விரைவில் வருகிறது BSNL 5G சேவை… நாடு முழுவதும் 1876 5ஜி டவர்கள் நிறுவ நடவடிக்கை

BSNL 5G Service: தொலைத் தொடர்புத்துறையில் தனியார் ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில், பிஎஸ்என்எல் நிறுவனம் அதற்கு கடும் போட்டியை கொடுக்கும் விதிமாக தனது 5G நெட்வொர்க்கை விரைவில் தொடங்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது. விரைவில் இந்தியாவில் 5ஜி நெட்வொர்க் தொடங்குவற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக பிஎஸ்என்எல் நிறுவனம் நாட்டின் பல்வேறு இடங்களில் 5ஜி டவர்களை நிறுவி வருகிறது. இப்போது விரைவில் அதிவேக இணையத்தை அனுபவிக்க முடியும். நாடு முழுவதும் 1876 புதிய … Read more

லேப்டாப் பேட்டரி…. சட்டென்று காலியாகாமல்… நீண்ட நேரம் நீடித்து இருக்க… சில டிப்ஸ்

இன்றைய கால கட்டத்தில், கம்ப்யூட்டர் என்னும் கணினி இல்லாத இடமே இல்லை என்ற நிலைமை வந்து விட்டது. ஆடம்பர பொருள் என்ற நிலையில் இருந்து அத்தியாவசிய பொருள் என்ற நிலைக்கு வந்து விட்ட கம்யூட்டரில், PC எனப்படும் டெஸ்க் டாப் வகை கம்ப்யூட்டரை விட லேப்டாப் அதிக அளவில் பயபடுத்தப்படுகிறது. ஒரே இடத்தில் வேலை செய்யாமல் எங்கு வேண்டுமானாலும் எடுத்துச் செல்லும் வசதியை அளிக்கும் லேப்டாப் என்னும் மடிக் கணிணி வேலைக்கு செல்பவர்களுக்கு இருக்க வேண்டிய மிக … Read more

உடல் வெப்பத்தை கண்டறியும் டி-சர்ட் தயாரிப்பு: திருப்பூர் ஆடை வடிவமைப்பாளர் சோதனை முயற்சி

திருப்பூர்: ஆடை அணிபவரின் உடல் வெப்பத்தைக் கண்டறியும் புதிய ரக டி-சர்ட்டை திருப்பூரைச் சேர்ந்த ஆடை வடிவமைப்பாளர் தயாரித்துள்ளார். திருப்பூர் அம்மாபாளையத்தைச் சேர்ந்த ஆடை வடிவமைப்பாளர் சொக்கலிங்கம், பின்னலாடைத் துறையில் பல்லாண்டு அனுபவம் மிக்கவர். தற்போது, உணர்திறன் மை பதிக்கப்பட்ட டி-சர்ட் தயாரிக்கும் சோதனை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து சொக்கலிங்கம் கூறியதாவது: உடல் வெப்பநிலை அதிகரிக்கும்போது டி-சர்ட்டில் உள்ள எழுத்துகள் மறையும். இதற்காக, தெர்மோ குரோமிக் முறையில், கொசுக்கள் அண்டாத வகையிலும், உடல் வெப்பத்தைக் கணிக்கும் வகையிலும் … Read more

தமிழ்நாடு செயற்கை நுண்ணறிவு இயக்கம் அமலுக்கு வருகிறது: ரூ.13.93 கோடி நிதி ஒதுக்கி அரசு உத்தரவு

சென்னை: தமிழ்நாடு செயற்கை நுண்ணறிவு இயக்க அறிக்கைக்கு ஒப்புதல் அளித்ததுடன், இயக்கத்தை அமல்படுத்த, ரூ.13.93 கோடி நிதி ஒதுக்கி அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தகவல் தொழில்நுட்பத்துறை இன்று வெளியிட்ட அரசாணையின் விவரம்: “தமிழக சட்டப்பேரவையில் கடந்த 2024-25ம் ஆண்டுக்கான பட்ஜெட் உரையில் நிதியமைச்சர், “உலகளவில் அண்மைக் காலத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள புதிய தொழில்நுட்பமான செயற்கை நுண்ணறிவு குறித்தும், அது தமிழ்ச்சமூகத்தின் பல்வேறு தரப்பிலும் ஏற்படுத்தக்கூடிய தாக்கங்கள் குறித்தும், இந்த அரசு கவனமுடன் ஆய்வு செய்து வருகிறது. … Read more

மாதம் 333 ரூபாயில்… தினம் 2.5 GB டேட்டா உடன் டிஸ்னி + ஹாட்ஸ்டார்… அசத்தும் ஏர்டெல்

இந்தியாவின் முன்னணி தொலைத் தொடர்பு நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோவைத் தொடர்ந்து ஏர்டெல், வோடபோன் ஐடியா ஆகிய நிறுவனங்கள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மொபைல் கட்டணத்தை உயர்த்தி பயனர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தின. இதனால், வாடிக்கையாளர்கள் பலர், மலிவான கட்டணங்கள் தரும் பிஎஸ்என்எல் நிறுவனத்தை நோக்கி படை எடுக்க, அதிர்ச்சி அடைந்த தனியார் நிறுவனங்கள் தனது வாடிக்கையாளர்களை தக்க வைத்து கொள்ள, தற்போது பல வகையான புதிய ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகம் செய்து வருகின்றன. அந்த வகையில் … Read more

