சிறந்த புகையிரத நிலையத்தை தெரிவு செய்யும் நிகழ்ச்சித் திட்டம் 

மத்திய சுற்றாடல் அதிகார சபையினால் ஏற்பாடு செய்யப்பட்ட சிறந்த புகையிரத நிலையத்தை தெரிவு செய்யும் வேலைத்திட்டம் தொடர்பான வட பிராந்தியத்தின் புகையிரத நிலைய பொறுப்பதிகாரிகளுக்கு தெளிவுப்படுத்தும் விசேட நிகழ்வு அண்மையில் (10) அனுராதபுர மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. இதன் போது பசுமையான புகையிரத நிலையத்தைப் பேணுவதன் முக்கியத்துவம் தொடர்பாக புகையிரதப் நிலையப் பொறுப்பதிகாரி  பி. எஸ். பொல்வத்தகேயினால் தெளிவுபடுத்தப்பட்டது. இந்நிகழ்வில் மத்திய சுற்றாடல் அதிகார சபையின் சுற்றாடல் பணிப்பாளர் மற்றும் தெளிவுபடுத்தும் பிரிவின் பிரதி பணிப்பாளர் நாயகம் … Read more

ஊழல் மற்றும் மோசடியை மட்டுப்படுத்த தற்போதைய அரசாங்கம் முன்னெடுக்கும் வேலைத்திட்டத்திற்கு கனடா ஒத்துழைப்பு

ஊழல் மோசடியை மட்டுப்படுத்த தற்போதைய அரசாங்கம் முன்னெடுத்துச் செல்லும் வேலைத்திட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவதாக இலங்கை மற்றும் மாலைதீவுக்கான கனடிய உயர்ஸ்தானிகர் எரிக் வொல்ஷ்  (Eric Walsh)தெரிவித்தார். ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி சனத் நந்திக குமாநாயக்க மற்றும் இலங்கை மற்றும் மாலைதீவுக்கான கனடிய உயர்ஸ்தானிகர் எரிக் வொல்ஷ் (Eric Walsh) ஆகியோருக்கு இடையில் ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (12) நடைபெற்ற சந்திப்பின் போதே இந்த விடயங்கள் கலந்துரையாடப்பட்டன. ஊழல் மற்றும் மோசடியை ஒழிப்பது தொடர்பில் கனடா அரசாங்கத்தின் அனுபவங்களை … Read more

அபிவிருத்தி அடைந்த இலங்கையை கட்டியெழுப்ப தற்போதைய அரசாங்கம் முன்னெடுக்கும் வேலைத்திட்டத்திற்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் ஒத்துழைப்பு

அபிவிருத்தி அடைந்த இலங்கையை கட்டியெழுப்ப தற்போதைய அரசாங்கம் முன்னெடுக்கும் வேலைத்திட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்க ஐக்கிய அரபு அமீரகம் இணக்கம் தெரிவித்துள்ளது. இலங்கைக்குள் மேற்கொள்ளப்படும் முதலீடுகளை அதிகரிப்பதுடன், டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் புதிய தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்துவதற்கான தொழில்நுட்ப அறிவை பெற்றுத்தருவதாகவும் இலங்கைக்கான ஐக்கிய அரபு அமீரகத்தின் தூதுவர் காலித் நசர் அல் அமேரி ( Khaled Nasser AlAmeri) தெரிவித்தார்.  ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தின் தூதுவர் காலித் நசர் அல் அமேரி ஆகியோருக்கு … Read more

காய்ச்சல் ஏற்பட்டால் உடனடியாக வைத்திய அலோசனையைப் பெற்றுக்கொள்ளவும்

யாழ்ப்பாண மாவட்டத்தில் எலிக்காய்ச்சல் என சந்தேகிக்கப்படும் நோய் பரவிவருவதால் பொதுமக்கள் சுகாதார ஆலோசனைகளை பின்பற்றி இந்த நோயிலிருந்து தம்மை பாதுகாத்துக்கொள்ளுமாறு யாழ் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் கேட்டுக் கொண்டுள்ளார். யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் நேற்று (11) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை குறிப்பிட்டார். ‘யாழ்ப்பாண மாவட்டத்தில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளநிலைமைக்கு பின்னர் பருத்தித்துறை, கரவெட்டி, சாவகச்சேரி ஆகிய சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் … Read more

கிழக்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் புதிய தளபதி கடமை பொறுப்பேற்பு

கிழக்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் புதிய தளபதியாக மேஜர் ஜெனரல் கே.வி.என்.பீ பிரேமரத்ன ஆர்எஸ்பீ யூஎஸ்பீ பீஎஸ்சீ அவர்கள் 09 டிசம்பர் 2024 அன்று கிழக்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தில் கடமைகளைப் பொறுப்பேற்றார். வருகை தந்த புதிய தளபதிக்கு, இலங்கை பீரங்கி படையணி படையினர் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை மற்றும் அணிவகுப்பு மரியாதை வழங்கி வரவேற்றனர். இதனைத் தொடர்ந்து மத ஆசீர்வாதங்களுக்கு மத்தியில் உத்தியோகபூர்வ ஆவணத்தில் கையொப்பமிட்டு கடமைகளை பொறுப்பேற்றார். பின்னர் மரக்கன்று நட்டு குழு படம் … Read more

