4.6 பில்லியன் டாலர்களை இழந்த எலான் மஸ்க்: பணக்காரர்கள் பட்டியலில் பெஸோஸ் மீண்டும் முதலிடம் 

டெஸ்லா நிறுவனத்தின் பங்குகள் வீழ்ச்சி கண்டதால் எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பு குறைந்ததையடுத்து அமேசான் நிறுவனர் ஜெஃப் பெஸோஸ், உலகப் பணக்காரர்கள் பட்டியலில் மீண்டும் முதலிடத்தைப் பிடித்துள்ளார். செவ்வாய்க்கிழமை அன்று டெஸ்லாவின் பங்குகள் 2.4 சதவீதம் வீழ்ச்சி கண்டது. இதனால் மஸ்க் 4.6 பில்லியன் அமெரிக்க டாலர்களை இழந்தார். தொடர்ந்து உலகின் 500 பெரும் பணக்காரர்களை வரிசைப்படுத்தும் ப்ளூம்பெர்க் கோடீஸ்வரர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்துக்குத் தள்ளப்பட்டார். 191.2 பில்லியன் அமெரிக்க டாலர்கள் சொத்து மதிப்புடன் பெஸோஸ் மீண்டும் … Read more

Free Fire redeem code: பிப்ரவரி 7 கரீனா பிரீ பையர் ரிடீம் கோட்ஸ்!

ஒவ்வொரு நாளும் பிரீ பையர் விளையாடுபவர்களுக்கு இலவச குறியீடு வழங்கப்படுகிறது. இந்த குறியீடுகளைக் கொண்டு கேமர்கள் சலுகைகள் பெற முடியும். பிற நாட்களைப் போலவே, இன்றும் (பிப்ரவரி 7) Garena Free Fire விளையாட்டிற்கான பல குறியீடுகளை வெளியாகியுள்ளது. இந்த குறியீடுகள் கிழே பட்டியலிடப்பட்டுள்ளன. இதைப் பயன்படுத்தி நீங்கள் பல சலுகைகளைத் திறக்கலாம். குறியீடுகளை உடனடியாக பயன்படுத்த வேண்டும். அதாவது ஒவ்வொரு நாளும் பகல் 12 மணி வரையே இந்த குறியீடுகள் செல்லுபடியாகும் என்பது நினைவுக்கூரத்தக்கது. இன்றைய … Read more

ட்விட்டருக்கு மாற்று?- 5 நாட்களில் 9 லட்சம் பயனர்கள்: 'கூ' செயலிக்குக் குவியும் வரவேற்பு

பிரபல சமூக வலைதளமான ட்விட்டர் செயலிக்கு மாற்றாக இந்தியாவில் தொடங்கப்பட்டிருக்கும் ‘கூ’ செயலிக்குத் தொடர்ந்து வரவேற்பு அதிகரித்து வருகிறது. வெறும் ஐந்தே நாட்களில் 9 லட்சம் பயனர்கள் புதிதாக ‘கூ’ செயலியில் இணைந்துள்ளனர். மத்திய அரசுக்கும் ட்விட்டர் நிறுவனத்துக்கும் சமீபகாலமாக முரண் ஏற்பட்டுள்ளது. விவசாயிகள் போராட்டம் தொடர்பாக சர்ச்சைக்குரிய தகவல்களைப் பதிவிட்டு வரும் கணக்குகளை முடக்காத விவகாரத்தில் ட்விட்டர் நிறுவனத்துக்கு மத்திய அரசு எச்சரிக்கை விடுத்திருந்தது. குற்றச் செயல்களைத் தூண்டும் விதமான பதிவுகளைக் கருத்துச் சுதந்திரம் என்று … Read more

Poco X4 5G: ஸ்னாப்டிராகன் 695 சிப்செட் வசதியுடன் களமிறங்கும் பட்ஜெட் போக்கோ போன்!

