ஏஐ மையமாக உருவெடுக்கும் கோவை – அதிகரிக்கும் ஐ.டி. நிறுவனங்களின் தாக்கம்

கோவை: தொழில் நகரான கோவையில் அதிகரித்துவரும் தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) நிறுவனங்களால் வரும்காலத்தில் ஏ.ஐ. மையமாக திகழும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. உலகம் முழுவதும் கல்வி, மருத்துவம், வேளாண் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் செயற்கை நுண்ணறிவு பயன்பாடு அதிகரித்து வருகிறது. அமெரிக்கா 500 பில்லியன் டாலர் மதிப்பில் செயற்கை நுண்ணறிவு கட்டமைப்பை ஏற்படுத்தி வருகிறது. சீனா மற்றும் ஐரோப்பிய நாடுகளும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்திற்கு முக்கியத்துவம் அளித்து வருகின்றன. இந்நிலையில், மத்திய … Read more

இனி இலவசம் இல்லை! ஐபிஎல் பார்க்க கூடுதல் கட்டணம்! எவ்வளவு தெரியுமா?

இந்தியாவின் முன்னணி ஓடிடி நிறுவனங்களான ஜியோ சினிமா மற்றும் டிஸ்னி + ஹாட்ஸ்டார் இணைவது பற்றி பல நாட்களாக பேசப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது இரண்டு ஓடிடிகளும் அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளது. இந்த புதிய தளத்திற்கு JioHotstar என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய ஓடிடி கிட்டத்தட்ட 10 மொழிகளில் படங்கள் மற்றும் வெப் தொடர்களை வழங்க உள்ளது. இது தவிர கிரிக்கெட் தொடர்கள், கபடி, கால்பந்து போன்ற நிகழ்ச்சிகளும் நேரலையில் இடம் பெரும். மேலும் சர்வதேச தொடர்களான … Read more

Jio உடன் இணைந்த Disney + Hotstar… குறைந்த கட்டணத்தில் JioHotstar OTT தளம் அறிமுகம்

முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், ஜியோ சினிமா மற்றும் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரை ஒன்றிணைத்து, புதிய ஸ்ட்ரீமிங் தளமான ஜியோஹாட்ஸ்டார் (JioHotstar) தளத்தை அறிமுகம் செய்துள்ளது. ஜியோ சினிமா மற்றும் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஆகிய இரண்டு பெரிய OTT தளங்கள் இணைந்த JioHotstar குறைந்த கட்டணத்திலான OTT இயங்குதளமாக உருவெடுத்துள்ளது. ஜியோ ஹாட்ஸ்டார் செயலி Jio மற்றும் Hotstar இணைந்ததால் மற்ற OTT தளங்கள் பாதிக்கப்படலாம். ஏனெனில் ஜியோ ஹாட்ஸ்டாரின் மாதாந்திர சந்தா … Read more

ஏஐ தொழில்நுட்பத்தில் உருவாக்கிய செவ்வாய் கிரக நவீன நகரம்: எலான் மஸ்க் வெளியிட்​ட வீடியோ வைரல்

ஏஐ தொழில்நுட்பத்தில் உருவாக்கிய செவ்வாய் கிரக வீடியோவை எக்ஸ் நிறுவன தலைவர் எலான் மஸ்க் வெளியிட்டுள்ளார். ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலான் மஸ்க் கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், ‘‘செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் குடியேறும் தனது தொலைநோக்கு திட்டம் குறித்து பேசினார். செவ்வாய் கிரகத்துக்கு இந்தாண்டில் ஆளில்லா விண்கலத்தை அனுப்பவும் திட்டமிட்டுள்ளார். இந்நிலையில் அவர் ஏஐ தொழில்நுட்ப உதவியுடன் செவ்வாய் கிரகத்தில் ஒரு நகரை உருவாக்கினால் அது எப்படியிருக்கும் என்ற கற்பனை கிராபிக்ஸ் வீடியோவை … Read more

இந்தியாவில் மீண்டும் பயன்பாட்டுக்கு வரும் தடை செய்யப்பட்ட 36 சீன செயலிகள்!

சென்னை: இந்தியாவில் ஏற்கெனவே தடை செய்யப்பட்ட சீன தேசத்தின் 36 செயலிகள் மீண்டும் பயன்பாட்டுக்கு வந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த 2020-ல் தேச பாதுகாப்பு கருதி சீன தேசத்தின் சுமார் 267 மொபைல் செயலிகளுக்கு இந்திய அரசு தடை விதித்தது. டிக்-டாக் துவங்கி பல்வேறு செயலிகள் இதில் அடங்கும். அதோடு இல்லமால் சீன தேசத்துடன் தொடர்பு கொண்ட மற்ற நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்களின் மொபைல் செயலிகளும் இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளன. இந்தச் சூழலில் ஏற்கெனவே தடை … Read more

ஒலிச் சித்திரம் முதல் 1983 உலகக் கோப்பை வரை – அது வானொலியின் பொற்காலம்!

