புது தொழில்நுட்பத்துடன் களமிறங்கும் ஆப்பிள் ஐபேட்! ஐபாடில் செயற்கை நுண்ணறிவையும் பயன்படுத்த ரெடியா?

புதிய தலைமுறை iPad Mini சாதனம் A17 Pro செயலிகளுடன் வெளியாகியுள்ளது. ஆப்பிள் நிறுவனம், ஐபோன் 15 ப்ரோ தொடரிலிருந்து சிப்செட்டைச் சேர்ப்பதற்கான காரணம், பேட்களை AI நுண்ணறிவுடன் இணைந்து செயல்படுவதற்கு தயார்படுத்துவதா என்ற கேள்வியும் எழுகிறது.  ஐபாட் ஆப்பிள் பென்சில் ப்ரோவை ஆதரிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. iPad Mini விவரக்குறிப்புகள் மற்றும் அம்சங்கள் சமீபத்திய iPad Mini வடிவமைப்பு, இதற்கு முந்தைய ஐபாட் போலவே அதிக அளவில் உள்ளது. ஆப்பிள் பென்சில் ப்ரோவிற்கான சார்ஜிங் ஸ்டேஷன் கூடுதலாகக் … Read more

யூடியூபில் டைம் செட் செய்வது எப்படி? Youtube அறிமுகப்படுத்தும் சூப்பர் அம்சங்கள்!

யூடியூப் பிரியர்களுக்கு முக்கியமான செய்தி. யூடியூப் ஸ்லீப் டைமர் (YouTube Sleep Timer) என்ற மற்றொரு சுவாரஸ்யமான அம்சத்தை யூடியூப் அறிமுகப்படுத்தியிருக்கிறது. ஓடிக் கொண்டிருக்கும் வீடியோக்கள், சில நேரம் கழித்து தானாக இடைநிறுத்துவதற்கு தேவையான டைமரை அமைக்க உதவும் இந்த புதிய அம்சத்திற்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. யூடியூப் அறிவிப்பு மொபைல் டிவி, யூடியூப் மியூசிக், இணையம் முழுவதும் பார்வை மற்றும் உருவாக்க அனுபவத்தை மேம்படுத்தும் நோக்கத்தில் இரண்டு டஜன் புதுப்பிப்புகளை YouTube வெளியிட்டுள்ளது. இந்த புதுப்பிப்புகளில், லேண்ட்ஸ்கேப் பயன்முறையில் … Read more

செவ்வாய் கிரகத்தில் அதிரடி மாற்றம்! தீவிரமாய் ஆய்வு செய்யும் விஞ்ஞானிகள் தரும் லேட்டஸ்ட் அப்டேட்!

பிரபஞ்சத்தில் ஏற்படும் மாற்றங்கள் மனிதர்களின் வாழ்விலும் எதிரொலிக்கும். அதனால் தான் வானியல் விஞ்ஞானிகள் கண்டுபிடிப்புகளுக்கு எப்போதுமே முக்கியத்துவம் அதிகமாக கொடுக்கப்படுகிறது. அண்மையில், ஐரோப்பிய விண்வெளி ஏஜென்சியின் (ESA) மார்ஸ் எக்ஸ்பிரஸ், சிவப்பு கிரகமான செவ்வாயின் தென் துருவப் பகுதியில் சில குறிப்பிடத்தக்க மர்மமான அம்சங்களைக் கண்டறிந்துள்ளது. செவ்வாய் கிரகத்தில் மர்மமான நிலப்பரப்புகள் அதிகரித்து வருவதற்கான காரணங்கள் என்ன என்பது தெரியவில்லை. ஆனால், அது தொடர்பான விவாதங்களும், ஆலோசனைகளும் அதிகரித்துள்ளன. செவ்வாய் கிரகத்தின் ஆஸ்ட்ரேல் ஸ்கோபுலி (Australe Scopuli) … Read more

ஏர்டெல்லுக்கு சகாயம் செய்கிறதா டெல்லி மெட்ரோ? மெட்ரோ கார்டு விநியோகத்தை நிறுத்தி கேள்வியை எழுப்பும் DMRC!