போக்கோ நிறுவனம், தனது எக்ஸ் தொகுப்பில் புதிய ஸ்மார்ட்போனை விரைவில் அறிமுகம் செய்யவுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் குறித்த தகவல்கள் இணையத்தில் தற்போது கசிந்துள்ளது. போக்கோ எக்ஸ்4 (Poco X4 5G) என்று பெயரிடப்பட்டுள்ள ஸ்மார்ட்போன் குறித்த தகவல்களை, மொபைல் பதிவு தளங்களில் போக்கோ நிறுவனம் பதிவுசெய்துள்ளது. இந்த போனின் வடிவமைப்பு, ரெட்மி நோட் 11 ப்ரோ 5ஜி (Redmi Note 11 Pro 5G) ஸ்மார்ட்போனுக்கு ஒத்ததாக இருக்கிறது. அமோலெட் திரை, ஸ்னாப்டிராகன் 5ஜி சிப்செட், பின்புறம் … Read more

மே 15-ம் தேதிக்குள் வாட்ஸ் அப்பின் புதிய கொள்கை மாற்றங்களை ஏற்கவில்லை என்றால் என்னவாகும்?

வாட்ஸ் அப் செயலியில் புதிதாகத் தனியுரிமைக் கொள்கைகள் (new privacy policy) மாற்றப்பட்டுள்ளன. அதை ஏற்காத பயனர்களால் செய்திகளைப் படிக்கவோ, அனுப்பவோ முடியாது என்று கூறப்பட்டுள்ளது. ஆனால், அழைப்புகளைப் பெற முடியும் என்று தெரிகிறது. ‘மே 15 முதல் வாட்ஸ் அப் முழுமையாகச் செயல்பட, புதிய விதிகளை ஏற்க வேண்டும் என்று பயனர்களிடம் மெதுவாகக் கேட்க ஆரம்பிப்போம்’ என்று தங்களது கூட்டு நிறுவனங்களுக்கு அனுப்பிய மின்னஞ்சலில் வாட்ஸ் அப் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த மின்னஞ்சலை டெக்க்ரன்ச் என்கிற … Read more

விளம்பர உள்ளடக்கங்களை சமூக ஊடக ஆளுமைகள் வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டும்: விளம்பரக் கட்டுப்பாட்டு ஆணையம்

சமூக ஊடகங்களில் தாக்கம் ஏற்படுத்தும் ஆளுமைகள், தாங்கள் விளம்பரப்படுத்தும் உள்ளடக்கங்கள் குறித்து வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டும் என்று இந்திய விளம்பத் தர நிர்ணய கவுன்சில் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இந்திய விளம்பத் தர நிர்ணய கவுன்சிலின் (ASCI) புதிய வரைவறிக்கையில், டிஜிட்டல் ஊடகங்களில் தாக்கம் ஏற்படுத்தும் ஆளுமைகள், யூடியூப் பதிவர்கள், பிரபலங்கள் உள்ளிட்டோர் தங்களுக்குப் பிடித்தமான பிராண்டட் பொருட்கள் என்று கூறிப் பதிவிடும்போது, அது விளம்பரப்படுத்தப்பட்ட உள்ளடக்கமாக இருந்தால் அதைத் தெளிவாகத் தெரிவிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. … Read more

5ஜி சேவை: குவால்காம் நிறுவனத்துடன் கைகோத்த ஏர்டெல்

இந்தியாவில் வாடிக்கையாளர்களுக்கு 5ஜி சேவை அளிப்பது தொடர்பாக பார்தி ஏர்டெல், பிரபல அமெரிக்க சிப் நிறுவனமான குவால்காம் உடன் கைகோத்துள்ளது. இந்தியாவில் இதுவரை 5ஜி அலைக்கற்றை தொடர்பான ஏலம் விடப்படவில்லை. இந்நிலையில், 5ஜி அலைக்கற்றையை வழங்க தொலைத்தொடர்பு சேவை வழங்குநர்கள் போட்டி போட்டு வருகின்றனர். இதற்கிடையே நாட்டின் 2-வது பெரிய டெலிகாம் சேவையாளரான பார்தி ஏர்டெல், குவால்காம் உடன் இணைந்து 5ஜி அலைக்கற்றையை வழங்க முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளது. இதற்கிடையே ஏர்டெல் நிறுவனத்தின் பிரதான போட்டியாளரான ஜியோ, … Read more