ஜனாதிபதி தலைமையில் கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டுகை அமைச்சின் செலவுத் தலைப்பு கலந்துரையாடல் 

ஜனாதிபதி தலைமையில் கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டுகை அமைச்சின் செலவுத் தலைப்பு கலந்துரையாடல்  2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தை தயாரிப்பதற்கான அமைச்சரவை மட்டத்திலான ஆரம்ப கலந்துரையாடல்கள் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.  அதன் ஒரு அங்கமாக கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டுகை அமைச்சின் செலவுத் தலைப்பு தொடர்பிலான வரவு செலவு திட்ட பரிந்துரைகள் குறித்த கலந்துரையாடல் இன்று (11) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.  … Read more

பாடசாலை பிள்ளைகளின் நலனை அடிப்படையாக கொண்ட தரவுகளின் அடிப்படையில் கொள்கைகள் மற்றும் முடிவுகளை மேற்கொள்ளுங்கள்.

ஊடக வெளியீடு 90 பாடசாலை பிள்ளைகளின் நலனை அடிப்படையாக கொண்ட தரவுகளின் அடிப்படையில் கொள்கைகள் மற்றும் முடிவுகளை மேற்கொள்ளுங்கள். பொது சேவை வழங்குனர்கள் என்ற வகையில் அதிகாரிகள் பொதுமக்களிடம் மனிதாபிமானத்துடன் நடந்து கொள்ள வேண்டும். பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய பாடசாலை மாணவர்களின் நலன்களை அடிப்படையாகக் கொண்ட தரவுகளின் அடிப்படையில் கொள்கைகள் மற்றும் தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும், அதிகாரிகள் பொதுச் சேவைகளை வழங்குபவர்கள் என்ற வகையில் பொதுமக்களுடன் மனிதாபிமானத்துடன் நடந்து கொள்ள வேண்டும் என்றும் பிரதமர் … Read more

சுகாதார மற்றும் வெகுஜன ஊடகம் ஆகிய துறைகளின் மீது மக்களின் நம்பிக்கையை வெற்றி கொள்வதே முக்கியமான விடயம் – சுகாதார செயலாளர்

சுகாதார சேவையின் மற்றும் வெகுஜன ஊடகத்துறையின் ஆகியவற்றின் மீது மக்கள் மத்தியில் நம்பிக்கையை மீண்டும் கட்டியெழுப்புவதற்காக செயற்படுவதானது மிகவும் முக்கியமான விடயம் என சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சுக்களின் புதிய செயலாளர் பதவிக்கான கடமைகளை ஆரம்பித்த விசேட வைத்தியர் அனில் ஜாசிங்க வலியுறுத்தினார். சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸவின் பங்குபற்றலுடன் இன்று (11) சுகாதார அமைச்சில் தனது பணிகளை ஆரம்பிக்கும் நிகழ்வில் கலந்து கொண்ட அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மத்தியில் … Read more

அஸ்வசும நலன்புரி பயனாளர்களுக்கான டிசம்பர் மாத   உதவித்தொகை நாளை பயனாளிகளின் கணக்குகளுக்கு

அஸ்வசும நலன்புரி நன்மைகள் சபையினூடாக, பயனாளர்களின் டிசம்பர் மாதத்துக்கான உதவித்தொகையை நாளை அவர்களின் வங்கிக் கணக்குகளில் வரவு வைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி, 11,024,310,500.00 (பதினொரு பில்லியன் இருபத்தி நான்கு மில்லியன் முந்நூற்று பத்தாயிரத்து ஐந்நூறு) ரூபாய் தொகை 1,707,311 (பதினேழு இலட்சத்து ஏழாயிரத்து முந்நூற்று பதினொரு) அஸ்வசும பயனாளர்களின் குடும்பங்களுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டு அவர்களின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படும். மேலும், அனைத்து பயனாளர்களும் … Read more

மட்டக்களப்பில் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவது தொடர்பான விசேட கலந்துரையாடல்!

மட்டக்களப்பில் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்கான முதலீட்டாளர்களுடனான விசேட கலந்துரையாடல் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்டினா முரளிதரன் தலைமையில் மாவட்ட செயலக மண்டபத்தில் இன்று (11) இடம் பெற்றது. நவீன மயப்படுத்தப்பட்ட செயற்திட்டங்களின் மூலம் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை கவர்வதற்கு தொழில் முயற்ச்சியாளர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட திட்ட முன்மொழிவுகள் தெளிவூட்டப்பட்டது. சுற்றுலாத்துறையை மேம்படுத்துவது தொடர்பாக இதன் போது கலந்துரையாடப்பட்டது. மேலும் சுற்றுலா அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் மேற்கொள்ளும் போது எதிர்நோக்கும் சவால்கள் தொடர்பாக முதலீட்டாளர்கள் கருத்துகளை இங்கு பகிர்ந்துகொண்டனர்.