காசநோய் தொற்றுக்குள்ளானோர் மத்தியில் தடுப்பு சிகிச்சைகளை மேம்படுத்துவதற்கான ஆய்வு

காசநோய் தொற்றுக்குள்ளானோர் மத்தியில் தடுப்பு சிகிச்சைகளை மேம்படுத்துவதற்கான ஆய்வை மேற்கொள்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. காசநோய் தடுப்பு மற்றும் மார்பு நோய் தொடர்பான தேசிய நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் அமுல்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ள பராமரிப்பு மாதிரியின் வினைத்திறனை அவதானிப்பதற்காக காலி மாவட்டத்தில் ஆய்வு மேற்கொள்ள எதிர்பார்க்கப்படுகிறது. அதற்காக 387,280 அமெரிக்க டொலர் நிதியை வழங்குவதற்கு காசநோய் மற்றும் நுரையீரல் நோய் தொடர்பாக செயற்படும் சர்வதேச சங்கம் சம்மதம் தெரிவித்துள்ளது. ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் மருத்துவப் பீடத்துடன் சுகாதார அமைச்சின் காசநோய் … Read more

109 ஆண்டுகளுக்குப் பிறகு, நியாயமற்ற விசாரணையில் ஆங்கிலேயர்களால் கொல்லப்பட்ட ஹென்றி பெட்ரிஸுக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு

109 வருடங்களுக்கு முன்னர் பிரித்தானிய ஆட்சியாளர்களால் நியாயமற்ற விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட எட்வர்ட் ஹென்றி பெட்ரிஸுக்கு மரணத்திற்குப் பின் ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கியுள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார்.   அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (14) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.  அரசியலமைப்பின் 33(h) உறுப்புரையின் கீழ் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் பிரகாரம் … Read more

U20  தடகள சம்பியன்ஷிப் தொடரின் ஆடவர் முப்பாய்ச்சல் போட்டியில் தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கம் வென்ற இலங்கை

2024 தெற்காசிய ஜூனியர் U20 தடகள சாம்பியன்ஷிப் தொடரின் ஆடவர் முப்பாய்ச்சல் போட்டியில் தங்கம் மற்றும் வௌ்ளிப் பதக்கங்களை இலங்கை வென்றுள்ளது. அதன்படி, ஹசித திஸாநாயக்க தங்கப்பதக்கத்தையும், செனுர ஹன்சக வெள்ளிப்பதக்கத்தையும் வென்றுள்ளனர். அதேபோல், தொடரின் ஆண்களுக்கான 4×400 மீற்றர் அஞ்சலோட்டப் போட்டியில் இலங்கை தங்கப் பதக்கத்தை வென்றது. 2024 தெற்காசிய ஜூனியர் U20 தடகள சாம்பியன்ஷி தொடர் இந்தியாவின் சென்னையில் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.    

வாகன இறக்குமதி மீதான தற்காலிகத் தடையை நீக்க அமைச்சரவை அனுமதி

304 HS குறியீடின் கீழ் வகைப்படுத்தப்பட்ட வாகனங்கள் மற்றும் இயந்திரம் சாரா வாகன உதிரிப் பாகங்கள் இறக்குமதி மீதான தற்காலிக தடையை நீக்குவதற்கு அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. இதன்படி, சர்வதேச நாணய நிதியத்துடன் கூடிய நீடிக்கப்பட்ட கடன் வசதிகள் வேலைத் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட பொருளாதார மீட்பு செயல்முறைக்கு இணங்க, நிதி அமைச்சின் பரிந்துரைகளுக்கு உட்பட்டு, 2024 ஒக்டோபர் 01 முதல் மூன்று கட்டங்களாக இந்தத் தடை நீக்கப்படும்.   இந்நாட்டின் அந்நியச் செலாவணிக் கையிருப்பு மீது … Read more

எதிர்வரும் 21ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் வாக்காளர்கள் தமது வாக்கை எவ்வாறு சரியாக அளிக்க வேண்டும்?

