7 நாட்களில் மறைந்து போகும் மெசேஜ்: வாட்ஸ் அப்பில் புதிய வசதி

வாட்ஸ் அப் செயலியில் அனுப்பும் செய்திகள் குறிப்பிட்ட காலத்துக்குள் மறைந்து போகும் வசதி அறிமுகம் செய்யப்படவுள்ளது. ஃபேஸ்புக் நிறுவனத்துக்குச் சொந்தமான வாட்ஸ் அப் செயலியில், கடந்த சில காலமாகவே இந்த வசதியைக் கொண்டு வர முயற்சிகள் நடந்தன. தற்போது அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ) பக்கத்தில் இந்த வசதி குறித்த அறிமுகத்தை அந்நிறுவனம் கொடுத்துள்ளது. அனுப்பும் செய்திகளை மறைய வைக்கும் கட்டுப்பாடு பயனர்கள் கையில்தான் இருக்கும். வேண்டுமென்றால் அதைப் பயன்படுத்தலாம். இல்லையென்றால் அணைத்து வைக்கலாம். ஆனால், குழுக்களில் … Read more

700 கோடி பார்வைகளைத் தாண்டி யூடியூபில் சாதனை படைத்த குழந்தைகள் பாடல்

யூடியூபில் அதிகம் பார்க்கப்பட்ட வீடியோ என்கிற சாதனையை குழந்தைகளுக்கான பாடல் ஒன்று படைத்துள்ளது. பேபி ஷார்க் என்கிற இந்தக் குழந்தைப் பாடல் தற்போது 700 கோடி முறைக்கு மேல் பார்க்கப்பட்டுள்ளது. தொடர்ந்து இதன் பார்வைகள் தினந்தோறும் ஏறுமுகத்தில் உள்ளன. முன்னதாக அதிகம் பார்க்கப்பட்ட வீடியோவாக டெஸ்பாஸிடோ என்கிற பாடல் இருந்தது. தென்கொரியாவைச் சேர்ந்த பின்க்ஃபாங் என்கிற கல்வி மற்றும் பொழுதுபோக்கு நிறுவனம்தான் பேபி ஷார்க் பாடலைத் தயாரித்துள்ளது. வெறும் 2 நிமிடம் மட்டுமே ஓடும் இந்தப் பாடல், … Read more

இறுதிகட்டத்தை எட்டியது 5ஜி நெட்வொர்க்: மத்திய அமைச்சர் தகவல்

புதுடெல்லி: 5ஜி நெட்வொர்க் பணிகள் இறுதிகட்டத்தை எட்டிவருவதாக மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார். இந்திய தொலைதொடர்பு துறையினர் தகுதிவாய்ந்த வெளிநாட்டு கொள்முதலாளர்களை சந்திப்பதற்கான வாய்ப்புகளை வழங்குவதற்காக, ‘இந்தியா டெலிகாம் 2022’ எனும் பிரத்யேக சர்வதேச வர்த்தக கண்காட்சி இன்று தொடங்கியது. இந்திய அரசின் வர்த்தகத் துறையின் சந்தை அணுகல் முன்முயற்சி திட்டத்தின் கீழ் தொலைத்தொடர்புத் துறை மற்றும் வெளியுறவு அமைச்சகத்தின் ஆதரவுடன் தொலைதொடர்பு உபகரணங்கள் மற்றும் சேவைகள் ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் 2022 … Read more

வெறும் ரூ.8,999 விலையில் தொடங்கும் 6000mAh பேட்டரி ஸ்மார்ட்போன்கள்!

தற்போது, சந்தையில் கால்பதிக்கும் பெரும்பாலான ஸ்மார்ட்போன்கள் 4500mAh அல்லது 5000mAh பேட்டரி உடன் தான் வருகிறது. அதிவேக பாஸ்ட் சார்ஜிங் அம்சம் உள்ளதால், நிறுவனங்கள் பேட்டரியின் சேமிப்புத் திறனை குறைத்து தயாரிக்கிறது. பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு இருந்தாலும், சிலருக்கு தினமும் இரண்டு முறை சார்ஜ் செய்வது எளிதான காரியமாக இருப்பதில்லை. எனவே, அதிக திறன் கொண்ட பேட்டரியுடன் வரும் புதிய ஸ்மார்ட்போனை வாங்க நினைத்தால், சந்தையில் உள்ள ஒன்றுக்கும் மேற்பட்ட மொபைல்களை நாங்கள் பட்டியலிட்டுள்ளோம். Motorola முதல் … Read more

ஃபிளாஷ் ப்ளேயருக்கு விடை கொடுத்த அடோபி: விண்டோஸிலும் நீக்கம்

ஃபிளாஷ் ப்ளேயருக்கு அடோபி நிறுவனம் அதிகாரபூர்வமாக விடை கொடுத்துள்ளது. அந்நிறுவனத்தின் சமீபத்திய பிடிஎஃப்பை இயக்குவதற்கான மென்பொருள்களில் ஃபிளாஷைப் பயன்படுத்தவில்லை. மேலும் சில முக்கியப் பாதுகாப்புப் பிரச்சினைகளையும் சரி செய்துள்ளது. ஃப்ளாஷைச் சார்ந்து கொடுக்கப்பட்டிருந்த தேர்வுகள் தற்போது இன்னொரு டூல்பார் மூலம் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் Update, Add, Delete, Export, Archive ஆகிய தேர்வுகள் உள்ளன. இந்த வருடத்தின் கடைசியில் ஃபிளாஷ் மென்பொருளை ஒட்டுமொத்தமாக நீக்கும் அடோபி நிறுவனம், ஃபிளாஷ் இல்லாத எதிர்காலத்துக்குத் தயாராகி வரும் அடோபி, மார்க் … Read more

கூகுள் குரோம் அப்டேட் பண்ணுங்க… ஆபத்து இருப்பதாக அரசு தகவல்!

