குழந்தைகளுக்கு வைத்திய பரிந்துரையுடன் மட்டுமே பாராசிட்டமால்

அறியாமல் குழந்தைகளுக்கு பாராசிட்டமால் அதிக அளவு கொடுப்பதன் காரணமாக குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் குழந்தைகளின் கல்லீரலுக்கு பாதிப்பு ஏற்படுவதாகவும் தேசிய நச்சு தகவல் மையத் தலைவர் வைத்தியர் ரவி ஜயவர்தன வலியுறுத்துள்ளார். சுகாதார ஊக்குவிப்பு பணியகத்தில் நேற்று (28) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். வைத்தியரின் பரிந்துரைகளில் பாராசிட்டமால் மருந்தை கொடுக்க வேண்டும் எனவே குழந்தைகளுக்கு காய்ச்சல் ஏற்படும் போது அதிக அளவு பாராசிட்டமால் கொடுக்கப்படுவதால் குழந்தைகளின் நிலை மேலும் மேசமான … Read more

இங்கிலாந்து – இலங்கைக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்சிப் தொடரின் இரண்டாவது போட்டி இன்று

இங்கிலாந்துக்கும் இலங்கைக்கும் இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்சிப் தொடரின் இரண்டாவது போட்டி கிரிக்கெட்டின் தாயகமான லோர்ட்ஸ் விளையாட்டரங்கில் இன்று (29) ஆரம்பமாகியுள்ளது. இப்போட்டிக்கான இலங்கை அணியில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. அண்மைக்காலமாக டெஸ்ட் கிரிக்கெட் துடுப்பாட்டத்தில் பிரகாசிக்கத் தவறிவரும் குசல் மெண்டிஸ}க்குப் பதிலாக மூவகை சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலும் துடுப்பாட்டத்தில் பிரகாசித்துவரும் பெத்தும் நிஸ்ஸன்க அணியில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளார். மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக 2021இல் நடைபெற்ற போட்டியின்மூலம் டெஸ்ட் அரங்கில் அறிமுகமான பெத்தும் … Read more

இலங்கை அரசாங்கம், ஜெருசலத்தில் புதிய கொன்சூலர் அலுவலகம் ஒன்றை திறந்திருப்பதாக பரவும் தகவல் உண்மைக்கு புறம்பானது

ஜெருசலத்தில் புதிய கொன்சூலர் அலுவலகம் ஒன்றை திறந்திருப்பதாக பரவும் தகவல் உண்மைக்கு புறம்பானது என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். இஸ்ரேலுக்குள் பணியாற்றும் இலங்கையருக்கு சேவை வழங்குவதற்காக 2000 ஆம் ஆண்டு முதல் இஸ்ரேலுக்குள் தூதரக சேவைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையினரை (27) சந்தித்து கலந்துரையாடியபோது அவர் இதனைத் தெரிவித்தார்.

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட, ஜனாதிபதி தகுதியற்றவர் என அறிவிக்குமாறு தாக்கல் செய்யப்பட்ட மனுவை உயர் நீதிமன்றம் நிராகரித்தது

நீதிமன்ற கட்டணத்தை மனுதாரர் செலுத்த வேண்டும் என்றும் உத்தரவு. மனுதாரர் நீதிமன்றத்தை தவறாக வழிநடத்தியுள்ளார்: சட்டமா அதிபர் நீதிமன்றத்தில் தெரிவிப்பு. பதில் பொலிஸ் மா அதிபரை நியமிக்கத் தவறியமை மற்றும் உயர் நீதிமன்றத்திற்கும் மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கும் நீதியரசர்களை நியமிக்காமை என்பவற்றின் அடிப்படையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை, ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடத் தகுதியற்றவர் என அறிவிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுவை, விசாரணைக்கு எடுத்துக்கொள்வதை உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளது. நீதிமன்றக் கட்டணமாக 50,000 ரூபாய் … Read more

இன்று (28) முதல் செப்டெம்பர் 06 வரை இலங்கைக்கு நேரே சூரியன் உச்சம் கொடுக்கும்

பி.ப. 12:11 மணியளில் நெடுந்தீவு, பூநகரி, தட்டுவான்கோட்டை, சுண்டிக்குளம் ஆகிய பகுதிகளில் சூரியன் உச்சம் கொடுக்கும். இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு, தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. நண்பகல் 12.11 அளவில் ஒட்டுசுட்டான், மாங்குளம், தேரங்கண்டல் மற்றும் மல்லாவி ஆகிய பிரதேசங்களுக்கு மேலாக சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளது. இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு, தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. 2024 ஓகஸ்ட் 29ஆம் திகதிக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு 2024 ஓகஸ்ட் … Read more

சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டுவரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 650 கையடக்கத் தொலைபேசிகளுடன் சந்தேகநபர் கைது

