உலகில் அதிக ஸ்பேம் அழைப்புகள்: இந்தியாவுக்கு 9-வது இடம்
ஸ்பேம் என்று சொல்லப்படும் மோசடி தொலைபேசி அழைப்புகள் பெறுவதில் உலக அளவில் இந்தியா 9-வது இடத்தைப் பெற்றுள்ளது. ட்ரூகாலர் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. மூன்று வருடங்களுக்கு முன்னால் இந்தப் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் இருந்தது. தற்போது பிரேசில் முதலிடத்திலும், அமெரிக்கா இரண்டாவது இடத்திலும் உள்ளது. இந்தியாவில் பெரும்பான்மையான ஸ்பேம் அழைப்புகள் உள்நாட்டிலிருந்து வருபவையே. ஆனால், கடுமையான ஊரடங்கு விதிமுறைகளால் இப்படியான மோசடி அழைப்புகளைச் செய்பவர்களால் வேலைக்குச் செல்ல முடியவில்லை அல்லது அப்படியான அழைப்புகளைச் செய்யத் … Read more