதிர்பாராத காலநிலையை இக் காலகட்டத்தில் புறக்கணிக்க முடியாது என்றும் இதன் போது அனர்த்தங்களால் தேர்தலுக்கு ஏற்படக்கூடிய இடையூறுகளை முகாமைத்துவம் செய்வதற்காக  அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மற்றும் தேர்தல் ஆணைக்குழு என்பன இணைந்து விசேட ஒருங்கிணைந்த வேலைத்திட்டம் … Read more

தேசிய பாதுகாப்பு சபை ஜனாதிபதி தலைமையில் கூடியது

தேசிய பாதுகாப்பு சபை இன்று (19) காலை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் கூடியது. எதிர்வரும் 2024 ஜனாதிபதித் தேர்தலை சுதந்திரமாகவும் நியாயமாகவும் நடத்துவதற்கு அவசியமான பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்வது தொடர்பில் இங்கு கலந்துரையாடப்பட்டது. நாட்டில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுதல், வேட்பாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்தல், வாக்குச் சாவடிகள் மற்றும் வாக்கு எண்ணும் நிலையங்களை அண்டிய பகுதிகளில் பாதுகாப்பை பலப்படுத்துதல் மற்றும் தேர்தல் ஆணைக்குழுவுக்குத் தேவையான ஒத்துழைப்பை வழங்குதல் என்பன குறித்தும் இதன்போது ஆராயப்பட்டது. … Read more