எவ்வித தரமற்ற மருந்துகளையும் பெறுகை முறையில்  பெற்றுக் கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை… 

உயர்தரமற்ற எந்தவொரு மருந்துப் பொருளையும் பெறுகை முறையின் மூலம் பெற்றுக் கொள்வதற்கு  நடவடிக்கை எடுக்கவில்லை என சுகாதார மற்றும் கைத்தொழில் அமைச்சர் வைத்தியர் ரமேஷ் பத்திரன தெரிவித்தார். சுகாதார அமைச்சின் கேட்போர் கூடத்தில் நேற்று முன்தினம் (30) இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர்களுடனான கலந்துரையாடலின் போது அமைச்சர் இதனை குறிப்பிட்டார்.   இவ் ஊடக கலந்துரையாடலில் விடயங்களைத் தெளிவு படுத்திய சுகாதார அமைச்சர்;….   “தற்போது சுகாதாரத் தறை தொடர்பாகவும், மருந்து கொள்வனவு குறித்தும் தவறான மற்றும் பொய்யான … Read more

நாட்டின் சில பிரதேசங்களில் இன்றும் அவ்வப்போது மழை..

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு, தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. 2024 செப்டம்பர் 01ஆம் திகதிக்கான  வானிலை முன்னறிவிப்பு 2024 ஓகஸ்ட் 01ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது. மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மி.மீ … Read more

இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகருக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் சந்திப்பு

இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்த ஆராயப்பட்டது. • கொழும்பு பாதுகாப்பு மாநாட்டின் பொதுச் செயலகத்தை நிறுவுவதற்கான சாசனம் மற்றும் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.   • தொழில்நுட்ப முன்னேற்றங்களால் ஏற்படும் உள்ளக சவால்களை நிர்வகிப்பது தேசிய பாதுகாப்புக்குட்பட்டது – தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் பணிக்குழாம் பிரதானியுமானசாகல ரத்நாயக்க.   இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தொவால் மற்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க … Read more

எரிபொருள் விலைகளில் மாற்றம்

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் (31) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகளை குறைப்பதற்கு தீர்மானித்துள்ளது. இதன்படி 344 ரூபாயாக காணப்பட்ட 92 ரக பெற்றோல் லீற்றரின் விலை 12 ரூபாவினால் குறைக்கப்பட்டுளதுடன், அதன் புதிய விலை 332 ரூபாவாகும். 379 ரூபாயாக விற்பனை செய்யப்பட்ட ஒக்டேன் 95 ரக பெற்றோல் லீற்றரின் விலை 02 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 377 ரூபாவாகும். 317 ரூபாயாக காணப்பட்ட ஓட்டோ டீசல் லீற்றரின் விலை … Read more

வர்த்தக வெடிபொருட்களைப் பயன்படுத்தப்படுத்தி பிடித்ததாக சந்தேகிக்கப்படும் ஒரு தொகை மீன்களுடன் சந்தேக நபர்கள் கடற்படையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்… 

இலங்கை கடற்படை திருகோணமலை மாவட்டத்தில் நிலாவெளி கடற்பிரதேசத்தில் நேற்று (30) இடம்பெற்ற சுற்றிவளைப்பில், சட்ட விரோதமாக வர்த்தக வெடிபொருட்களைப் பயன்படுத்தப்படுத்தி பிடித்ததாக சந்தேகிக்கப்படும் ஒரு தொகை மீன்கள் ஆயிரத்து எண்ணூற்று அறுபத்தைந்து (1865) கிலோ கிராமுடன் விற்பனை செய்வதற்கு தன் தயாராகிய நபர் ஒருவரை மீன்களுடன் கடற்படையிடம் ஒப்படைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கு சொந்தமான கடல் மற்றும் கடற்கரை பிராந்தியத்தில் இடம்பெறும் சட்ட விரோத மீன்பிடி செயல்பாடுகளை நிறுத்தி, சட்ட ரீதியாக மீன்படி செயற்பாடுகளில் ஈடுபடுவதை ஊக்கப்படுத்துவதற்காக … Read more

