நோக்கியா அறிமுகம் செய்யும் 2 புதிய மொபைல்கள்
நோக்கியா நிறுவனம் இந்தியாவில் புதிதாக இரண்டு மொபைல்களை அறிமுகம் செய்யவுள்ளது. இது பற்றிய காணொலி முன்னோட்டம் ஒன்றை அந்நிறுவனம் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. இந்தக் காணொலியில் புதிய மொபைலின் தோற்றம் இடம்பெறவில்லை. மாறாக மொபைல் அளவிலான ஒரு கோடு மட்டுமே வரையப்பட்டுத் தோன்றுகிறது. அந்த அளவை வைத்துப் பார்க்கும்போது இது நோக்கியா சி 3 மொபைலாக இருக்கும் என்று தெரிகிறது. இன்னொரு மொபைல், அடிப்படை வசதிகள் கொண்ட கீபேட் மொபைலாக இருக்கும் என்று தெரிகிறது. … Read more