ஜிமெயில் கணக்கு இருக்கா… இதை செய்யலைன்னா டிலீட் ஆகலாம்

கூகுளின் ஜிமெயிலைப் பயன்படுத்துபவர்களுக்கு மிக முக்கிய செய்தி. ஏனெனில் செயலற்ற கணக்குக் கொள்கை Google ஆல் செயல்படுத்தப்படுகிறது. கூகுளின் புதிய கொள்கை 20 செப்டம்பர் 2024 முதல் அமலுக்கு வருகிறது. இந்தக் கொள்கையின் அடிப்படையில், லட்சக்கணக்கான ஜிமெயில் கணக்குகள் மூடப்படும். கூகுள் டிரைவ் மற்றும் கூகுள் புகைப்படங்களைப் பயன்படுத்தும் பயனர்கள் இதனால் சிக்கலைச் சந்திக்க நேரிடும். நீண்ட நாட்களாக செயல்படாமல் இருக்கும் ஜிமெயில் கணக்குகளை டிலீட் செய்ய கூகுள் முடிவெடுத்துள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக செயல்படாமல் இருந்த … Read more

லாவா பிளேஸ் 3 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள்

சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் லாவா பிளேஸ் 3 ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம். இந்தியாவை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வருகிறது பன்னாட்டு எலக்ட்ரானிக்ஸ் கம்பெனியான லாவா இண்டர்நேஷனல். லாவா என்ற பெயரில் எலக்ட்ரானிக் சாதனங்களை உற்பத்தி செய்து வருகிறது. மொபைல் போன், ஸ்மார்ட்போன், லேப்டாப் போன்றவற்றை இந்த நிறுவனம் உற்பத்தி செய்து வருகிறது. அந்த வகையில் இப்போது இந்திய சந்தையில் லாவா பிளேஸ் 3 … Read more

ஐபோன் 16 நான்கு மாடல்களிலும் வித்தியாசம் என்ன? விலையில் வேறுபாடு ஏன்? சிறப்பம்சங்கள் என்ன?

அண்மையில் அறிமுகமான ஐபோன் 16 தொடர் நான்கு வகைகளில் வருகிறது. இந்த நான்கிலும் எது சிறந்தது, நான்கிற்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது. எது என்ன விலை என ஆப்பிளின் புதிய மாடல் ஐபோன்கள் பற்றிய தகவல்களைத் தெரிந்துக் கொள்வோம். செப்டம்பர் 9ம் தேதியன்று அறிமுகமான ஐபோன், தற்போது முன்பதிவு செய்தவர்களுக்கு கிடைக்கிறது. வழக்கமான விற்பனை செப்டம்பர் 20 முதல் தொடங்கும். நீங்களும் ஆப்பிளின் புதிய போன் வாங்க திட்டமிட்டிருந்தால், நான்கு மாடல்களில் எந்த மாடல் வாங்க வேண்டும் … Read more

பேஸ்புக், இன்ஸ்டாகிராம் பதிவுகளை கொண்டு AI-க்கு பயிற்சி தரும் மெட்டா நிறுவனம்! 

லண்டன்: பேஸ்புக், இன்ஸ்டாகிராம் சமூக வலைதளத்தில் 18+ பயனர்கள் பகிரும் பதிவுகளைக் கொண்டு ஏஐ-க்கு பயிற்சி அளிக்க மெட்டா நிறுவனம் முடிவு செய்துள்ளது. அடுத்த சில மாதங்களில் இந்தப் பணியை முறைப்படி பிரிட்டன் நாட்டில் தொடங்க உள்ளதாகவும் மெட்டா அறிவித்துள்ளது. முன்னதாக, பிரிட்டனில் டிஜிட்டல் தள ஒழுங்குமுறை சார்ந்த சிக்கல் காரணமாக இந்தப் பணி தற்காலிகமாக இடைநிறுத்தத்தை எதிர்கொண்டு நிலையில் அதை தொடர்வதில் மெட்டா உறுதியாக இருப்பதை வெளிக்காட்டும் வகையில் இந்த அறிவிப்பு அமைந்துள்ளது. 18+ பயனர்கள் … Read more

மோட்டோ எட்ஜ் 50 நியோ ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள்

சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் மோட்டோரோலா எட்ஜ் 50 நியோ மாடல் ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாகப் பார்ப்போம். அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு இயங்கி வருகிறது மோட்டோரோலா மொபிலிட்டி. இது சீன தேச நிறுவனமான லெனோவா நிறுவனத்தின் துணை நிறுவனமாகும். இந்தியாவில் அவ்வப்போது புது போன்களை மோட்டோ விற்பனைக்கு கொண்டு வருவது வழக்கம். அந்த வகையில் மோட்டோரோலா எட்ஜ் 50 நியோ ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. இது … Read more