எதிர்வரும் 21ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் வாக்காளர்கள் தமது வாக்கை எவ்வாறு சரியாக அளிக்க வேண்டும்?வாக்களிக்கும் முறைகள் பின்வருமாறு..  வாக்கினை ‘1’ என்றும் விருப்ப வாக்குகளை ‘2’ மற்றும் ‘3’ என்றும் குறிக்கலாம்.  ஒரு வாக்கை மட்டும் அளிப்பதற்கு, ‘1’ அல்லது ‘X’ எனக் குறிக்கலாம். [ஃஎனினும், ஒரு வாக்கை அளிக்கும் போது  ‘1’ மற்றும் ‘X’ என்ற இரண்டையும்  குறிக்க வேண்டாம்.  ‘X’ அடையாளம் இட்ட பின்னர் வேறு எந்த எண்ணையும்  பயன்படுத்த முடியாது … Read more

ஐரோப்பிய ஒன்றியத்தின் தேர்தல் கண்காணிப்பு குழுவினர் அரசாங்க அதிபருடன் சந்திப்பு

யாழ்ப்பாண மாவட்டத்தில் தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுவரும் ஐரோப்பிய ஒன்றியத்தின் தேர்தல் கண்காணிப்பு குழுவினர் இன்றைய தினம் (13) யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான திரு.மருதலிங்கம் பிரதீபனை அரசாங்க அதிபர் அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினர். யாழ்ப்பாணத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் தேர்தல் முன்னாயத்த செயற்பாடுகள் தொடர்பாக குறிப்பாக வாக்களிப்பு நிலையங்கள், வாக்கெண்ணும் நிலையங்கள் தொடர்பாக எடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகள் மற்றும் நிறைவடைந்த அஞ்சல் வாக்களிப்பின் விபரங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது. இச் சந்திப்பில் ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்பு … Read more

கடந்த 9 மாதங்களில் 784 செவிலியர் பராமரிப்பு தொழில்வாய்ப்புக்கள்…

2024 ஜனவரி முதல் தற்போது வரையிலான 8 மாதங்களில், 784 இலங்கையர்கள் இஸ்ரேலில் செவிலியர் பராமரிப்பு தொழிலுக்காக சென்றுள்ளனர்;, மேலும் இஸ்ரேலில் வீட்டு செவிலியர் பராமரிப்பு சேவைக்கு தகுதி பெற்ற மேலும் 19 பெண்களுக்கு விமான டிக்கெட்டுகளை வழங்கும் நிகழ்வு, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் நேற்று (12) இடம்பெற்றது. இவர்கள் செப்டம்பர் 15ஆம் திகதி இஸ்ரேலுக்குப் புறப்பட உள்ளனர். இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கும் இஸ்ரேலின் குஐடீயு நிறுவனத்திற்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி, 1,618 இலங்கையர்கள் … Read more

தனிநபர் வருமான வரி கட்டமைப்பை திருத்துவதற்கு அமைச்சரவை அனுமதி

வரி செலுத்துவோருக்கு நிவாரணம் வழங்குவதற்கான அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தின் கீழ், 2025 ஏப்ரல் மாதம் முதல் தனிநபர் வருமான வரி (PIT) கட்டமைப்பில் திருத்தங்களைச் செய்வதற்கு அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. 2023 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட வரிச் சீர்திருத்தங்களால் அதிகம் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் அளிக்கும் அதேவேளையில், நிதிப் பொறுப்பைப் பேணுவதே இந்த வரி கட்டமைப்பு மாற்றங்களின் நோக்கமாகும். சர்வதேச நாணய நிதியத்துடனான (IMF) கலந்துரையாடலைத் தொடர்ந்து, தனிநபர் வருமான வரிக் கட்டமைப்பில் முன்மொழியப்பட்ட திருத்தங்கள், அமைச்சரவைப் பத்திரம் … Read more

பெண்கள் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சராக சீதா அரம்பேபொல பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்

பெண்கள் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சராக நியமிக்கப்பட்ட விசேட வைத்தியர் சீதா அரம்பேபொல, இன்று (13) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். சீதா அரம்பேபொல, சுகாதார இராஜாங்க அமைச்சராக வகிக்கும் பதவிக்கு மேலதிகமாக, பெண்கள் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். பதவிப் பிரமாண நிகழ்வில் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவும் கலந்துகொண்டார்.

புலமைப்பரிசில் பரீட்சைக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் – பரீட்சை ஆணையாளர் நாயகம்

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்தார். பரீட்சை திணைக்களத்தில் இன்று (13) நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அதன்படி, எதிர்வரும் 15ம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணிக்கு பரீட்சை ஆரம்பமாகும். காலை 9.30 மணி முதல் 10.45 மணி வரை இரண்டாம் பகுதி நடைபெறவுள்ளதுடன், அதே தினம் காலை 11.15 மணி முதல் … Read more