இணையவழி ஆட்சேர்ப்பு காரணமாக அரசாங்கத்திற்கு 100 இலட்சம் ரூபாய் இலாபம்..

இவ்வருடம் கல்வியற் கல்லூரி மாணவர்களை இணையவழி ஊடாக ஆட்சேர்ப்பு செய்ததன் மூலம் அரசாங்கத்திற்கு சுமார் பத்து மில்லியன் ரூபா சேமிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார். கல்வி அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்.. கல்வியற் கல்லூரி மாணவர்களை ஆட்சேர்ப்பதற்காக இதற்கு முன்னர் 13.5 மில்லியன் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. இம்முறை அதற்காக 3.5 மில்லியன் ரூபாய் மாத்திரமே செலவிடப்பட்டது. இதனால் அரசாங்கத்திற்கு 10 மில்லியன் ரூபாவை … Read more

தெற்காசிய கனிஷ்ட தடகள செம்பியன்ஷிப் போட்டி – இலங்கைக்கு கிடைத்த தங்க பதக்கங்கள்

20 வயதுக்குட்பட்ட தெற்காசிய கனிஷ்ட தடகள செம்பியன்ஷிப் போட்டியில் பெண்களுக்கான 800 மீற்றர் இறுதிப் போட்டியை 2 நிமிடம், 10 வினாடிகளில் ஓடி முடித்து தருஷி அபிஷேகா, இலங்கைக்கான முதலாவது தங்கப் பதக்கத்தை பெற்றுள்ளார். இப்போட்டியில் பந்தயத்தை 2 நிமிடம் 12 வினாடிகள் நிறைவு செய்த இலங்கையின் சன்சலா ஹிமாஷானி வெண்கலப் பதக்கத்தை வென்றார். இதேவேளை, ஆண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டியில் இலங்கையின் சவிது அவிஷ்காவும் தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார்.இவர் போட்டியை 1 நிமிடம், 49 … Read more

இலங்கையின் நிதி நிலைமை மற்றும் மறுசீரமைப்பு நிகழ்ச்சித் திட்டத்திற்காக ஆசியா அபிவிருத்தி வங்கியின் கடன் உதவி பெற்றுக் கொள்வதற்கு அனுமதி

இலங்கையின் நிதி துறையின் நிலைமை மற்றும் மறுசீரமைப்பு நிகழ்ச்சித் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக உப வேலைத் திட்டங்கள் இரண்டின் கீழ் 400 மில்லியன் அமெரிக்க டாலர் ஒதுக்கீட்டை அடிப்படையாகக் கொண்டு கடன் நிதி உதவியை ஆசிய அபிவிருத்தி வங்கியில் இருந்து பெற்றுக் கொள்வதற்கு  2023-09-25 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.    அதன்படி 2023 டிசம்பர் மாதமளவில் 200 அமெரிக்க டாலர் கடனுதவி முதலாவது உப வேலைத் திட்டத்திற்காக பெற்றுக்கொள்ளப்பட்டது.    அதன் இரண்டாவது உப … Read more

தபால் மூலம் வாக்களிப்பிற்கு இன்று (12) இறுதி நாள்

2024 செப்டம்பர் 21 ஆம் திகதி நடைபெறுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பிற்கான இறுதி நாள் இன்று (செப்டம்பர் 12 ) ஆகும். கடந்த நான்காம் திகதி தபால் மூல வாக்களிப்பு ஆரம்பிக்கப்பட்டதுடன் செப்டம்பர் ஐந்தாம் மற்றும் ஆறாம் திகதிகளில் தபால் மூல வாக்களிக்களிப்பு இடம் பெற்றது. எனினும் இந்த திகதிகளில் வாக்களிக்கத் தவறிய அரசாங்க ஊழியர்களுக்காக நேற்றும் (11) இன்றும் (12) சந்தர்ப்பம் வழங்கப்பட்டது. அந்த வகையில் தபால் மூல வாக்களிப்புக்காக சந்தர்ப்பம் … Read more

இஸ்ரேலில் விவசாயத்துறை வேலைவாய்ப்புக்காக செல்லும் 69 பேருக்கு பயணச்சீட்டுக்கள் வழங்கி வைப்பு

இஸ்ரேலில் விவசாயத் துறையில் பணிக்குச் செல்லும் 69 69 பேருக்கு இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் (09) விமானப் பயணச்சீட்டுக்களை வழங்கி வைத்தது. இஸ்ரேல், இலங்கை அரசுக்கு இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் பிரகாரம் இதுவரை 2,252 இளைஞர்கள் இஸ்ரேலில் விவசாய கைத்தொழில் துறையில் வேலை வாய்ப்புகளைப் பெற்றுள்ளனர். மேலும் இவ் ஒப்பந்தத்தின் கீழ் 5 வருடங்களும் 5 மாத காலத்துக்கு அங்கு பணிபுரிய அனுமதிக்கப்படுகிறார்கள். இலங்கை அரசு சார்பாக இஸ்ரேலிய வேலைவாய்ப்புகளுக்கு இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் … Read more

புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் $577.5 மில்லியன் அமெரிக்க டொலர்களை நாட்டிற்கு அனுப்பியுள்ளனர்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாட்டைக் பொறுப்பேற்றதிலிருந்து புலம்பெயர்ந்த தொழிலாளர்களால் 12.4 பில்லியன் அமெரிக்க டொலர்கள் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. கடந்த ஆகஸ்ட் மாதம் 577.5 மில்லியன் டொலர்களை புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் வங்கி முறை மூலம் இலங்கைக்கு சட்டப்பூர்வமாக அனுப்பியுள்ளனர். 2023 ஆண்டு ஆகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடுகையில் இவ்வருடம் ஓகஸ்ட் மாதத்தில் நாட்டுக்கு அனுப்பப்பட்டுள்ள பணம் 11 வீதத்தால் அதிகரித்துள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள் பதவியேற்று தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சை முன்னாள் அமைச்சர் மனுஷ … Read more

பெருந்தொகையான மஞ்சள் கடற்படையினரால் மீட்பு

புத்தளம் – சேரக்குளி கடற்பிரதேசத்தில் இருந்து ஒருதொகை மஞ்சள் நேற்று (10) கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன. வடமேற்கு கடற்படைக் கட்டளையின் விரைவான நடவடிக்கை கடற்படைப் படையினர் குறித்த கடற்பிரதேசத்தில் உள்ள காட்டுப் பகுதியில் கைவிடப்பட்டிருந்த சில உரமூடைகளை சோதனை செய்துள்ளனர். இதன்போது,  குறித்த உரமூடைகளில் உலர்ந்த மஞ்சள் இருந்தமை தெரியவந்துள்ளது. குறித்த காட்டுப்பகுதியில் இருந்து மீட்கப்பட்ட 14 உர மூடைகளில் இருந்து 470 கிலோ கிராம் மஞ்சள் காணப்பட்டதாக கடற்படையினர் தெரிவித்தனர். குறித்த மஞ்சள் இந்தியாவில் இருந்து கடல்மார்க்கமாக … Read more

புலமைப்பரிசில் பரீட்சைக்கான மேலதிக வகுப்புகள் இன்று (11) நள்ளிரவு முதல் தடை

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான அனைத்து மேலதிக வகுப்புக்கள், விரிவுரைகள், கருத்தரங்குகள் மற்றும் செயலமர்வுகள் இன்று (11) நள்ளிரவு முதல் தடை செய்யப்பட்டுள்ளதாக பரீட்சை திணைக்களம் அறிக்கை வெளியிட்டுள்ளது. இதன்படி, புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான எதிர்பார்ப்பு வினாக்கள் அடங்கிய வினாத்தாளை அச்சடித்து விநியோகிப்பதும் இன்று நள்ளிரவு முதல் தடை செய்யப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல், பரீட்சை வினாத்தாள்களின் வினாக்களை வழங்குதல் அல்லது அதனை ஒத்த வினாக்களை பெற்றுக்கொடுப்பதாக சுவரொட்டிகள், துண்டுப்பிரசுரங்கள், கையேடுகள் விநியோகித்தல், அவற்றை … Read more

2025 அரசாங்க ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு   – நிதி இராஜாங்க அமைச்சர்

அமைச்சரவை ஊடாக இரண்டு தடவைகள் அனுமதி வழங்கப்பட்டு, 2025ஆம் ஆண்டு அரசாங்க சேவை சம்பள அதிகரிப்பை வழங்குவதற்கு எவ்வித இடையூறுகளும் இல்லை என  நிதி இராஜாங்க அமைச்சர் கலாநிதி ரஞ்சித் சியம்பலாபிடிய குறிப்பிட்டார். அத்துடன் 25000 ரூபா வாழ்க்கைச் செலவுப் படி மற்றும் 24 வீதம் குறைந்த அடிப்படைச் சம்பளம் அதிகரிப்பதற்கு சகல சட்ட ரீதியான அனுமதிகளும் கிடைத்துள்ளதாகவும் சுட்டிக்காட்டினார். பல வருடங்களாக இடம்பெற்ற சம்பள முரண்பாடு தொடர்பாக கண்டடிறிவதற்காக ஜனாதிபதி ஆணைக்குழுவை 2024 மே 27ஆம் … Read more

தபால் மூல வாக்களிக்க தவறியவர்கள் இன்று வாக்களிக்க முடியும்

ஜனாதிபதி தேர்தலுக்கான தபால் மூல வாக்களிக தவறியவர்கள்  இன்றும் (11) நாளையும் (12) வாக்களிக்க முடியும் என்று    தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தபால் மூலம் வாக்களிப்பதற்காக கடந்த 4, 5 மற்றும் 6ம் திகதிகளில் வாக்களிக்க முடியாத அனைத்து அரசு ஊழியர்களும் இந்த இரண்டு நாட்களிலும் தபால் மூலம் வாக்களிக்கலாம். இந்த இரண்டு தினங்களில் தபால் மூல வாக்குகளைப் அடையாளப்படுத்தாவிட்டால் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறும் செப்டம்பர் 21ஆம் திகதி அல்லது வேறு எந்த நாளிலோ வாக்குகளை … Read more