ஒரு வேட்பாளர் பிற வேட்பாளர்களை ஊக்குவிப்பது தடை…

ஒரு குறிப்பிட்ட வேட்பாளர் பிற வேட்பாளர்களை ஊக்குவிப்பது தடைசெய்யப்பட்டுள்ளது என்று தேர்தல் தேர்தல் ஆணைக்குழு அறிக்கை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கை..

வட மத்திய பிராந்திய கடற்படையின் ஏற்பாட்டில் கடற்படை இரத்த தான முகாம்…

இலங்கை கடற்படையின் சமூகப் பணிகளில் ஒன்றாக இரத்ததான முகாம் வடமாத்திய கடற்படை கட்டளையின் ஏற்பாட்டில் நேற்று(14) இடம்பெற்றது. இலங்கை கடற்படையினால் மேற்கொள்ளப்பட்டு வரும் சமூகப் பணிகளில் ஒரு பகுதியாக கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரால் பிறியந்த பெரேரா வின்  வழிகாட்டலின் கீழ் இந்த இரத்ததான முகாம் வடமத்திய  கடற்படை பிராந்தியக் கட்டளைத் தளபதி ரியார் அட்மிரால் ஜெகத்குமாரவின் மேற்பார்வையில் ஏற்பாடு செய்யப்பட்டது.  மன்னார் மாவட்ட இரத்த வங்கியின் வேண்டுகோளுக்கு இணங்க இவ்விரத்த தான முகாம் வட மத்திய … Read more

இராணுவத்தின் புதிய பிரதம அதிகாரி நியமனம்

இலங்கை இராணுவத்தின் (SLA) புதிய பிரதம அதிகாரியாக இலங்கை இராணுவ சிங்க படைப்பிரிவைச் சேர்ந்த மேஜர் ஜெனரல் தினேஷ் நாணயக்கார செப்டம்பர் 16 ஆம் திகதி முதல் நியமிக்கப்பட்டுள்ளார். மேஜர் ஜெனரல் நாணயக்கார, 35 ஆண்டுகளுக்கும் மேலான இராணுவ அனுபவத்தைக் கொண்ட ஒரு சிறந்த இராணுவ அதிகாரி ஆவார். இவர் இராணுவப் புலனாய்வுப் படையின் தளபதி, 21 ஆவது காலாட்படைப் பிரிவின் கட்டளைத் தளபதி மற்றும் வன்னி பாதுகாப்புப் படைகளின் கட்டளைத் தளபதி உட்பட பல முக்கிய … Read more

தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை இன்று

தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை காலை 09.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளதாகவும் பரீட்சார்த்திகள் அனைவரும் காலை 09.00 மணிக்கு முன்னதாக பரீட்சை மண்டபத்தில் அமருமாறு பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். பரீட்சையை எவ்வித பிரச்சினைகளும் இன்றி நடத்துவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, புலமைப்பரிசில் பரீட்சை காலத்தில் ஒலிபெருக்கிகளை பயன்படுத்த எவருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

வாகன இறக்குமதிக்கான தற்காலிக தடையை நீக்குதல்

மோட்டார் வாகன மற்றும் மோட்டார் பாவிக்கப்படாத பொருட்களை இறக்குமதி செய்வதற்காக ற்காலிக இறக்குமதி தடையை நீக்குவதற்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது. இலங்கை அந்நிய செலவாணி சந்தையின் அடிப்படையில் அதிகரித்த அழுத்தத்தைக் குறைப்பதற்கான நடவடிக்கையாகவும், ஒளடதங்கள், எரிபொருள் மற்றும் உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்வதற்காக இருக்கும் அந்நியச் செலவாணி வழங்குதலை உறுதி செய்வதற்காக துரிதமாக அத்தியாவசியமற்ற பொருட்களின் இறக்குமதி 2020 மார்ச் மாதம் தொடக்கம் தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக நிதி, பொருளாதார நிலைப்படுத்தல் மற்றும் தேசிய … Read more

