நாட்டின் சில பிரதேசங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி..

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு, தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. 2024 செப்டம்பர் 03ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு 2024 செப்டம்பர் 03ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது. மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த … Read more

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான நேர அட்டவணை – பரீட்சைகள் திணைக்களம்

இந்த வருடம் நடைபெறவுள்ள தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான நேர அட்டவணையினை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. பரீட்சையின் இரண்டாம் பாகம் காலை 9.30 மணி முதல் 10.45 மணிவரையிலும், முதலாம் பாகம் காலை 11.15 மணி முதல் 12.15 மணிவரையிலும் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களின் வருகைப் பதிவேடு சம்பந்தப்பட்ட பாடசாலைகளின் அதிபர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகப் பரீட்சைகள் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுவரை பெயர்ப்பட்டியல் கிடைப்பெறாத பாடசாலைகளின் அதிபர்கள் www.doenets.lk அல்லது https://onlineexams.gov.lk/eic … Read more

யாழ்ப்பாணம் பலாலி சர்வதேச விமான நிலைய அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல் 

யாழ்ப்பாணம் பலாலி சர்வதேச விமான நிலைய அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட பதில் அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் இன்று (02.09.2024) காலை 10.00 மணிக்கு மாவட்டச் செயலக அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது. இக் கலந்துரையாடலில் யாழ்ப்பாணம் பலாலி சர்வதேச விமான நிலைய அபிவிருத்திக்கான நீர் வசதிகள், மின்சாரம் வசதிகள், காணி அபிவிருத்தி மற்றும் சுற்றுலா அபிவிருத்தி போன்ற விடயங்கள் தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டன.  இக்கலந்துரையாடலில் மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர், உதவி … Read more

அஞ்சல் வாக்கு அடையாளமிடுதல் பற்றிய அறிவித்தல்…

2024 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலுக்கான அஞ்சல் வாக்கு அடையாளமிடுதல் எதிர்வரும் 5 மற்றும் 6 ஆம் திகதிகளில் இடம் பெற உள்ள நிலையில், வாக்கு அடையாளமிடுதல் தொடர்பாக தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கை,

புனரமைக்கப்பட்ட வவுனியா சபுமல்கஸ்கட ஸ்தூபியின் சிகரம் பாதுகாப்பு செயலாளரினால் திறந்து வைப்பு

வவுனியா, சபுமல்கஸ்கட ரஜமஹா விகாரையில் புனரமைக்கப்பட்ட ஸ்தூபியின் சிகரத்தை பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன அவர்கள் சனிக்கிழமை (ஆகஸ்ட் 31) திறந்து வைத்து மகா சங்கத்தினரிடம் கையளித்தார். ஜெனரல் குணரத்ன அவர்கள் வடமாகாண பிரதான சங்கநாயக்க. கல்கமுவ சாந்தபோதி நாயக்க தேரரின் அழைப்பின் பேரில் இந்நிகழ்வில் கலந்து கொண்டார். புனரமைக்கப்பட்டசபுமல்கஸ்கட ராஜ மகா விகாரை யுத்தத்தின் போது கைவிடப்பட்டஇருந்து அதன் பின் புனரமைக்கப்பட்ட பல பண்டைய விகாரைகள் ஒன்றாகும். புனரமைப்பு பணிகள் இராணுவம் (SLA) மற்றும் … Read more

சென்னை – பலாலிக்கிடையிலான புதிய விமான சேவை நேற்று ஆரம்பம்

சென்னைக்கும் யாழ். பலாலிக்குமிடையேயான இண்டிகோ (Indigo) ஏயார்லைன்ஸ் நிறுவனத்தின் புதிய விமான சேவை நேற்று (01) முதல் ஆரம்பமாகியது. நேற்று முதல் தினந்தோறும் சென்னையிலிருந்து யாழ். பலாலிக்கு விமான சேவை நடத்தப்படவுள்ளதாக இண்டிகோ ( Indigo ) ஏயார்லைன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. தற்போது யாழ். பலாலிக்கு தினசரி விமான சேவையை இந்தியாவின் அலையன்ஸ் ஏயார் விமானம் ( Alliance Air ) நடத்துகிறது. சென்னையில் இருந்து பயணத்தை ஆரம்பித்த விமானமானது 52 பயணிகளுடன் நேற்று பிற்பகல் 3.07 … Read more

டெங்கு அபாயமுள்ள மாவட்டங்கள்

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையினால் கொழும்பு, கம்பஹா, களுத்துறை, இரத்தினபுரி மற்றும் கண்டி ஆகிய 5 மாவட்டங்களில் டெங்கு அபாய வலயங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. இன்று (02) முதல் எதிர்வரும் 04 ஆம் திகதி வரை 03 நாட்களுக்கு அந்த வைத்திய அதிகாரி பிரிவுகளில் விசேட நுளம்பு ஒழிப்பு வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் நாட்டில் பதிவாகியுள்ள டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 36,728 ஆகவும் அதில் … Read more

பொலிஸ் விசேட அதிரடிப் படையின் 40 ஆவது வருட பூர்த்தி நிகழ்வு…

இலங்கை பொலிஸ் விசேட அதிரடிப் படையின் 40ஆவது வீர நிறைவை முன்னிட்ட நிகழ்வு நேற்று (01) அதிரடிப் படைப் பயிற்சிக் கல்லூரியில் இடம்பெற்றது. சிரேஷ்ட உதவிப் பொலிஸ் மா அதிபர், விசேட அதிரடிப் படையின் கட்டளை அதிகாரி சட்டத்தரணி வருண ஜயசுந்தரவின் தலைமை மற்றும் ஒழுங்கமைப்பில் இந்நிகழ்வு நடைபெற்றது. உதவிப் பொலிஸ் மா அதிபர் விசேட அதிரடிப் படையின் கட்டளை அதிகாரி டி. டி. டி. கே. ஹெட்டிஆரச்சி யின் ஒருங்கிணைப்பு மற்றும் ஏற்பாட்டில் இவ் 40ஆண்டுப் … Read more

அஞ்சல் மூல வாக்கு அடையாளமிடுதல் மற்றும் செல்லுபடியான அடையாள அட்டைகள்…

2024 ஜனாதிபதி தேர்தலுக்கான அஞ்சல் மூல வாக்கு அடையாளமிடுதல் மற்றும் அதற்குரிய செல்லுபடியான அடையாள அட்டைகள் எவ்வாறு அமைய வேண்டும் என்பது குறித்து தேர்தல் ஆணைக்குழு அறிக்கை வெளியிட்டுள்ளது. ஆணைக்குழுவினால் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை….

நாட்டின் சில பிரதேசங்களில் 75 மி.மீ அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது..

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு, தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. 2024  செப்டம்பர் 02ஆம் திகதிக்கான  பொதுவான வானிலை முன்னறிவிப்பு 2024 செப்டம்பர் 01ஆம் திகதி நண்பகல் 12.00 மணிக்கு வெளியிடப்பட்டது. மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மி.மீ அளவான ஓரளவு … Read more