நாட்டின் சில பகுதிகளில் இன்றும் மழையுடனான காலநிலை..

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு, தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. ஊவா மாகாணத்திலும் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை … Read more

தேர்தல் முறைப்பாடுகளின் சாரம்ச

கடந்த 24 மணித்தியாலங்களுக்குள் (2024.09.08 பி.ப 04.30 வரை) தேர்தல் சட்டவிதிகளை மீறி செயற்பட்டமை தொடர்பாக 178 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன என்று தேர்தல் ஆணைக்குழு அறிக்கை வெளியிட்டுள்ளது. இதேவேளை, 2024.07.31ஆம் திகதி தொடக்கம் 2024.09.08ஆம் திகதி வரையிலும் கிடைக்கப்பெற்றுள்ள மொத்த முறைப்பாடுகளின் எண்ணிக்கை 3041 என்றும் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.    

வாக்குச் சீட்டு விநியோகப் பணிகள் 51 வீதம் முடிவுற்றுள்ளன

இந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்குச் சீட்டுகளில் 51மூ விநியோகிக்கப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பிரதி தபால் மா அதிபர் ராஜித ரணசிங்க தெரிவித்தார். அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ செய்தி இணையத்தளத்தில் இன்று (09) கருத்து தெரிவிக்கும் போதே பிரதி தபால் மா அதிபர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இலங்கையிலுள்ள அனைத்து வாக்காளர்களுக்கும் உத்தியோகபூர்வ வாக்காளர் சீட்டுக்கள் வழங்கப்படும் எனத் தெரிவித்த பிரதி தபால் மா அதிபர், தேர்தல்கள் ஆணைக்குழுவில் பதிவு செய்யப்பட்டுள்ள சுமார் ஒரு கோடியே எழுபத்தொரு இலட்சத்திற்கு அதிகமான … Read more

இங்கிலாந்து அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 156 ஓட்டங்கள்

சுற்றுலா இலங்கை அணிக்கும் இங்கிலாந்து அணிக்கும் இடையிலான மூன்றாவதும் இறுதியுமான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் தற்சமயம் ஓவல் மைதானத்தில் இடம்பெற்று வருகிறது. போட்டியில் தமது இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 156 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது. அந்த அணி சார்பில் துடுப்பாட்டத்தில் Jamie Smith  அதிகபட்சமாக 67 ஓட்டங்களையும், Dan Lawrence 35 ஓட்டங்களையும் பெற்றனர். பந்து வீச்சில் இலங்கை அணி சார்பில் Lahiru Kumara 04 … Read more

செல்வேரி சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் திட்டம் மக்கள் பாவனைக்கு..

மன்னார் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மன்னார்-தலைமன்னார் பிரதான வீதி, செல்வேரி கிராமத்தில் உள்ள மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் அமைக்கப்பட்ட செல்வேரி சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் திட்டம் நேற்று சனிக்கிழமை (7) மாலை வைபவரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. மன்னார் செல்வேரி பகுதியில் உள்ள பொதுமக்கள் நீண்ட  காலமாக குடிநீர் பெறுவதில் பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வந்த நிலையில் அவர்களின் கோரிக்கைக்கு அமைவாக இராணுவத்தின் 54 ஆவது  காலாட்படையின் ஒழுங்கமைப்பில் குறித்த கிராம மக்கள் குடிநீர் பெறும் … Read more

2024 சிறு போகத்தில் சுற்றுச்சூழலுக்கு நட்பான உரப் பாவனை மூலம் பெற்றுக்கொண்ட விளைச்சல் கணக்கெடுப்பு ..

2024 சிறு போகத்தில் சுற்றுச்சூழலுக்கு நட்பான உரப் பாவனை மூலம் பெற்றுக்கொண்ட விளைச்சல் கணக்கெடுப்பு வேலைத்திட்டத்தை உணவுப் பாதுகாப்பு மற்றும் கமத்தொழில் பற்றிய துறைசார் மேற்பார்வைக்குழு நேரடியாகப் பார்வையிட்டது சுற்றுச்சூழலுக்கு நட்பான உரப் பாவனை மூலம் பெற்றுக்கொண்ட நெல் விளைச்சல் கணக்கெடுப்பு வேலைத்திட்டத்தை பார்வையிடுவதற்கு கடந்த ஆகஸ்ட் 28 ஆம் திகதி உணவுப் பாதுகாப்பு மற்றும் கமத்தொழில் பற்றிய துறைசார் மேற்பார்வைக்குழு கம்பஹா (மினுவாங்கொட) பகுதியில் கண்காணிப்பு சுற்றுப்பயணமொன்றை மேற்கொண்டது.     சுற்றுச்சூழலுக்கு நட்பான உரங்களை இந்நாட்டின் … Read more

