குழப்பும் ஃபேஸ்புக்கின் புதிய தோற்றம்: கடுமையாகச் சாடும் நெட்டிசன்கள்
ஃபேஸ்புக்கின் புதிய தோற்றம் குழப்பமாக இருப்பதாகக் கடுமையாகச் சாடியிருக்கும் பயனர்கள், இந்தத் தோற்றத்தை நிரந்தரமாக அமல் செய்தால் ஃபேஸ்புக்கை விட்டு வெளியேறுவோம் என்றும் கூறியுள்ளனர். மேலே நீல நிற நேவிகேஷன் பார் (navigation bar) இருக்கும் ஃபேஸ்புக்கின் இப்போதைய தோற்றம் செப்டம்பர் 1-ம் தேதியிலிருந்து மாறவுள்ளது. கணினிகளில் ஃபேஸ்புக் பயன்படுத்துபவர்களுக்குக் கடந்த சில மாதங்களாகவே புதிய தோற்றம் எப்படி இருக்கும் என்பதன் முன்னோட்டம் காட்டப்பட்டு வருகிறது. புதிய தோற்றத்துக்கு மாற்றி விட்டு மீண்டும் இப்போதுள்ள தோற்றத்துக்கு மாற்றிக்கொள்ளலாம். … Read more