படை அங்கத்தவர்களுக்ககான உணவு மானிய அட்டையின் பெறுமதியில் மாற்றம்..
செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமீத்த பண்டார தென்னகோன் தெரிவித்தார். அண்மையில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சில் இடம்பெற்ற ஊடகவியலாளர்களுடனான கலந்துரையாடலில் அமைச்சர் இதனை குறிப்பிட்டார். அதன்படி உணவு மானிய அட்டையின் நிதியை அடுத்த ஜனவரியில் இருந்து அங்கத்தவர்களின் மாதாந்த சம்பளத்துடன் சேர்த்து வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும், அதனால் படை அங்கத்தவர்களின் நிதி பலத்தை மேலும் நிலையானதாக மாற்றுவதுடன் நிதி ஒழுங்கு மற்றும் பொறுப்புக்களை மிகவும் வலுப்படுத்தும் வகையில் இது மேற்கொள்வதாகவும் அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டினார்.