மலிவான கட்டணத்தில் தினம் 2GB டேட்டா… ஏர்டெல் வழங்கும் ஒரு வருட ரீசார்ஜ் பிளான்

ஏர்டெல் 350 மில்லியனுக்கும் அதிகமான மொபைல் பயனர்களை கொண்டுள்ள நிலையில், தனது வாடிக்கையாளர்களை மகிழ்விக்கும் வகையில், அவ்வப்போது பல்வேறு வகையான புதிய ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் அறிமுகப்படுத்தியுள்ள நீண்டகாலத்திற்கான திட்டம், ஒரு வருடம் அல்லது 365 நாட்கள் செல்லுபடியாகும் திட்டமாகும். வரம்பற்ற 5G இணைய அணுகலை கொண்டது. இதன் விளைவாக, ஜியோ மற்றும் பிஎஸ்என்எல் வழங்கும் நீண்ட கால ரீசார்ஜ் திட்டங்களுக்கு, கடும் போட்டியை கொடுக்கும் வகையில் உள்ளது என்றால் மிகையில்லை … Read more

கூகுளில் 25% புரோகிராம் Code-களை ஏஐ எழுதுகிறது: சுந்தர் பிச்சை தகவல்

நியூயார்க்: கூகுளின் மூன்றாவது காலாண்டு வருவாய் தொடர்பான கூட்டத்தில் அந்நிறுவனத்தின் சிஇஓ சுந்தர் பிச்சை பகிர்ந்துள்ள தகவல் மென்பொருள் இன்ஜினியர்கள் மற்றும் கோடர்களை அலர்ட் செய்யும் வகையில் அமைந்துள்ளது. கூகுள் நிறுவன மென்பொருள் சார்ந்த புரோகிராம் Code-களில் 25 சதவீதம் செயற்கை நுண்ணறிவு நுட்பம் எழுதி வருவதாக அவர் தெரிவித்துள்ளார். அதனை பிழை திருத்துவது மற்றும் சரிபார்ப்பது ஆகிய பணிகளை இன்ஜினியர்கள் செய்வதாக அவர் சொல்லி உள்ளார். இப்போதைக்கு வழக்கமாக மேற்கொள்ளபப்டும் சில அடிப்படை பணிகளுக்கு மட்டுமே … Read more

SIM கார்டு இல்லாமலேயே பேசலாம்… அதிரடி காட்டும் BSNL… பதற்றத்தில் ஏர்டெல், ஜியோ

சிம் கார்டு இல்லாமலேயே எவருக்கும் கால் செய்து பேசக்கூடிய ஸ்மார்ட்போன் கற்பனையாக தோன்றினாலும் விரைவில் அது நிஜமாகப் போகிறது. சிம் கார்டு இல்லாமலேயே எவருடனும் போனில் பேசக்கூடிய தொழில்நுட்பத்தை விரைவில் மக்கள் பெறப் போகிறார்கள். இந்த தொழில்நுட்பத்தின் பெயர் Direct to Device (D2D). D2D தொழில்நுட்ப சோதனையை நிறைவு செய்த பிஎஸ்என்எல்  D2D அழைப்பை அரசு நிறுவனமான BSNL தொடங்கு திட்டமிட்டுள்ள நிலையில், D2D அழைப்பின் சோதனையையும் நிறைவு செய்துள்ளது. D2D அழைப்பு வசதிக்காக உலகளாவிய … Read more

கூகுள் மேப்ஸ்… ஒரு வழிகாட்டி மட்டுமல்ல… இந்த தகல்களையும் வழங்கும்

உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்களால் பயன்படுத்தப்படும் கூகுள் மேப்ஸ் உங்கள் பயணத்தை பாதுகாப்பாகவும் வசதியாகவும் மாற்ற தேவையான பல்வேறு அம்சங்களை வழங்குகிறது. முன்பின் தெரியாத இடத்திற்கு செல்கையில், வழித்தடம் பற்றிய தகவல்களை அறிய, அருகில் இருக்கும் கடைகள் அல்லது வழியில் காணும்  நபர்களிடம், எப்படி செல்ல வேண்டும் என்று வழி கேட்போம். ஆனால் இப்பொழுது கையில் ஒரு ஸ்மார்ட்போன் இருந்தால் போதும். கூகுள் மேப்ஸ் உதவியுடன் எங்கே வேண்டுமானாலும் செல்லலாம். அவ்வப்போது கூகுள் தவறான வழி காட்டுவதாக, … Read more

ரேடியோ டிரான்ஸ்மிட்டர் மூலம் நாசாவின் 47 ஆண்டு பழமையான வாயேஜர் 1 விண்கலத்துடன் மீண்டும் தொடர்பு

புளோரிடா: சிறிது காலம் செயல்படாமல் இருந்த நாசாவின் 47 ஆண்டு பழமையான வாயேஜர் 1 விண்கலத்துடன், ரேடியோ டிரான்ஸ்மிட்டர் உதவி மூலம் நாசா விஞ்ஞானிகள் மீண்டும் தொடர்பை ஏற்படுத்தியுள்ளனர். விண்வெளி ஆய்வுக்காக 47 ஆண்டுகளுக்கு முன்பு வாயேஜர் 1 என்ற விண்கலத்தை நாசா அனுப்பியது. பூமியிலிருந்து 15 பில்லியன் மைல் தூரத்தை கடந்து சென்ற முதல் விண்கலம் வாயேஜர் 1 என்பது குறிப்பிடத்தக்கது. சூரியனின் சூழ் மண்டலத்தை தாண்டி, விண்மீன்களுக்கு இடையேயான பகுதிக்குள் வாயேஜர் விண்கலம் உள்ளது. … Read more