உலக அளவில் 1920கள் ‘வானொலியின் பொற்காலம்’ என்று அழைக்கப்படுகின்றன. ஏனென்றால், அந்தக் காலக்கட்டத்தில் இசை, நகைச்சுவை, நாடக நிகழ்ச்சிகள் வானொலியில் ஒலிபரப்பாகத் தொடங்கின.1921ஆம் ஆண்டு அமெரிக்காவில் 5 வானொலி நிலையங்கள் இருந்தன. 1930இல் 600க்கும் மேற்பட்ட வானொலி நிலையங்கள் இயங்கத் தொடங்கியிருந்தன. வானொலியின் இந்த அசுர வளர்ச்சி அமெரிக்கா மட்டுமன்றி இந்தியாவிலும், பிற உலக நாடுகளிலும் கண்கூடாகத் தெரிந்தது. இந்த வளர்ச்சிக்குப் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் ஒலிபரப்பு செய்யப்பட்டதும் அவற்றுக்குக் கிடைத்த வரவேற்பும் ஒரு முக்கியக் காரணம். வானொலியில் … Read more

‘ரேடியோ நெல்’ தெரியுமா உங்களுக்கு? | உலக வானொலி நாள் ஸ்பெஷல்

இந்தியாவில் பசுமைப் புரட்சி வெற்றியடைந்ததில் வானொலியின் பங்கும் முக்கியமானது. அதிக மகசூல் தரும் நெல், கோதுமை ரகங்களைப் பயிரிடும் தேசிய அளவிலான திட்டம் 1966இல் அறிமுகப்படுத்தப்பட்டது. அவற்றை எப்படிப் பயிரிடுவது, அதற்கான பருவம், அறுவடை போன்ற தகவல்கள் விவசாயிகள் அறிந்துகொள்ளும் வகையில் அகில இந்திய வானொலியின் மண்டல ஒலி பரப்பு நிலையங்கள் மூலம் ஒலிபரப்பப்பட்டன. அந்தத் திட்டம் வெற்றியும் கண்டது. அரசின் வானொலி அறிவிப்பைப் பின்பற்றி தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டத்தில் ஏடிடி-27 ரக நெல் அன்றைக்குப் பயிரிடப்பட்டு … Read more

இனி ஸ்பேம் கால்கள் தொல்லை இருக்காது… விதிகளை கடுமையாக்கிய TRAI

இந்தியாவில் 90 சதவீத மக்கள் மொபைல் போன் பயன்படுத்துகின்றனர். இருப்பினும், இதில் தொழில்நுட்ப தகவல்களை, நுட்பங்களை அறியாத மக்கள் பலர் உள்ளனர். எனவே, தேவையற்ற ஸ்பேம் அழைப்புகள் மூலம் மக்கள் மோசடிக்கு ஆளாவதை தடுக்கும் வகையில், தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான TRAI புதன்கிழமை ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளது.   ரூ.10 லட்சம் வரை அபராதம் டிராய் அமைப்பு எடுத்துள்ள முடிவு வரும் காலங்களில் மக்களுக்கு நிம்மதியை அளிக்கும். வாடிக்கையாளர்களைத் தொடர்ந்து தொந்தரவு செய்யும் தேவையற்ற அல்லது ஸ்பேம் … Read more

உயிர் காக்கும் வானொலி – ஒரு விரைவுப் பார்வை | உலக வானொலி நாள்

இன்று தகவல் தொடர்புக்கு ஏராளமான சாதனங்கள் இருந்தாலும் அரசியல் நெருக்கடி நிலை, பெருவெள்ளம், நில நடுக்கம், போர், பஞ்சம், கொள்ளைநோய், காட்டுத்தீ உள்ளிட்ட அசாதாரண சூழல்களில் வானொலியே தகவல் தொடர்புக்கான முக்கியமான கருவியாக இருக்கிறது. ஏ.எம், எஃப்.எம் போன்ற பண்பலை வானொலிகளைவிடக் குறுகிய அலை வானொலி, ஹாம் (HAM) வானொலி, சமூக வானொலி போன்றவை எவ்விதத் தகவல் தொடர்பு சாதனங்களும் மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் இல்லாத நிலையில் தகவல் பரிமாற்றத்துக்கு உதவுபவை. தகவல் தொடர்பு அற்றுப்போன … Read more

பிப்.13 உலக வானொலி நாள் ஆனது எப்படி?

அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியின் உச்சத்தில் இருக்கும் இன்றைய காலக்கட்டத்திலும் வானொலி அதன் தனித்தன்மையை இழக்காமல் வலம் வந்து கொண்டிருக்கிறது. வானொலி மூலம் அறியும் செய்திகளுக்கு என்றே உலகம் முழுவதும் ரசிகர்கள் நிறைந்திருக்கிறார்கள். வானொலியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில் ஐக்கிய நாடுகள் சபையின் துணை அமைப்பான யுனெஸ்கோ ‘பிப்ரவரி 13’யை உலக வானொலி நாளாக 2011 இல் அறிவித்தது. 2012ஆம் ஆண்டு முதல் ‘உலக வானொலி நாள்’ கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. 1946இல் ஐ.நா. வானொலி அலைவரிசை தொடங்கப்பட்ட நாளான … Read more