டெல்லி: டெல்லி மெட்ரோ தொடர்பான செய்தி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. மெட்ரோ ரயில் நிலையங்களில் பயணிகளுக்கு ஸ்மார்ட் கார்டு கிடைக்கவில்லை. மெட்ரோ ரயில் நிலையங்களில் ஸ்மார்ட் கார்டுகளுக்குப் பதிலாக, பயணிகளுக்கு நேஷனல் காமன் மொபிலிட்டி கார்டு (National Common Mobility Card) வழங்கப்படுவதாக கூறப்படுகிறது. மெட்ரோவில் பயணிக்கும் பல பயணிகளுக்கு இது இடைஞ்சலாக இருக்கக்கூடும். நேஷனல் காமன் மொபிலிட்டி கார்டுகள் இனிமேல் டெல்லி மெட்ரோ கார்டுகள் கிடைக்காது என்றும், பயணிகளுக்குக் கூட தேசிய காமன் மொபிலிட்டி கார்டுகள் வலுக்கட்டாயமாக … Read more

ரயிலில் எத்தனை டன் ஏசி தேவை? டிக்கெட் விலையை நிர்ணயிக்கும் குளிர்சாதனப் பெட்டிகள்!

பயணங்கள் சிலருக்கு விருப்பமானதாக இருக்கும், ஆனால் பொதுவாக பயணம் செய்யாமல் இருக்கவே முடியாது. ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்ல வசதியான போக்குவரத்து சாதனங்கள் என்றால் பட்டியலில் பல வாகனங்கள் இடம் பெறும். இருந்தாலும், சாமானியர்கள் முதல், செல்வந்தர்கள் வரை அனைவரும் ரயிலில் பயணம் மேற்கொள்ளாமல் இருக்க முடியாது. இந்தியாவில் ரயிலில் பயணம் செய்வது மிகவும் வசதியானதாக கருதப்படுகிறது. ரயிலில் பயணம் செய்வது, அதிலும் குறிப்பாக ஏசி கோச்சில் பயணம் செய்வது ஒரு சொகுசு அனுபவம். ஆனால், … Read more

ஜியோவுக்கு ஆப்பு வைத்த நீதிமன்றம்! சேவை வழங்க தடைவிதித்து திருவாரூர் நுகர்வோர் நீதிமன்றம் தீர்ப்பு!

ஜியோ நிறுவனம் சேவை வழங்க தடை விதித்து திருவாரூர் நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் தாலுகாவிற்கு உட்பட்ட நெமிலிக்குடி ஊராட்சி, வடகுளவேலி மற்றும் தென்குளவேலி கிராமங்களைச் சேர்ந்த நடனசிகாமணி, ராஜ்குமார், ஷேக் அப்துல்லா, ரமேஷ், நடராஜன், வெங்கடேஷ், கோகுல்ராஜ், மதியழகன் இவர்கள் அனைவரும் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் சிம் கார்டுகளை பயன்படுத்தி வந்துள்ளனர். சேவை குறைபாடு வலங்கைமான் வட்டத்திற்கு உட்பட்ட தங்களுடைய ஊர்களில் ஜியோ நிறுவனத்தின் செல்போன் … Read more

உலகிலேயே முதன்முறையாக காரின் தொழில்நுட்பத்தில் மின்சார பைக்! சென்னை நிறுவனத்தின் தயாரிப்பு!

சென்னையைச் சேர்ந்த EV ஸ்டார்ட் அப் நிறுவனமான Raptee.HV இன்று இந்தியாவின் முதல் உயர் மின்னழுத்த மின்சார மோட்டார் சைக்கிளை அறிமுகப்படுத்தியுள்ளது. மின்சார கார்களில் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பத்தில் இந்த மோட்டார்சைக்கிள் உருவாக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் உலகின் முதல் வகை மின்சார மோட்டார் சைக்கிள் இது என்று சொல்லலாம். அதுமட்டுமல்ல, இந்த மோட்டார்சைக்கிள் குறைந்த வெப்பத்துடன் கூடிய சிறந்த செயல்திறனை வழங்கவும் இந்த தொழில்நுட்பம் உதவும். இந்த மின்சார மோட்டார் சைக்கிள்,மின்சார கார்களுக்குப் பயன்படுத்தப்படும் யுனிவர்சல் … Read more

பூமிக்கு திரும்பிய ராக்கெட்டை கச்சிதமாக ‘கேட்ச்’ செய்த ஸ்பேஸ் எக்ஸ் ஏவுதளம் – வீடியோ வைரல்!