பாசிப்பயறுக்கான உத்தரவாத விலையை  உடனடியாக அமல்படுத்துமாறு பிரதமர் பணிப்புரை 

பாசிப்பயறுக்கான உத்தரவாத விலை ஒன்றை உடனடியாக அறிமுகப்படுத்துமாறு பிரதமர் தினேஷ் குணாவர்தன, விவசாய மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீரவுக்கு எழுத்து மூலமான பணிப்புரையை நேற்று (13) விடுத்துள்ளார்.  உணவு பாதுகாப்பு மற்றும் பொருளாதார மறுசீரமைப்புக் குழுவினால் சகல மாவட்ட மற்றும் பிரதேச செயலகங்களின் கட்டமைப்பு ஊடாக பிரதேச அபிவிருத்தி மற்றும் விவசாய குழுக்களினால்  இடைப்போகத்தில் இப்பாசிப்பயறு உற்பத்திக்கான பொருத்தமான விலையை விவசாயிகளுக்காக அறிமுகப்படுத்த வேண்டும் . அத்துடன் விவசாயிகளிடையே பாசிப்பயறு உற்பத்தியை மேற்கொள்வதற்கு ஆர்வத்தை … Read more

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை நாளை – பரீட்சைக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம்

 நாளை நடைபெறவுள்ள தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் பிரச்சார நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டாம் என்று கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேம்ஜயந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார்.   கல்வி அமைச்சில் இன்று (14) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.  புலமைப்பரிசில் பரீட்சை நாளை (15) காலை 9.30 மணி முதல் மதியம் 12.15 மணி வரை நடைபெறவுள்ளதாகவும், அக்காலப்பகுதியில் மாணவர்களின் பரீட்சைக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் செயற்பட … Read more

2025 ஆம் ஆண்டு முதல் அறநெறிப் பாடசாலை ஆசிரியர்களுக்கு வருடாந்த கொடுப்பனவாக 7500 ரூபாய்…

பௌத்த, இந்து, இஸ்லாமிய, கிறிஸ்தவ மற்றும் கத்தோலிக்க மத அறநெறிப் பாடசாலை ஆசிரியர்களை ஊக்குவிக்கும் வகையில் 7500 ரூபாய் வருடாந்த கொடுப்பனவொன்றை வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சரும், அமைச்சரவைப் பேச்சாளருமான கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (14) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போது அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். புத்தசாசன சமய மற்றும் கலாசார … Read more

இந்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் மக்களுக்கு வழங்கப்படும் நிவாரணங்களை அதிகரிப்பதில் அரசாங்கம் கவனம்.. 

இந்த வருட வரவு செலவுத் திட்டத்தில் மக்களுக்கு வழங்கப்படும் நிவாரணங்களை அதிகரிப்பது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தும் என்று போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (14) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அதன்படி, வரி செலுத்துவோருக்கு நிவாரணம் வழங்குவதற்கான அரசாங்கத்தின் திட்டத்தின் கீழ், ஏப்ரல் 2025 முதல் தனிப்பட்ட … Read more

இலங்கை மஹாவலி அதிகாரசபைக்கு உரிய நீர்த்தேக்கங்களின் மேல் மிதக்கும் சூரியசக்தி கருத்திட்டம்

ரந்தெணிகல, மொரகஹகந்த மற்றும் கலாவாவி ஆகிய நீர்த்தேக்கங்களில் மிதக்கும் சூரியசக்தி கருத்திட்டங்களை அபிவிருத்தி செய்வதற்காக போட்டிப் பெறுகை முறைமையின் கீழ் முதலீட்டாளர்களைத் தெரிவு செய்வதற்கு இலங்கை மின்சார சபைக்கு அதிகாரத்தை வழங்குவதற்காக அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. மிதக்கும் சூரியசக்தி கருத்திட்டங்களை அபிவிருத்தி செய்வதற்காக ரந்தெணிகல, மொரகஹகந்த மற்றும் கலாவாவி ஆகிய 03 பிரதான நீர்த்தேக்கங்களை மஹாவலி அதிகாரசபை அடையாளம் கண்டுள்ளது. புதுப்பிக்கத்தக்க வலுசக்தி உற்பத்தியை அதிகரிப்பதற்காக தற்போதுள்ள நீர்மூலங்களின் மேல் மிதக்கும் சூரியசக்தி கருத்திட்டங்களை அபிவிருத்தி செய்வதற்கு … Read more