மட்டக்களப்பு மாவட்டத்தில் தேர்தல் கடமைகளுக்காக 6750 அரச உத்தியோகத்தர்கள்

 மட்டக்களப்பு மாவட்டத்தில் இம்முறை தேர்தல் கடமைகளுக்காகவும் வாக்கெண்ணும் பணிகளுக்காகவும் 6750 அரச உத்தியோகத்தர்கள் தேர்தல் கடமையில் ஈடுபடவுள்ளதாக மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் எம்.பி.எம்.சுபியான் தெரிவித்தார்.   இன்று (19) திகதி ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே  அவர் இவ்வாறு தெரிவித்தார்.    இதன்போது அவர் மேலும் குறிப்பிடுகையில்,   கடந்த காலங்களில் மட்டக்களப்பு மாந்தீவு வைத்தியசாலையில் இடம்பெற்று வந்த வாக்களிப்பு நிலையம் இம்முறை மட்டக்களப்பு புதூர் விக்னேஸ்வரா வித்தியாலய மண்டபம் இலக்கம் மூன்றில் வாக்களிப்பதற்கு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. … Read more

வாக்கெடுப்பு நாளில் தடை செய்யப்பட்ட செயல்கள்

வாக்கெடுப்பு நாளில் தடை செய்யப்பட்ட செயல்கள் தொடர்பாக தேர்தல்கள் ஆணைக்குழு இன்று (19) அறிக்கை ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. இது தொடர்பான அறிக்கை பின்வருமாறு:

தேர்தல் முறைப்பாடுகளின் சாரம்சம்

கடந்த 24 மணித்தியாலங்களுக்குள் (2024.09.18 பி.ப 04.30 வரை) தேர்தல் சட்டவிதிகளை மீறி செயற்பட்டமை தொடர்பாக 208 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன என்று தேர்தல் ஆணைக்குழு அறிக்கை வெளியிட்டுள்ளது. இதேவேளை, 2024.07.31ஆம் திகதி தொடக்கம் 2024.09.18ஆம் திகதி வரையிலும் கிடைக்கப்பெற்றுள்ள மொத்த முறைப்பாடுகளின் எண்ணிக்கை 4945 என்றும் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

காங்கேசன்துறையல் சீமெந்து தொழிற்சாலை நிறுவுவது தொடர்பிலான கலந்துரையாடல்

காங்கேசன்துறையில் சீமெந்து தொழிற்சாலையை நிறுவுவது தொடர்பான ஆரம்பக்கட்ட கலந்துரையாடல் நேற்று (18/09/2024) நடைபெற்றது. வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸின் தலைமையில் , ஆளுநர் செயலகத்தில் நடைபெற்ற இந்த கலந்துரையாடலில், முதலீட்டு ஊக்குவிப்பு சபையின் யாழ் பிராந்திய சிரேஷ்ட பிரதி பணிப்பாளர் எ.ஆர். ஜெயமனோன், ஆய்வு நிறுவனத்தின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்துக்கொண்டனர். உள்ளூர் மூலப்பொருட்களை பயன்படுத்தாது, வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் மூலப்பொருட்களை கொண்டு சீமெந்து தயாரித்து பொதி செய்து உள்நாட்டு தேவைக்காக விற்பனை செய்யும் நோக்குடன் இந்த செயற்றிட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளதாக, காங்கேசன்துறையில் சீமெந்து தொழிற்சாலைக்கான … Read more

வாக்கெடுப்பு நிலையத்தினுள் பிரவேசிக்க  அனுமதிக்கப்பட்டவர்கள்

வாக்கெடுப்பு நிலையத்தினுள் பிரவேசிக்க சட்டத்தினால் அனுமதிக்கப்பட்டவர்கள் தொடர்பான விபரத்தை தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இது தொடர்பாக இன்று (18) தேர்தல்கள் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை பின்வருமாறு;

வாக்கெடுப்பு நிலையங்களிலும் வாக்கெண்ணும் நிலையங்களிலும்  தவிர்க்கப்பட வேண்டிய நடவடிக்கைகள்

வாக்கெடுப்பு நிலையங்களிலும் வாக்கெண்ணும் நிலையங்களிலும் சில நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு தவிர்க்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இது தொடர்பாக தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:

மட்டக்களப்பில் இரண்டு வாக்காளர்களுக்காக தனியான வாக்களிப்பு நிலையம்

  இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் ஒன்பதாவது ஜனாதிபதியை தேர்ந்தெடுக்கும் ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் 21 ஆம் திகதி இடம்பெறவுள்ள நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் அதற்கான பூர்வாங்க ஏற்பாடுகள் அனைத்தும் நிறைவு செய்யப்பட்டு வருவதாக மட்டக்களப்பு மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலரும் மாவட்ட அரசாங்க அதிபருமாகிய ஜஸ்டினா முரளிதரன் தெரிவித்தார். அதே வேளை மாவட்டத்தில் இத்தேர்தலில் வாக்களிப்பதற்கு தகுதி பெற்றுள்ள 449,606 பேர் வாக்களிப்பதற்காக 442 வாக்களிப்பு நிலையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. கடந்த தேர்தல்களின் போது மட்டக்களப்பு மாவட்டத்தின் … Read more

தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் இன்று (18) நள்ளிரவுடன் நிறைவு

 ,2024 ஜனாதிபதி தேர்தலுக்கான சகல தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளும் இன்று (18) நள்ளிரவு 12.00 மணியுடன் முடிவடையும்.   அதன்படி இன்று (18) நடைபெறும் தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களின் காட்சிகள்/ புகைப்படங்கள் மற்றும் விபரங்கள் இன்று இரவு செய்தி மற்றும் அடுத்த நாள் இரவு செய்தி மற்றும் நாளை (19) காலை செய்திப் பத்திரிகைகளில் மற்றும் அன்று நண்பகல் 12.00 மணிக்கு ஒளிபரப்பாகும் செய்திக்காட்சிகளில் மாத்திரம் வெளியிட வேண்டும் என்பதுடன் அதன் பின்னர் அப்பிரச்சாரக் கூட்டங்களின்  அறிக்கை அல்லது … Read more

தெற்காசியாவின் மிகப்பெரிய வாகன ஒருங்கிணைப்பு தொழிற்சாலையை குளியாப்பிட்டியவில் ஜனாதிபதி திறந்து வைத்தார்

• நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் திட்டங்களை எத்தகைய எதிர்ப்பு வந்தாலும் எவருக்கும் நிறுத்த இடமளியேன். • 2015 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட திட்டம் 10 வருடங்கள் தாமதமானதால் இளைஞர்களுக்கு கிடைக்க இருந்த தொழில் வாய்ப்புகளை இழக்க நேரிட்டது. • வெஸ்டர்ன் ஒடோமொபைல் புதிய தொழிற்சாலையினால் குளியாப்பிட்டியுடன் நாடும் பெரும் அபிவிருத்தி காணும் – ஜனாதிபதி. நாட்டின் வாகன உற்பத்தித் துறையில் தனித்துவமான ஒரு திருப்புமுனையை குறிக்கும் வகையில், குளியாப்பிட்டிய வெஸ்டர்ன் ஓட்டோமொபைல் அசெம்ப்ளி பிரைவேட் லிமிடெட் (WAA) … Read more

மட்டக்களப்பு மாவட்டம் 2024 ஜனாதிபதித் தேர்தலுக்கான முன்னாயத்தங்களும் பூர்த்தி…

  இலங்கை சனநாயக குடியரசின் ஒன்பதாவது ஜனாதிபதியை தேர்ந்தெடுக்கும் ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் செப்டம்பர் 21 ஆம் திகதி சனிக்கிழமை நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல் தொடர்பானமட்டக்களப்பு மாவட்டத்திற்கான  சகல முன்னாயத்தங்களும் மேற்கொள்ளப்பட்டு பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாகவும் அதனை   மட்டக்களப்பு மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலரும் அரசாங்க அதிபருமாகிய ஜஸ்டினா முரளிதரன் தலைமையில்  நேற்று  (17) மேற்பார்வை விஜயமொன்றை மேற்கொண்டார். இதன்போது மாவட்டத்தின் வாக்கெண்ணும் நிலையமான  மட்டக்களப்பு இந்துக் கல்லூரியின்  மண்டப ஒழுங்குகள், போக்குவரத்து, பொது வசதிகள், நலனோன்பு, மின்சாரம் போன்ற … Read more