ரஷ்யா, ஈரான், அர்மேனியாவுடன் தொடர்புடைய நூற்றுக்கணக்கான கணக்குகள் நீக்கம்: ட்விட்டர் அறிவிப்பு

ரஷ்யா, ஈரான், அர்மேனியாவுடன் தொடர்புடைய நூற்றுக்கணக்கான ட்விட்டர் கணக்குகள் நீக்கப்பட்டுள்ளதாக ட்விட்டர் நிறுவனம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக அந்நிறுவனத்தின் வலைப்பூ பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ”ட்விட்டர் கொள்கைகளை மீறிய காரணத்துக்காக ஈரானில் இருந்து செயல்பட்டு வந்த 238 கணக்குகள் நீக்கப்பட்டுள்ளன. நேட்டோ படைகள் குறித்த தகவல்களைப் பரப்பிய காரணத்துக்காகவும் அமெரிக்காவையும் ஐரோப்பிய ஒன்றியத்தையும் குறிவைத்துப் பதிவிட்ட காரணத்தாலும் ரஷ்ய நாட்டில் இருந்த 100 கணக்குகளை நீக்கியுள்ளோம். அதேபோல அஸர்பைஜான் நாட்டைக் குறிவைத்துப் பதிவுகளைப் பரப்பிய அர்மேனிய நாட்டைச் … Read more

இனி வீடியோக்களை ம்யூட் செய்து அனுப்பலாம்: வாட்ஸ்அப்பில் அறிமுகம்

எதிர்காலத்தில் வீடியோக்களை ம்யூட் செய்து அனுப்பும் வசதி வாட்ஸ்அப்பில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எனினும் தற்போதைக்கு பீட்டா வெர்ஷனில் மட்டும் இந்த வசதி செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரபலக் குறுஞ்செய்து சேவை செயலி வாட்ஸ்அப். ஃபேஸ்புக் நிறுவனத்தின் கீழ் செயல்பட்டு வரும் இந்த செயலியில் தொடர்ந்து புதிய அப்டேட்டுகள் செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில் சில மாதங்களுக்கு முன்னால் ஸ்டேட்டஸ் வசதி அறிமுகம் செய்யப்பட்டு பெரும் வரவேற்பைப் பெற்றது. இதற்கிடையே தற்போது வீடியோக்களை ம்யூட் செய்து அனுப்பும் வசதி … Read more

முடிவுக்கு வரும் இண்டர்நெட் எக்ஸ்ப்ளோரர்: மைக்ரோசாஃப்ட் அறிவிப்பு

25 வருடங்களுக்கும் மேலாகப் பயன்பாட்டில் உள்ள மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் பிரவுசரான இண்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் முடிவுக்கு வருகிறது. அடுத்த ஆண்டோடு இந்தச் சேவையை நிறுத்த மைக்ரோசாஃப்ட் முடிவு செய்துள்ளது. கணினிகளில் இணையப் பயன்பாடு ஆரம்பித்த காலத்தில் பயனர்களுக்கு இருந்த ஒரே பிரவுசர் இண்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் மட்டுமே. ஆனால், காலப்போக்கில் மொசில்லா ஃபயர்ஃபாக்ஸ், சஃபாரி, க்ரோம் போன்ற பிரவுசர்களின் வேகத்தோடு எக்ஸ்ப்ளோரரால் போட்டி போட முடியவில்லை. அதன் பயன்பாடு மிக மிகக் குறைவான விகிதத்திலேயே இருந்து வந்தது. மேலும் மைக்ரோசாஃப்ட் … Read more