இந்தியத் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் ஒரு பகுதியாக செயல்பட்டு வரும் ‘இந்திய கணினி அவசர உதவிக் குழு (CERT-In)’ கூகுள் குரோம் பிரவுசர் ( Google Chrome Browser ) பயனர்களுக்கு மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதாவது 98.0.4758.80.க்கு முந்தைய பதிப்பைப் பயன்படுத்துபவர்களுக்கு இந்த எச்சரிக்கை எனத் தெரிவித்துள்ளது. கணினியை இலக்காக வைத்து சைபர் அட்டாக் நடத்துவதற்கு சாதகமான பல காரணிகள் கூகுள் குரோம் உலாவியில் கண்டறியப்பட்டுள்ளது. சேமிப்பு, திரைப் பதிவு, உள்நுழைவு, பிடிஎப், ஆட்டோ பில், … Read more

ரீவைண்ட் 2020 கிடையாது: யூடியூப் அறிவிப்பு

இந்த வருடம் ரீவைண்ட் தொகுப்பு பகிரப்படாது என யூடியூப் தளம் அறிவித்துள்ளது. ஒவ்வொரு வருடத்தின் முடிவிலும், அந்த வருடம் யூடியூப் தளத்தில் பிரபலமான முகங்கள், காணொலிகளின் தொகுப்பை அந்தத் தளம் வெளியிட்டு வருகிறது. ரீவைண்ட் என்று அழைக்கப்பட்டு வரும் இந்தத் தொகுப்பு கடந்த பத்து வருடங்களாகத் தொடர்ந்து வெளியாகி வருகிறது. ஆனால், கரோனா தொற்று காரணமாக சர்வதேச அளவில் மக்களின் வாழ்க்கையும், வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளதால், இந்த வருடம் இந்த ரீவைண்ட் தொகுப்பை வெளியிடப்போவதில்லை என யூடியூப் தளம் … Read more

முகக்கவசத்தை தொட வேண்டாம்; எல்லாம் எங்க கேமரா பாத்துக்கும் – ஆப்பிளின் புதிய அப்டேட்!

ஆப்பிள் நிறுவனம் தனது பயனர்களுக்கு தொடர்ந்து புதுபுது அம்சங்களைப் புகுத்தி புதிய ஐஓஎஸ் (iOS) இயங்குதள அப்டேட்டுகளை வழங்குகிறது. தற்போது செயல்பாட்டில் உள்ள ஐஓஎஸ் 15.3, வரவிருக்கும் ஐஓஎஸ் 15.4 பதிப்புகள் குறித்து அண்மையில் தகவல்கள் கசிந்த வண்ணம் உள்ளன. அந்த வகையில் ஆப்பிள் ‘பேஸ் ஐடி வித் ஏ மாஸ்க்’ (Face ID with a mask) எனும் மாஸ்க்குடன் போனை திறக்கும் வசதியை ஆப்பிள் தனது பயனர்களுக்கு அறிமுகப்படுத்த உள்ளது. கொரோனா பெருந்தொற்று காரணமாக … Read more

இந்தியாவில் இலவசமாக நெட்ஃபிளிக்ஸ்: டிசம்பர் 5-6 தேதிகளில் புதிய சலுகை 

டிசம்பர் 5 மற்றும் 6ஆம் தேதிகளில் இந்தியாவில் நெட்ஃபிளிக்ஸை இலவசமாகப் பயன்படுத்தலாம் என அந்தத் தளம் அறிவித்துள்ளது. உலக அளவில் உள்ள முன்னணி ஓடிடி தளங்களில் ஒன்று நெட்ஃபிளிக்ஸ். பல பிரபலமான திரைப்படங்கள், ஆவணப்படங்கள், நிகழ்ச்சிகள், வெப் சீரிஸ் ஆகியவை இந்தத் தளத்தில் கொட்டிக் கிடக்கின்றன. இந்தியாவில் மாதம் ரூ.199 என்று ஆரம்பித்து ரூ.799 வரை 4 வகையான கட்டண அமைப்புகளை நெட்ஃபிளிக்ஸ் நிர்ணயித்துள்ளது. அமேசான் ப்ரைம், டிஸ்னி+ ஹாட்ஸ்டார், ஜீ5 என இந்தியாவில் ஏற்கெனவே ஓடிடி … Read more

இந்தியாவில் பணப் பரிமாற்றத்துக்குக் கட்டணமா? -கூகுள் பே விளக்கம்

கூகுள் பே செயலியில் பணப் பரிமாற்றத்துக்கான கட்டணம் என்று அறிவிக்கப்பட்டது அமெரிக்காவில் மட்டுமே என்றும், இந்தியாவில் அப்படி எந்தக் கட்டணமும் வசூலிக்கப்படாது என்றும் அந்நிறுவனம் தெளிவுபடுத்தியுள்ளது. சமீபத்தில் கூகுள் பே இணையதளத்தில், ஜனவரி மாதம் முதல் தளம் செயல்படாது என்று அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும் பணப் பரிமாற்றத்துக்குக் கட்டணம் விதிக்கப்போவதாகவும் பல ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. இதனால் கூகுள் பேவை இனி பயன்படுத்த வேண்டுமா என இந்தியப் பயனர்கள் இடையே கேள்வி எழுந்தது. ஆனால் தற்போது கூகுள் நிறுவனம் … Read more