Vivo T1 5G: குறைந்த விலையில் வெறித்தனமான அம்சங்கள்… சியோமியுடன் நேரடியாக மல்லுக்கட்டும் விவோ!

சீனாவின் விவோ நிறுவனம் சமீபத்தில் விவோ வி23 ஸ்மார்ட்போனை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியது. இந்தியாவின் முதன் நிறம் மாறும் ஸ்மார்ட்போன் என்று இதை விளம்படுத்தியது விவோ நிறுவனம். மேலும், ஸ்மார்ட்போன் தொகுப்பில் முதன் முறையாக Eye Auto focus கொண்ட 50 மெகாபிக்சல் கேமரா இந்த பிரீமியம் ஸ்மார்ட்போனில் கொடுக்கப்பட்டது. இந்த சூழலில், விவோ நிறுவனம் நடுத்தரப் பயனர்களுக்கான புதிய ஸ்மார்ட்போன்களை சந்தைப்படுத்த திட்டமிட்டுவருகிறது. அந்த வகையில் புதிய T Series ஸ்மார்ட்போனை இந்தியாவில் இன்று நிறுவனம் … Read more

ஐபோன் 12 வரவால் குறைந்த ஐபோன் 11 விலை: இலவசமாக ஏர்பாட் தர ஆப்பிள் நிறுவனம் முடிவு

ஐபோன் 12 வரிசை மொபைல்களின் அறிமுகத்தைத் தொடர்ந்து ஐபோன் 11 வரிசை மொபைல்களின் விலையை ஆப்பிள் நிறுவனம் குறைத்துள்ளது. ஐபோன் 11, 64 ஜிபி அளவுடைய மொபைல் ரூ.54,900, 128 ஜிபி அளவு ரூ.59,900 மற்றும் 256 ஜிபி அளவு ரூ.69,900 ஆகிய விலைகளில் தற்போது கிடைக்கிறது. ஐபோன் எக்ஸ்ஆர் மாடல் 64 ஜிபி அளவு ரூ.47,900க்கும், 128 ஜிபி அளவு ரூ.52,900 என்றும் குறைந்துள்ளது. ஐபோன் எஸ்ஈ 2020 64 ஜிபி மாடல் தற்போது ரூ.39,900க்கும், … Read more

கரோனா தடுப்பூசி குறித்த தவறான வீடியோக்கள் நீக்கப்படும்: யூடியூப் அறிவிப்பு

கோவிட்-19 தடுப்பூசி குறித்த தவறான தகவல்களை அளிக்கும் வீடியோக்கள் நீக்கப்படும் என்று யூடியூப் அறிவித்துள்ளது. பெருந்தொற்றுக் காலத்தில் தடுப்பூசி குறித்து தவறான தகவல்கள் மற்றும் கோட்பாடுகளை வழங்கும் வீடியோக்கள் இனி இருக்காது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக யூடியூப் செய்தித் தொடர்பாளர் கூறும்போது, ”உள்ளூர் சுகாதார அதிகாரிகள் அல்லது உலக சுகாதார நிறுவனத்தின் கூற்றுக்கு எதிராக இருக்கும் அல்லது தவறான தகவல்களை அளிக்கும் வீடியோக்கள் தடை செய்யப்படும். அதேபோல கோவிட்-19 தடுப்பூசி குறித்த தவறான தகவல்களை அளிக்கும் … Read more

4ஜி வசதி கொண்ட நோக்கியாவின் 2 அடிப்படை மாடல் மொபைல்கள் அறிமுகம்

அடிப்படை வசதிகள் கொண்ட இரண்டு புதிய மொபைல்களை நோக்கியா நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. நோக்கியா 215 மற்றும் 225 என இந்த இரண்டு மாடல்களிலும் 4ஜி வசதி கொடுக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 23 ஆம் தேதி முதல் இந்த மொபைல்கள் இணையத்தில் விற்பனைக்கு வருகின்றன. நவம்பர் 6 முதல் சில்லறை விற்பனைக் கடைகளில் கிடைக்கும். நோக்கியா 215ன் விலை ரூ.2,949. 225 மாடலின் விலை ரூ.3,499. குறைந்த விலையில் 4ஜி இணைப்புடன், தேவையான நவீன வசதியுடன் இந்த மொபைல்கள் … Read more

மூன்றாம் காலாண்டில் அதிகரித்த மொபைல் விற்பனை: முதலிடத்தில் ஸியோமி நிறுவனம்

இந்தியாவில் மூன்றாம் காலாண்டில் கிட்டத்தட்ட 5 கோடி ஸ்மார்ட்போன்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஒரு காலாண்டில் இந்த எண்ணிக்கையில் மொபைல்கள் விற்பது இதுவே முதல் முறை. கடந்த வருடம் இதே காலகட்டத்தை விட 8 சதவீதம் அதிகமாக தற்போது விற்கப்பட்டுள்ளது. இதில் ஸியோமி நிறுவனமே சந்தையில் முதலிடத்தைப் பெற்றுள்ளது. 1.31 கோடி மொபைல்களை விற்று 26.1 என்ற அளவு சந்தையில் தனது இருப்பைப் பெற்றுள்ளது. அடுத்த இடத்தில் சாம்சங் நிறுவனம் உள்ளது. மொத்தம் 1.02 கோடி மொபைல்களை விற்றுள்ளது. … Read more

Free Fire redeem code: உங்கள் வீரனுக்கு கூடுதல் பலத்தை சேருங்கள்!