புதிய சிம் கார்டு விதிகள்… பயனர்கள் அறிந்து கொள்ள வேண்டிய சில முக்கிய விஷயங்கள்

புதிய சிம் கார்டு விதிகள்: சிம் கார்டுகளை வாங்குவதற்கான விதிகள் மாற்றப்பட்டுள்ளன. இப்போது ஏர்டெல், ஜியோ, பிஎஸ்என்எல் அல்லது வோடபோன்-ஐடியாவின் புதிய சிம் வாங்க பயனர்கள் அதிக டென்ஷன் எடுக்கத் தேவையில்லை. தொலைத்தொடர்புத் துறை (DoT) இப்போது விதிகளை முற்றிலும் பேப்பர்லெஸாக (paperless) மாற்றியுள்ளது. தொலைத்தொடர்பு துறையின் இந்த புதிய விதி பயனாளர்களின் தனிப்பட்ட ஆவணங்களை பயன்படுத்தி நடக்கும் மோசடியை தடுக்கும் வகையில் உள்ளது.  நீங்கள் இப்போது புதிய சிம் கார்டை வாங்க விரும்பினால் அல்லது ஆபரேட்டரை … Read more

UPI பரிவர்த்தனை வரம்பை ₹ 5 லட்சமாக அதிகரித்தது NPCI

UPI பரிவர்த்தனை வரம்பு: இன்றைய டிஜிட்டல் காலகட்டத்தில், செல்போன் மூலம் மேற்கொள்ளப்படும் ஆன்லைன் பணப்பரிவர்த்தனைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. சுலபமாகவும் எளிதாகவும் இருப்பதால் அதனை பலரும் பயன்படுத்துகிறார்கள். இந்நிலையில், நாட்டிலுள்ள லட்சக்காணக்கானோர் பயன் பெறும் வகையில், UPI ஐப் பயன்படுத்தி பரிவர்த்தனை செய்வதற்கான உச்ச வரம்பை இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் (NPCI) அதிகரித்துள்ளது.   யுபிஐ செயலியில்  சில குறிப்பிட்ட பரிவர்த்தனைகளுக்கு 5 லட்சம் வரையில் பணம் அனுப்பும் புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்தப் புதிய … Read more

ரியல்மி பி2 புரோ ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள் 

சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் ரியல்மி பி2 புரோ ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து பார்ப்போம். உலக அளவில் ஆண்ட்ராய்டு போன்களை உற்பத்தி செய்து வரும் சீன தேச எலக்ட்ரானிக் பொருட்கள் உற்பத்தி நிறுவனமான ரியல்மி நிறுவனம் அவ்வப்போது தங்கள் நிறுவன பயனர்களுக்காக புதிய அப்டேட்களுடன் கூடிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்வது வழக்கம். இந்த நிறுவனம் இந்தியாவில் பட்ஜெட் விலையில் போன்களை விற்பனை செய்து வருகிறது. ஒப்போவின் துணை … Read more

சார்ஜ் ஆகாத ஸ்மார்ட்போனையும் ஸ்மார்ட்டா சார்ஜிங் செய்ய வைப்பது இப்படித்தான்…

உங்கள் ஸ்மார்ட்போன் சரியாக சார்ஜ் ஆகவில்லையா? காரணம் என்னவாக இருந்தாலும், அதற்கான பல தீர்வுகள் இருக்கின்றன. சார்ஜ் ஏற்றுவதற்கு சிலபயனுள்ள முறைகளை தெரிந்துக் கொள்ளுங்கள். நம்முடைய ஸ்மார்ட்ஃபோனில் சார்ஜ் இல்லாவிட்டால், பல பிரச்சனைகள் ஏற்படும். முக்கியமான நேரத்தில் கழுத்தறுக்கும் மொபைல் போன் சார்ஜிங் பிரச்சனையால் சிரமப்படாதவர்களின் எண்ணிக்கை குறைவு தான். ஸ்மார்ட்போனை ஸ்மார்ட்டாக மீண்டும் சார்ஜ் செய்யத் சில முறைகளைத் தெரிந்துக் கொள்வோம். ஸ்மார்ட்போன் நம் வாழ்வில் ஒரு முக்கிய இடத்தைப் பிடித்த ஒரு சாதனம். போன் என்பது பேசுவதற்காக … Read more

டிஜிட்டல் டைரி 11: மீண்டும் பார்க்க முடியாத வினோத இணையதளம்

இணையதளங்களை உருவாக்குவதற்கான நோக்கங்களில் அதிக பார்வையாளர்களைக் கவர வேண்டும் என்பதும் ஒன்று. பெரும்பாலான தளங்கள், பார்வையாளர்களை மீண்டும் வருகை தர வைப்பதற்கான உள்ளடக்கத்தோடு வடிவமைக்கப்பட்டிருக்கும். ஆனால், இந்த வழக்கமான வடிவத்துக்கு மாறாக ‘ஒன்லி விசிட் ஒன்ஸ்’ (onlyvisitonce.com) என்கிற தளத்தை ஒரு முறை மட்டுமே பயன்படுத்தும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது. ‘ஒன்லி விசிட் ஒன்ஸ்’ தளத்தில் நுழைந்ததுமே ‘வணக்கம் பயனரே, நீங்கள் பதிவு செய்ய விரும்பும் வாழ்க்கை அறிவுரையை எழுதுக அல்லது வாசிக்க’ என்கிற செய்தியைக் காண்பிக்கிறது. நீங்கள் விருப்பப்பட்டால் … Read more