நான்கு புதிய மேல்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள் ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம்

நான்கு புதிய மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள் இன்று (06) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர். மேல் நீதிமன்ற நீதிபதிகளான கே. எம். ஜி. எச். குலதுங்க, டி. தொடவத்த மற்றும் ஆர்.ஏ. ரணராஜா ஆகிய நீதிபதிகள் மற்றும் முன்னாள் சிரேஷ்ட பிரதி சொலிசிட்டர் ஜெனரல் எம்.சி.எல்.பி. கொபல்லாவ ஆகியோர் இவ்வாறு மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். அரசியலமைப்பின் 107 ஆவது சரத்தின்படி, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் 2024 செப்டெம்பர் 06 … Read more

சுங்கத் திணைக்களம் வருமான வரலாற்றில் 1000 பில்லியன் ரூபா இலாபம்

• 2024இற்கான IMF வருவாய் இலக்கை இலங்கை எட்ட முடியும். • எந்தவொரு தரப்பினருக்கும் அடிபணியாமல் செயற்பட சுங்க அதிகார சபை அதிகாரிகளுக்கு இடமளிக்கப்பட்டதால் இந்த வாய்ப்பு கிட்டியது. • ஜனாதிபதி மற்றும் இராஜாங்க அமைச்சரின் வழிகாட்டல் முக்கியமானது – சுங்கத் திணைக்களப் பணிப்பாளர் நாயகம் சரத் நோனிஸ். எந்தவொரு தரப்பிற்கும் அடிபணியாமல் சுயாதீனமாக செயற்பட இலங்கை சுங்க திணைக்களத்தின் கட்டுப்பாட்டு அதிகாரச பைக்கும் அதன் அதிகாரிகளுக்கும் சந்தர்ப்பம் வழங்கியதன் மூலம் வரலாற்றில் முதல் தடவையாக இவ்வருடத்தின் … Read more

இராஜாங்க அமைச்சர்கள் நால்வர் பதிவி நீக்கம்

துறைமுகங்கள் மற்றும் விமான சேவைகள் இராஜாங்க அமைச்சர் பிரேமலால் ஜயசேகர, மின்சக்தி மற்றும் எரிசக்தி இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த, விவசாய இராஜாங்க அமைச்சர் மொஹொன் பிரியதர்ஷன டி சில்வா, நெடுஞ்சாலைகள் இராஜாங்க அமைச்சர் சிறிபால கம்லத் ஆகியோர் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 47(3) (அ) பிரிவின் கீழ் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் அடிப்படையில் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இவர்கள் பதவி நீக்கப்பட்டுள்ளமை … Read more

களுபோவில வைத்தியசாலையில் அவசர விபத்து, சிகிச்சை மற்றும் இரசாயன ஆய்வுகூட வசதிகள்  விஸ்தரிப்பு

கொழும்பு தெற்கு களுபோவில போதனா வைத்தியசாலையில் 8 மாடிகளைக் கொண்ட மிலேனியம் விடுதிக் கட்டடத் தொகுதி அவசர விபத்து, சிகிச்சை மற்றும் இரசாயன ஆய்வுகூட பிரிவுகள் உட்பட நோயாளிகளுக்கான சிகிச்சைப் பிரிவுகள் பல மக்கள் பாவனைக்காக நேற்று கையளிக்கப்பட்டன.  சுகாதார செயலாளர் விசேட வைத்தியர் பாலித மஹீப்பாலவின் தலைமையில் இக் கையளிப்பு நிகழ்வு நேற்று (05) இடம் பெற்றது.    சுகாதார மற்றும் கைத்தொழில் அமைச்சர் வைத்தியர் ரமேஷ் பத்திரனவின் யோசனைக்கு இணங்க அரசாங்க வைத்தியசாலைகளின் பொறிமுறையை … Read more