இந்திய பொருள்களுக்கு தனிக் கடை – 'Made in India' தயாரிப்புகளை ஊக்குவிக்கும் அமேசான்!

அரசின் இன்வெஸ்ட் இந்தியா, இந்தியன் இண்டஸ்ட்ரீஸ் அசோசியஷன் (IIA) ஆகிய அமைப்புகளுடன் இணைந்து இந்திய தயாரிப்புகளை விற்பதற்கு பிரத்யேக பக்கத்தை அமேசான் உருவாக்கியுள்ளது. இதன் வாயிலாக அமேசான் ஷாப்பிங் தளத்தில் ஓடிஓபி ( one district one product ) பொருள்கள் தனியாக பட்டியலிடப்பட்டு விற்கப்படுகிறது. இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களில் உள்ள மூலை முடுக்குகளில் இருந்து உள்ளூர் தயாரிப்பு பொருள்கள், புவிசார் குறியீடு (GI) பெற்ற பொருட்கள் ஆகியவற்றை சந்தைப்படுத்த அமேசான் திட்டமிடப்பட்டுள்ளது. சிறு குறு … Read more

Flipkart Sale: வெறும் 174 ரூபாய்க்கு ரியல்மி 5ஜி போன்; பிளிப்கார்ட் அதிரடி தள்ளுபடி விற்பனை!

பிளிப்கார்ட், Amazon shopping தளங்களுக்கு இடையில் நடக்கும் போட்டியில் பயன்பெறுவது என்னமோ வாடிக்கையாளர்கள் தான். நீ பெருசா, நான் பெருசா என்ற போட்டியில் பயனர்களுக்கு அதிரடி சலுகைகளை இரு நிறுவனங்களும் மாறி மாறி வழங்கி வருகிறது. அந்த வகையில், Flipkart வாடிக்கையாளர்களுக்கு மொபைல்கள் மீது கூடுதல் சலுகைகளை அளித்து வருகிறது. தற்போது 5ஜி போன்களை, பிளிப்கார்ட் ஷாப்பிங் தளத்தில் இருந்து சொர்ப்ப விலைக்கு பயனர்கள் வாங்க முடியும். ஆம், புதிய சலுகையாக ரியல்மி நிறுவனத்தின் 5ஜி போன் … Read more

Metaverse'ல் நிலம் வாங்கி தியேட்டர் கட்டிய தயாரிப்பாளர்!

காலத்தின் வேகத்தை விட தொழில்நுட்பம் அதிவேகமாக வளர்ந்து வருகிறது. அதற்கு ஒரு சான்று தான், இல்லாத ஒரு இடத்தில் நம்மை இருப்பதாக மெய்ப்பிக்கும் மெட்டாவெர்ஸ் தொழில்நுட்பம். விளையாட்டு, திருமணம், நிகழ்வுகள் என அனைத்தையும் சிலர் மெட்டாவெர்ஸ் தொழில்நுட்பம் மூலம் நடத்தி வரும் செய்திகளும் அண்மையில் டிரெண்டாகி வருகிறது. இச்சூழலில், சினிமா துறையில் பிரபலமான Pooja Entertainment தயாரிப்பு நிறுவனம், புதிய அறிவிப்பை வெளியிட்டு அனைவருக்கும் ஷாக் கொடுத்துள்ளது. தயாரிப்பு நிறுவனமான பூஜா எண்டர்டெயின்மெண்ட் சமீபத்தில் மெட்டாவெர்ஸ் தொழில்நுட்ப … Read more

110 நாள்களுக்கு செல்லுபடியாகும் BSNL இன் புதிய ரீசார்ஜ் திட்டம்!

அரசின் தொலைத்தொடர்பு நிறுவனமான BSNL பயனர்களைக் கவரும் வகையில் பல திட்டங்களைத் தொடர்ந்து அறிவித்து வருகிறது. பிஎஸ்என்எல் அறிவித்துள்ள புதிய ரூ.666 திட்டம், செயல்படுத்தப்பட்ட நாளிலிருந்து 110 நாட்கள் செல்லுபடியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் கூடுதல் நன்மைகள் பயனர்களுக்கு கிடைக்கிறது. இந்தத் திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டா வரம்பு வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுகிறது. மேலும் ஒரு நாளைக்கு 100 SMS வீதம் பயனர்களுக்கு கொடுக்கப்படும். இந்த திட்டத்தில் இருக்கும் வாடிக்கையாளர்களுக்கு இலவச ஹலோ டியூன்கள் PRBT வழங்கப்படுகிறது. இலவச … Read more

50MP சோனி OIS கேமரா… வெளியானது Realme 9 Pro Plus 5G சூப்பர் கேமரா மொபைல்!

ரியல்மி நிறுவனத்தின் புதிய 9 சீரிஸ் ஸ்மார்ட்போன் மாடல்கள் இந்தியாவில் வெளியாகியுள்ளது. இன்று ரியல்மி தரப்பில் இருந்து ரியல்மி 9 ப்ரோ, ரியல்மி 9 ப்ரோ பிளஸ் ( Realme 9 Pro Plus 5G ) ஆகிய இரண்டு ஸ்மார்ட்போன் மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டது. அதில் ரியல்மி 9 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன், மீடியாடெக் டைமென்சிட்டி 920 5ஜி சிப்செட், 90Hz ஹெர்ட்ஸ் ரெப்ரெஷ் ரேட் கொண்ட அமோலெட் டிஸ்ப்ளே, 50 மெகாபிக்சல் சோனி கேமரா, … Read more

64MP நைட்ஸ்கேப் கேமரா… 120Hz ரெப்ரெஷ் ரேட் டிஸ்ப்ளே உடன் வெளியான Realme 9 Pro 5G போன்!