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணை அடிப்படையாகக் கொண்ட முதன்மைப் பணவீக்கம் ஓகஸ்டில் சடுதியாக வீழ்ச்சி

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் (CCPI, 2021=100) ஆண்டிற்கு ஆண்டு மாற்றத்தினால் அளவிடப்பட்டவாறான முதன்மைப் பணவீக்கம், 2024 யூலை மாதம் 2.4 சதவீதத்திலிருந்து 2024 ஓகஸ்ட் மாதம் 0.5 சதவீதத்திற்கு சடுதியாக குறைவடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. முதன்மைப் பணவீக்கத்தில் ஏற்பட்ட இவ்வீழ்ச்சியானது பரந்தளவில் இலங்கை மத்திய வங்கியின் எறிவுகளுக்கு இசைவாகக் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. இது தொடர்பாக இலங்கை மத்திய வங்கியினால் நேற்று (30) வெளியிட்டப்பட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:

நாட்டின் சில பிரதேசங்களில் அவ்வப்போது மழை

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு, தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. 2024 ஓகஸ்ட் 31ஆம் திகதிக்கான  வானிலை முன்னறிவிப்பு 2024 ஓகஸ்ட் 31ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது. மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, நுவரெலியா மற்றும் புத்தளம் மாவட்டங்களிலும் சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான … Read more

மத்தியகிழக்கு நாடுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஊடகவியலாளர்கள் சிலர் பாராளுமன்றத்தில் ஆய்வுப் பயணம் 

மத்தியகிழக்கு நாடுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஊடகவியலாளர்கள் சிலர் அண்மையில் (27) பாராளுமன்றத்தில் ஆய்வுப் பயணமொன்றை மேற்கொண்டனர். இதன்போது இலங்கை பாராளுமன்றம் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சியும் அவர்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பாராளுமன்றக் கட்டமைப்பும் வகிபாகமும், சட்டவாக்க நடைமுறை, பாராளுமன்ற விவாதங்களின் முறைமை, பாராளுமன்றக் குழுக்களின் பணிகள் மற்றும் பாராளுமன்ற செயற்பாடுகளை பொதுமக்களுக்குக் கொண்டு சேர்த்தல் என்பன தொடர்பில் இதன்போது விரிவான கலந்துரையாடல் இடம்பெற்றது. விசேடமாக, தெற்காசியாவின் சூழலில் இருதரப்பு மற்றும் பலதரப்பு உறவுகள் எவ்வாறு செயல்படுகின்றன என்பது குறித்தும், நிலைபேறான … Read more

அஞ்சல் மூல வாக்கு அடையாளமிடும் திகதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது

2024 ஜனாதிபதி தேர்தலுக்கான அஞ்சல் மூல வாக்கு அடையாளமிடுதல் தொடர்பாக தேர்தல் ஆணைக்குழு அறிக்கை வெளியிட்டுள்ளது.  ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கை..

தேர்தலில் வாக்களிக்கும் முறை பற்றிய விளக்கம் – தேர்தல்கள் ஆணைக்குழு

எதிர்வரும் 21 ஆத் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்கும் ஒழுங்குகள் தொடர்பாக இன்று (30) தேர்தல்கள் ஆணைக்குழு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. தேர்தலில் மூன்றுக்கு மேற்பட்ட வாக்காளர்கள் போட்டியிடுகின்றமையினால் ஒரு வேட்பாளருக்கு வாக்கையும் வேறு இரண்டு வேட்பாளர்களுக்கு இரண்டாவது விருப்ப தேர்வையும் மற்றும் மூன்றாவது விருப்ப தேர்வையும் வாக்குசீட்டில் அடையாளமிட முடியும். அவசியமெனில் வாக்கை மாத்திரம் அடையாளமிடுவதற்கான வாய்ப்பும் உள்ளதாக ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஆணைக்குழுவினால் இன்று வெளியிடப்பட்டுள்ள ஊடக … Read more