புத்தளம் கரம்பை பிரதேச வீதித்தடையில் நேற்று (27) இலங்கை கடற்படையினர் மற்றும் பொலிஸார் இணைந்து மேற்கொள்ளப்பட்ட சோதனையின்போது கெப் வண்டியொன்றில் கொண்டு செல்லப்பட்ட 650 கையடக்கத் தொலைபேசிகளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதன்படி, வடமேற்கு கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படை தம்பபன்னி நிறுவனத்திற்கு கிடைத்த தகவலின் பிரகாரம், கறம்ப சந்தியில், நொரோச்சோலை பொலிஸ் நிலையத்துடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின்போது, ​​சந்தேகத்திற்கிடமான கெப் வண்டியொன்று சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. அங்கு, அந்த வண்டியில் சுங்க சட்டத்தை மீறி … Read more

பஹ்ரைன் நாட்டிற்கு வேலை வாய்ப்பிற்காக செல்லும்; சகல வெளிநாட்டவர்களுக்காகவும் சர்வதேச வங்கிக் கணக்கு

பஹ்ரைன் நாட்டிற்கு வெளிநாட்டு வேலை வாய்ப்பிற்காக அந்நாட்டின் விமான நிலையத்தை சென்றடையும் சகல வெளிநாட்டவர்களுக்கும் சர்வதேச வங்கிக் கணக்கொன்றை (IBAN- International Bank Account  Number) வழங்குவதற்கு பஹ்ரைன் தொழிற்சந்தை ஒழுங்குபடுத்தல் அதிகாரசபை (LMRA) நடவடிக்கை எடுத்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் அறிவித்துள்ளது. இது இவ்வருடத்தின் ஆகஸ்ட் மாதத்திலிருந்து நடைமுறைப்படுத்தப்படுவதாக அந்நாட்டின் இலங்கைத் தூதுவராலயத்தினால் விடுக்கப்பட்டுள்ள அறிவித்தலில் இது தொடர்பாகக் குறிப்பிடப்பட்டுள்ளதாக பணியகம் தெரிவித்துள்ளது. வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கு இச்சர்வதேச வங்கிக் கணக்கு அறிமுகப்படுத்தப்படுவதனால் தொழிலாளி மற்றும் சேவை வழங்குநர் இடையே, … Read more

சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட சுமார் 552 கிலோ கிராம் பீடி இலைகள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன

இலங்கை கடற்படையினர் 2024 ஆகஸ்ட் 25 மற்றும் 27 ஆம் திகதிகளில் நெடுந்தீவின் உறிமுனாய், வெள்ளியல் மற்றும் சிலாவத்துறை கொண்டச்சிக்குடா கரையோரங்களில் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கைகளின் போது சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவர முயன்ற சுமார் 552 கிலோகிராம் (ஈரமான எடை) பீடி இலைகள் கைப்பற்றப்பட்டுள்ளன. அதன்படி, வடமேற்கு கடற்படை கட்டளைக்கு சொந்தமான இலங்கை கடற்படைக் கப்பல் விஜய நிருவனத்தின் கடற்படையினர் 2024 ஆகஸ்ட் மாதம் 25 ஆம் திகதி கல்பிட்டி உச்சமுனை கடற்கரையில் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் … Read more

இறப்பர் உற்பத்திக்கு 4000 ரூபா உர மானியம்

நாட்டின் இறப்பர் உற்பத்தியினால் கிடைக்கப்பெறும் அறுவடையை அதிகரிப்பதற்காக இறப்பர் உற்பத்தியாளர்களுக்கு உர மானியம் வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக விவசாய மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். அதன்படி, இறப்பர் உற்பத்திக்காக 50 கிலோ கிராம் உரத்தை 9,500 ரூபாவிலிருந்து 5,500 வரை விலையைக் குறைப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக விவசாய மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர அரசாங்க உரக் கம்பனியின் தலைவர் கலாநிதி ஜகத் பெரேரா விற்கு ஆலோசனை வழங்கினார். இறப்பர் உற்பத்திக்காக … Read more

கல்வி முயற்சிகளுக்கு ஆதரவாக இராணுவத் தளபதி கிளிநொச்சியில் சிமிக் பூங்கா திறப்பு

55 வது காலாட் படைப்பிரிவின் முயற்சியான “கிளிநொச்சி சிமிக் பூங்கா”, இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்கள் இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி ஜானகி லியனகே அவர்களுடன் இணைந்து 25 ஆகஸ்ட் 2024 அன்று உத்தியோகபூர்வமாக திறந்து வைத்தார். கிளிநொச்சி சமூகத்தின் கல்வித் தேவைகளை நிவர்த்தி செய்வதற்கும், உள்ளூர் மாணவர்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு அத்தியாவசிய வளங்கள் மற்றும் ஆதரவை வழங்குவதற்கும் இந்த வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த … Read more