ரியல்மி நிறுவனத்தின் புதிய 9 சீரிஸ் ஸ்மார்ட்போன் மாடல்கள் இந்தியாவில் வெளியாகியுள்ளது. தொடர்ந்து பட்ஜெட் போன்களை விற்பனைக்குக் கொண்டு வரும் ரியல்மி நிறுவனம், இம்முறையும் ரூ.20,000க்கும் கீழ் தனது ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இன்று ரியல்மி தரப்பில் இருந்து ரியல்மி 9 ப்ரோ ( Realme 9 Pro 5G ), ரியல்மி 9 ப்ரோ பிளஸ் ஆகிய இரண்டு ஸ்மார்ட்போன் மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டது. அதில் ரியல்மி 9 ப்ரோ ஸ்மார்ட்போன், ஸ்னாப்டிராகன் 695 5ஜி … Read more

இனி போன் தேவையில்ல – WhatsApp கொண்டு வரும் பெரிய அப்டேட்!

மெட்டா நிறுவனத்திற்குச் சொந்தமான பேஸ்புக்கில் உள்ள வசதியை போல, கவர் இமேஜ்-ஐ கொண்டு வர வாட்ஸ்அப் திட்டமிட்டு வருகிறது. முதற்கட்டமாக வணிக ரீதியிலான வாட்ஸ் அப் கணக்குகளுக்கு அறிமுகப்படுத்தப்பட உள்ள இந்த வசதி, அடுத்தடுத்து பீட்டா பயனாளர்களுக்கும் அறிமுகப்படுத்தப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. உலகளவில் தகவல்களை பரிமாறிக்கொள்ள உதவும் முதன்மையான செயலியாக இருக்கும் வாட்ஸ்அப், வெறும் குறுச்செய்திகள் மட்டுமின்றி, வீடியோ, வாய்ஸ், டெக்ஸ்ட் சேட் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் பயனர்களுக்கு அளித்து வருகிறது. தனிநபர் மட்டுமல்லாது குழுவிலும் செய்திகளை … Read more

டிண்டர் தெரியும்; அதென்ன ராயா ஆப் – பதிவுசெய்ய ஒரு லட்சம் பேர் காத்திருப்பு!

டிஜிட்டல் உலகில் ஒரு துணையை கண்டுபிடிப்பது கடினமான காரியம் அல்ல. ஒரு ஸ்மார்ட்போன் போதும்; அனைத்தையும் சாத்தியமாக்கி விடலாம் என்ற நிலை வந்துவிட்டது. அந்த வகையில் கடந்த சில வருடங்களாக டேட்டிங் செயலியின் பயன்பாடு வெகுவாக அதிகரித்துள்ளது. அதுவும் கொரோனா காலகட்டத்தில் இந்த செயலிகளின் பயன்பாடு என்பது பன்மடங்கு உயர்ந்தது. இதில், Tinder, Bumble, Hinge, Tinder, OkCupid, Coffee Meets Bagel, Happn போன்ற செயலிகள் அதிக மக்களால் பயன்படுத்தப்படுகிறது. இந்த செயலிகள் மூலம் உலகில் … Read more

செட்டப் ஒன்னு தான்… ஆனா கெட்டப் வேற… Airtel-இன் குளறுபடி திட்டம்!

முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமான பார்தி Airtel, அதன் பயனர்களுக்கு புது திட்டங்களை அறிவித்து வருகிறது. ரீசார்ஜ் திட்டங்களின் விலை உயர்வைத் தொடர்ந்து பயனர்களை தக்கவைக்கும் முயற்சியில் ஏர்டெல் இறங்கியுள்ளது. அதற்காக இப்படியா என்று கேட்கும் அளவிற்கு, நிறுவனம் பயனர்கள் மத்தியில் ஒரு குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. அதாவது ஏர்டெல் நிறுவனமானது, 3 ஒரு வருட திட்டங்களை பயனர்களுக்காக தங்கள் இணையதளத்தில் பட்டியலிட்டுள்ளது. அதில் ரூ.2999, ரூ.3359 ஆகிய திட்டங்கள் அடங்கும். இந்த இரண்டு திட்டங்களுக்கு ஒரே பலனை அளித்திருக்கும் … Read more

Instagram புதிய அப்டேட்: இனி Stories பிடித்திருந்தால் லைக்ஸுகளை பறக்கவிடலாம்!

மெட்டா நிறுவனத்தின் பிரபல புகைப்படம் பகிரும் தளமான இன்ஸ்டாகிராம் தொடர்ந்து பயனர்களுக்கு புதிய அப்டேட்டுகளை வழங்கி வருகிறது. பயனர்களின் தனியுரிமையைப் பாதுகாக்கும் வகையில் இன்ஸ்டாகிராமின் புதிய அப்டேட்டுகள் இருந்து வருகின்றன. இன்ஸ்டாகிராமில் அறிமுகமாகியுள்ள இந்த புதிய அம்சம் ‘ Private Story Likes ’ என அழைக்கப்படுகிறது. பல கோடி பயனர்கள் உலாவும் தளமான இன்ஸ்டாகிராமில் ஸ்டோரிஸ், ரீல்ஸ் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் மெட்டா வழங்கியுள்ளது. இச்சூழலில், தற்போது இன்ஸ்டாகிராம் ஸ்டோரிகளை லைக் செய்யும்போது, அது ஸ்டோரி … Read more