3 ஆவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி வெற்றி

இலங்கை இங்கிலாந்து அணிகளுக்கிடையில் லண்டன்-ஓவல் மைதானத்தில் இடம்பெற்ற மூன்றாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 8 விக்கட்டுக்களினால் வெற்றி பெற்றுள்ளது. 219 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, 4ஆம் நாளில் 2 விக்கட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது. அந்தவகையில், இலங்கை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் பெத்தும் நிஸ்ஸங்க தனது இரண்டாவது சதத்தை பெற்றுக்கொண்டார். இலங்கை அணிக்கும் இங்கிலாந்து அணிக்கும் இடையிலான மூன்றாவதும் இறுதியுமான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் … Read more

ஜனாதிபதி தேர்தல் – அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை

நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு எதிர்வரும் செப்டெம்பர் 20 ஆம் திகதி அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. விடுமுறை வழங்கப்படும் பாடசாலைகள் மீண்டும் எதிர்வரும் 23 ஆம் திகதி ஆரம்பமாகும். மேலும், வாக்குச் சாவடி மையங்களாகப் பயன்படுத்தப்படும் பாடசாலைகளை செப்டம்பர் 19 ஆம் திகதி பாடசாலை நேரம் முடிந்த பின்னர் கிராம அலுவலர்களுக்கு வழங்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணும் நிலையங்களாக பயன்படுத்தப்படும் பாடசாலைகளுக்கு அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளபடி தொடர்புடைய காலங்களில் … Read more

அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்புக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கவில்லை என வெளியான செய்திகள் பொய்யானவை

• அதற்கான அங்கீகாரம் ஏற்கனவே பெறப்பட்டுள்ளது. • நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சர் என்ற வகையில், ஜனாதிபதி 12-08-2024 ஆம் திகதி குறித்த அமைச்சரவைப் பத்திரத்தை சமர்ப்பித்துள்ளார். • உணர்வுபூர்வமான விடயங்களின் போது மக்களை தவறாக வழிநடத்த வேண்டாம். 2025 ஆம் ஆண்டு அமுல்படுத்தப்படவுள்ள சம்பள அதிகரிப்புக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கவில்லை என வெளியாகியுள்ள செய்திகள் உண்மைக்குப்புறம்பானவை என்பதோடு அதற்கான அனுமதி ஏற்கனவே கிடைத்துள்ளது.   2024 மே மாதம் 27 திகதியிட்ட … Read more

அக்ரஹார மருத்துவக் காப்புறுதி பயன்களை அதிகரித்தல்

அனைத்து ஓய்வூதியர்கள் மற்றும் அரச துறையிலுள்ள அனைத்து ஊழியர்களுக்கும் அக்ரஹார மருத்துவக் காப்புறுதி பயன்களை அதிகரிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அனைத்து ஓய்வூதியர்கள் மற்றும் அரச துறையிலுள்ள அனைத்து ஊழியர்களின் சம்பளத்தில் 1,000ஃ- ரூபா பங்களிப்புத் தொகையை அறவிட்டு தேசிய காப்புறுதி நிதியத்திற்கு வைப்பிலிடுவதற்கும், அதன்மூலம் உத்தேசிக்கப்பட்டுள்ள விரிவான வசதிகளுடன் கூடிய மருத்துவப் பாதுகாப்புத் திட்டத்தை 2025 ஆம் ஆண்டு தொடக்கம் நடைமுறைப்படுத்துவதற்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தொடக்கம் மிகவும் … Read more

புகையிரத நிலையங்களுக்கு அருகாமையில் உள்ள கட்டிடங்கள் வணிக மையங்களாக உருவாக்கப்படும்..

புகையிரத திணைக்களத்திற்குச் சொந்தமான காணிகளை அரச-தனியார் பங்ககளிப்புடன், அபிவிருத்தி செய்ய விரும்பும் முதலீட்டாளர்களை இனங்காண்பதற்கு, தமது ஆரவத்தை வெளிப்படுத்துமாறு போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன கோரிக்கை விடுத்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (10) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். அதனடிப்படையில், கொழும்பு நகரை அண்மித்துள்ள கொள்ளுப்பிட்டி, பம்பலப்பிட்டி, வெள்ளவத்தை, கொம்பனித்தெரு, தெஹிவளை ஆகிய புகையிரத நிலையங்களை அபிவிருத்தி செய்வதற்கான … Read more

