3ஆவது டெஸ்ட் – நாணய சுழற்சியில் இலங்கை அணி வெற்றி
இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3ஆவது டெஸ்ட் போட்டி லண்டன் ஓவர் மைதானத்தில் ஆரம்பமாகியுள்ளது. போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்றுள்ள இலங்கை அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளது. இன்றைய போட்டிக்கான இலங்கை அணியில் இரண்டு மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இடது கை சுழற்பந்து வீச்சாளர் பிரபாத் ஜயசூர்ய மற்றும் தொடக்க ஆட்டக்காரர் நிஷான் மதுஷங்கவுக்குப் பதிலாக விஷ்வ பெர்னாண்டோ மற்றும் குசல் மெண்டிஸ் ஆகியோர் அணிக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.