வாஷிங்டன்: விண்வெளி ஆய்வில் மிகப்பெரும் சாதனையாக ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் ஏவிய சூப்பர் ஹெவி பூஸ்டர் ராக்கெட் மீண்டும் பூமிக்கு திரும்பியுள்ளது. அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தின் போகோ சிகாவில் உள்ள ஸ்பேஸ் எக்ஸ் ஏவுதளத்தில் இருந்து இன்று (அக்.13) மாலை 5.54 மணியளவில் அந்நிறுவனம் தனது ஐந்தாவது ஸ்டார்ஷிப் விண்கலத்தை சோதனை முயற்சியாக ஏவியது. விண்ணில் ஏவப்பட்ட இரண்டரை நிமிடங்களில் விண்கலத்தில் இருந்த சூப்பர் ஹெவி பூஸ்டர் ராக்கெட் திட்டமிட்டபடி அதிலிருந்து தனியாக பிரிந்தது. ஸ்டார்ஷிப் விண்கலம் … Read more

முதலீடு செய்தா நல்ல லாபம் கிடைக்குமா? ஐடியா கொடுக்க இந்த செயலிகள் இருக்க கவலையேன்?

பணம் சம்பாதிப்பதற்கு விழி பிதுங்கும் நிலையில், வருமானத்தை பாதுகாப்பாக முதலீடு செய்வதும் அதில் இருந்து கிடைக்கும் லாபம் அதிகமாக இருப்பதை உறுதிப்படுத்துவதும் இன்றைய காலகட்டத்தில் மிகவும் முக்கியமானதாக மாறிவிட்டது. 21 ஆம் நூற்றாண்டில் இருக்கும் நமக்கு முதலீடு செய்வது என்பது சிரமம் என்றாலும், செய்யும் சிறிய முதலீட்டையும் புத்திசாலித்தனமாக செய்ய வேண்டிய அவசியம் இருக்கிறது. ஆனால், தொழில்நுட்ப புரட்சி, முதலீட்டு யோசனைகளை சொல்வதிலும் புரட்சியை ஏற்படுத்தியுள்ளது. மொபைல் அப்ளிகேஷன்கள் மூலம், முதலீட்டாளர்கள் தங்கள் முதலீடுகளை எளிதாகக் கண்காணிக்கலாம், பங்குச் … Read more

ஏலியன்கள் இருப்பது உண்மை தான்… ஆதாரங்கள் விரைவில்! நாசாவுடன் பணியாற்றியவர் தகவல்!

Proof Of Aliens Existance  : புத்திசாலியான வேற்றுகிரகவாசிகள் இருப்பதற்கான சான்றுகளை பூமியில் உள்ள தொலைநோக்கிகள் மூலம் கண்டறிந்துள்ளதாகவும், இன்னும் ஒரு மாதத்திற்குள் ஆதாரங்கள் வெளியிடப்படும் என்றும் நாசாவுடன் தொடர்புடைய திரைப்பட தயாரிப்பாளர் ஒருவர் உறுதியளித்துள்ளார். சைமன் ஹாலண்ட் & வேற்றுகிரகவாசி திரைப்படத் தயாரிப்பாளர் சைமன் ஹாலண்ட், பிபிசி மற்றும் நாசா நிதியுதவி திட்டங்களுக்கான ஆவணப்படங்களில் பணிபுரிந்தவர். இவர், ஏலியன்கள் தொடர்பாக வெளியிட்ட தகவல்கள் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றன. ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழத்தின் ஆதரவுடன் மேற்கொள்ளப்பட்ட ஒரு திட்டத்தில், வேற்று கிரக … Read more