பண்டங்கள் இறக்குமதியின் போது அறவிடப்படும் இறக்குமதி வரி திருத்தம்

பண்டங்கள் இறக்குமதியின் போது அறவிடப்படும் இறக்குமதி வரியைத் திருத்தம் செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. பண்டங்கள் இறக்குமதி செய்யும் போது அறவிடப்படும் வரி வகைகளாவன, சுங்க இறக்குமதி வரி, செஸ் வரி, விசேட பண்டங்களுக்கான வரி மற்றும் துறைமுகங்கள் விமான நிலையங்கள் அபிவிருத்தி வரி தொடர்பிலான கொள்கை ரீதியாக அமுல்படுத்த வேண்டிய தேவை கண்டறியப்பட்டுள்ளது. விசேட பண்டங்கள் வரிக்கிணங்க ஒருசில இறக்குமதிப் பண்டங்களைக் குறித்த வரியிலிருந்து விடுவித்து சுங்க இறக்குமதி வரி உள்ளிட்ட பொதுவான இறக்குமதி வரிக் … Read more

தேர்தல் முறைப்பாடுகளின் சாரம்சம்..

கடந்த 24 மணித்தியாலங்களுக்குள் (2024.09.09 பி.ப 04.30 வரை) தேர்தல் சட்டவிதிகளை மீறி செயற்பட்டமை தொடர்பாக 182 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன என்று தேர்தல் ஆணைக்குழு அறிக்கை வெளியிட்டுள்ளது. இதேவேளை, 2024.07.31ஆம் திகதி தொடக்கம் 2024.09.09ஆம் திகதி வரையிலும் கிடைக்கப்பெற்றுள்ள மொத்த முறைப்பாடுகளின் எண்ணிக்கை 3223 என்றும் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பல்கலைக்கழக மாணவர்களின் மஹபொல மற்றும் மாணவர் உதவுதொகைகளை அதிகரித்தல்

மஹபொல புலமைப்பரிசில் தவணைக்கட்டணத்தை 7,500/- ரூபா வரைக்கும், மாணவர் உதவுதொகை தவணைக்கட்டணத்தை 6,500/- ரூபா வரைக்கும் 2025 ஏப்ரல் மாதத்திலிருந்து நடைமுறைக்கு வரும் வகையில் அதிகரிப்பதற்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. பல்கலைக்கழக மாணவர்களுக்கு வழங்கப்படும் மஹபொல மற்றும் மாணவர் உதவுதொகை தவணைக் கட்டணங்கள் 2015 ஆம் ஆண்டு தொடக்கம் இதுவரை அதிகரிக்கப்படாமை குறிப்பிடத்தக்கது. இது தொடர்பாக நேற்று (09.09.2024) நடைபெற்ற அமைச்சரவையில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் பின்வருமாறு: பல்கலைக்கழக மாணவர்களின் மஹபொல மற்றும் மாணவர் உதவுதொகைகளை அதிகரித்தல் பல்கலைக்கழக … Read more

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை : 11ஆம் திகதி நள்ளிரவு முதல் மேலதிக வகுப்புகளுக்கு தடை!

எதிர்வரும் செப்டம்பர் 15ஆம் திகதி நடைபெறவுள்ள தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை தொடர்பான வழிகாட்டல் வகுப்புகள் 2024 செப்டம்பர் 11ஆம் திகதி நள்ளிரவு 12.00 மணியிலிருந்து பரீட்சை முடியும் வரை நடாத்துவதற்குத் தடை செய்யப்படுவதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. அவ்வாறே பரீட்சை வினாத்தாள்களின் வினாக்களை வழங்குதல் அல்லது அதனை ஒத்த வினாக்களை பெற்றுக்கொடுப்பதாக சுவரொட்டி, துண்டுப்பிரசுரம் விநியோகித்தல் போன்றவை அல்லது அவற்றை வைத்திருத்தல் ஆகியவை தடை செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து வாகனங்களிலும் ஒட்டப்பட்டுள்ள ஒட்டிகளை (ஸ்ரிக்கர்) அகற்றுதல்..

2024 ஜனாதிபதித் தேர்தல் பிரகடனம் செய்யப்பட்டிருப்பதனால், தேர்தல் சட்டவிதிகளை மீறும் வகையில் தனியார் பஸ் வண்டிகள், முச்சக்கர வண்டிகள் உள்ளிட்ட தனியார் வாகனங்களில், கட்சிகளுக்கு அல்லது வேட்பாளர்களுக்கு ஆதரவு காட்டும் நோக்குடன், வாசகங்கள், சின்னங்கள், புகைப்படங்கள் அடங்கிய ஒட்டிகள் (ஸ்ரிக்கர்), கொடிகள் முதலியவற்றை காட்சிப்பட்டுள்ளமை தொடர்பாக தேர்தல் ஆணைக்குழுவுக்கு முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன. அவை தேர்தல் சட்டவிதிகளை மீறும் செயல் என்றும், அவற்றை உடனடியாக அகற்றுமாறும் தேர்தல் ஆணைக்குழு அறிக்கை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக ஆணைக்குழு வெளியிட்டுள்ள … Read more