ஒவ்வொரு நாளும் பிரீ பையர் விளையாடுபவர்களுக்கு இலவச குறியீடு வழங்கப்படுகிறது. இந்த குறியீடுகளைக் கொண்டு கேமர்கள் சலுகைகள் பெற முடியும். பிற நாட்களைப் போலவே, இன்றும் (பிப்ரவரி 9) Garena Free Fire விளையாட்டிற்கான பல குறியீடுகளை வெளியாகியுள்ளது. இந்த குறியீடுகள் கிழே பட்டியலிடப்பட்டுள்ளன. இதைப் பயன்படுத்தி நீங்கள் பல சலுகைகளைத் திறக்கலாம். குறியீடுகளை உடனடியாக பயன்படுத்த வேண்டும். அதாவது ஒவ்வொரு நாளும் பகல் 12 மணி வரையே இந்த குறியீடுகள் செல்லுபடியாகும் என்பது நினைவுக்கூரத்தக்கது. இன்றைய … Read more

பகுதி 1: குவாண்டம் தகவல் தொடர்பு: இஸ்ரோவின் முன்னோடி சோதனை வெற்றி

வங்கியிலிருந்து அனுப்பப்படும் புத்தாண்டு வாழ்த்து மின்னஞ்சலை உடனே பார்த்து விடலாம். ஆனால் வங்கியிலிருந்து மின்னஞ்சலில் வரும் உங்களது மாதாந்திர கணக்கு ஆவணத்தை பாஸ்வேர்டு (கடவு சொல்)இல்லாமல் உங்களால் திறக்க முடியாது.அதிலும் ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் ஒரு பிரத்யேக பாஸ்வேர்டு இருக்கும். இப்படி முக்கியத்துவம் வாய்ந்ததகவல், மூன்றாம் மனிதருக்கு செல்லாமல் தடுக்க பல தகவல் பாதுகாப்பு முறைகள் பின்பற்றப்படுகின்றன. தொழில் துறை, பொருளாதாரம், நிர்வாகம், தகவல் பரிமாற்றம், கல்வி,மருத்துவம், பொழுதுபோக்கு என உலகம் முழுவதும் ‘இணைய நெடுஞ்சாலைகளில்’ பின்னப்பட்டு சிந்தனையின் … Read more

இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரரைக் கைவிடும் மைக்ரோசாஃப்ட்: எட்ஜ் ப்ரவுசர் பயன்பாட்டை ஊக்குவிக்க திட்டம்

எட்ஜ் ப்ரவுசரின் பயன்பாட்டை அதிகரிக்க மைக்ரோசாஃப்ட் நிறுவனம் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரருக்கான பயனர் சேவையை நிறுத்த முடிவு செய்துள்ளது. கூகுள் க்ரோம், ஃபயர்ஃபாக்ஸ் உள்ளிட்ட ப்ரவுசர்களின் வருகைக்குப் பிறகு இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரரின் தாக்கம் குறைந்தது. இதனால் எட்ஜ் பிரவுசரை ஐந்து வருடங்களுக்கு முன் மைக்ரோசாஃப்ட் அறிமுகம் செய்தது. தற்போது சர்வதேச அளவில் இணையப் பயன்பாட்டில் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரருக்கு 5 சதவீத சந்தைப் பங்கு உள்ளது. இந்த ப்ரவுசரில் செயல்படாத இணையதளங்கள் தானாகவே மைக்ரோசாஃப்டின் எட்ஜ் ப்ரவுசருக்குச் சென்றுவிடும். ட்விட்டர், … Read more

பிராந்திய மொழி காணொலிகளுக்கான நம்பர் 1 தளம் யூடியூப்: முதல் இரு இடங்களில் இந்தி, தமிழ்

இந்தியாவில் மாநில மொழிகளில் காணொலிகள் பார்க்க மக்கள் அதிகம் விரும்பும் தளமாக யூடியூப் முதலிடத்தில் உள்ளது. இதில் இந்தி மொழிக் காணொலிகள் முதலிடத்திலும், தமிழ் மொழிக் காணொலிகள் இரண்டாவது இடத்திலும் உள்ளன. கூகுளின் யூடியூப் தளத்தை இந்தியாவில் ஒவ்வொரு மாதமும் 32.5 கோடி பார்வையாளர்கள் பார்வையிடுகின்றனர் என்றும், தொலைக்காட்சியை விட 4.8 மடங்கு அதிக தாக்கத்தை யூடியூப் ஏற்படுத்துவதாகவும் அந்நிறுவனம் கூறியுள்ளது. இது பற்றிப் பேசியிருக்கும் கூகுள் இந்தியா பிரிவின் தலைவர் சஞ்சய் குப்தா, “ஒவ்வொரு நாளும் … Read more

மீண்டும் முடங்கிய ட்விட்டர் தளம்: சில மணி நேரங்களில் சரி செய்யப்பட்டது

இந்தியா உள்ளிட்ட உலகின் சில பகுதிகளில் ட்விட்டர் தளத்தை இயக்குவதில் பயனர்கள் நேற்று சிக்கலைச் சந்தித்தனர். புதிய ட்வீட்டுகளைக் காட்டாமல், என்னவோ தவறாகிவிட்டது, மீண்டும் முயற்சியுங்கள் என்ற செய்தி பயனர்களுக்கு வந்துகொண்டே இருந்தது. எதனால் இந்தப் பிரச்சினை ஏற்பட்டது என்பது குறித்து ட்விட்டர் தரப்பிலிருந்து எந்தவிதமான தகவலும் வரவில்லை. இதுகுறித்து அதிகாரபூர்வ அறிக்கை எதையும் ட்விட்டர் இன்னும் வெளிவிடவில்லை. ஆனால், தளத்தின் பாதுகாப்புக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை என்று கூறப்படுகிறது. புதன்கிழமை இரவு 8 மணியளவில் பல … Read more