Ajithkumar: ஸ்பெயினில் ஏற்பட்ட விபத்து; அஜித்துக்கு என்ன நடந்தது?

கார் பந்தயங்களில் ஈடுபட்டு வரும் நடிகர் அஜித் குமார், இன்றைய ரேஸின்போது விபத்தில் சிக்கியுள்ளார். கடந்த மாதம் துபாயில் நடைபெற்ற ரேஸில் 3வது இடத்தைப் பெற்று நாட்டுக்கு பெருமை சேர்த்தார். தொடர்ந்து இன்று ஸ்பெயினின் வலென்ஸியா நாட்டில் நடைபெறும்  Porsche Sprint Challenge Southern European Series 2025 போட்டியில் களமிறங்கியுள்ளார். Ajith Kumar விபத்து This is the second incident within a month. Passion is powerful, but no ambition is … Read more

Fire: "உன்னை உடைக்கிற நாள்கள்தான் உன்னை உருவாக்கும் நாள்கள்..” – வைரலாகும் பாலாஜி முருகதாஸின் பதிவு

பிக் பாஸ் தமிழ் சீசன் நான்காவது நிகழ்ச்சியில் ரன்னர் அப் ஆக தேர்வான பாலாஜி முருகதாஸ் தற்போது ‘ஃபயர்’ படத்தில் நடித்திருக்கிறார். இந்நிலையில் பாலாஜி முருகதாஸ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார். அந்தப் பதிவில், “எனது பர்சனல் விஷயங்களை நான் எப்போதும் சமூக வலைத்தளங்களில் பதிவிட மாட்டேன். ஆனால் இப்போது ஒரு நல்ல காரணத்திற்காக போஸ்ட்  ஒன்றைப் பதிவு செய்கிறேன். பாலாஜி முருகதாஸ் ஒரு வருடத்திற்கு முன்னாள் விபத்து ஒன்றில் சிக்கிவிட்டேன். என்னுடைய முதுகெலும்பு … Read more

Dragon: "உங்களில் ஒருவனாக என்னை இங்கு நிற்க வைத்ததற்கு நன்றி…" – பிரதீப் ரங்கநாதன் நெகிழ்ச்சி

பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவாகியிருக்கிற `டிராகன்’ திரைப்படம் நேற்று (பிப்ரவரி 22) திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. `லவ் டுடே’ வெற்றிக்குப் பிறகு பிரதீப் மீண்டும் ஏ.ஜி.எஸ் தயாரிப்பு நிறுவனத்துடன் கைகோர்த்து இப்படத்தில் நடித்திருக்கிறார். இந்தப் படத்தை `ஓ மை கடவுளே’ திரைப்படத்தின் மூலம் கவனம் ஈர்த்த அஸ்வத் மாரிமுத்து இயக்கியிருக்கிறார். அனுபமா, காயது லோகர், மிஷ்கின், கெளதம் வாசுதேவ் மேனன் ஆகியோரும் இப்படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். டிராகன் இந்நிலையில் ‘டிராகன்’ பட … Read more

Yugabharathi:“15 நிமிஷத்துல மொத்த பாடலையும் வடிவேலு பாடிட்டாரு'' – சுவாரஸ்யம் பகிரும் யுகபாரதி

கவிஞர் யுகபாரதியின் ‘மஹா பிடாரி’ புத்தக வெளியீட்டு விழாவில் ஆளுமைகள் பலரும் பங்கேற்று பேசினர். அந்த நிகழ்வின் காணொளிகள் தொடர்ந்து சினிமா விகடன் யூட்யூப் தளத்தில் வெளியாகி வருகிறது. இயக்குநர், நடிகர் சசிக்குமார் பேசுகையில், “யுகபாரதிகிட்ட இப்போ வரை நான் கேக்கனும்னு நினைச்ச கேள்வி, `என்னைய ஏன்யா புத்தக வெளியீட்டு விழாவுக்கு கூப்புடுறீங்க. எனக்கும் கவிதைக்கு என்னயா சம்பந்தம்?’. நான் புத்தகம் வாசிப்பேன் அவ்வளவு தான். அவரு தான் இந்தாங்க புத்தகம்னு சொல்லி ‘மஹா பிடாரி’யைக் கொடுத்தாரு. … Read more

NEEK Review: இந்த நிலா வெளிச்சம் பாய்ச்சுகிறதா, மேகங்களிடையே மறைந்து ஏமாற்றுகிறதா?

காதல் தோல்வியால் திருமணம் செய்யாமலிருக்கும் பிரபுவை (பவிஷ் நாராயண்) கட்டாயப்படுத்தி பெண் பார்க்கக் கூட்டிச் செல்கிறார்கள் அவரது பெற்றோர். அங்கே சென்றால், அவனது பள்ளித் தோழி பிரீத்தி (ப்ரியா பிரகாஷ் வாரியர்) தான் அப்பெண் என்பது தெரிகிறது. இருவரும் ஒருவரையொருவர் புரிந்து கொள்ளச் சிறிது காலம் வேண்டும் என்று டேட் செய்கிறார்கள். அந்நேரத்தில், முன்னாள் காதலி நிலாவிடமிருந்து (அனிகா சுரேந்தன்) கல்யாண பத்திரிக்கை வர, உடைகிறார் பிரபு. ‘நிலா – பிரபு காதலில் என்னதான் ஆச்சு’ என்பதை … Read more

Amaran 100 : “ `நல்லப் படம் இல்லைனு தெரிஞ்சும் பண்றியா'னு எம்.ஜி.ஆர் சொன்ன வார்த்தை!" – கமல்ஹாசன்

கடந்தாண்டு தீபாவளி பண்டிகைக்கு நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான நிரைப்படம் `அமரன்’. மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை அடிப்படையாகக்கொண்டு உருவான இத்திரைப்படத்தை ராஜ்கமல் நிறுவனம் தயாரித்திருந்தது. சமீபத்தில் இப்படத்தின் 100-வது நாள் வெற்றிக் கொண்டாட்டம் சென்னையில் படக்குழுவினருடன் நடந்தது. அதில் பேசிய கமல்ஹாசன், ” `நீங்கள் எப்படி இந்தப் படத்தை ஒத்துக்கிட்டீங்கனு கேட்டால் பேசன் (PASSION) தான் காரணம். ஒரு சினிமா ரசிகனின் உண்மையான அடையாளம் ஒரு கதையைப் பார்க்கும்போது ‘இது சினிமாவாக வந்தா எப்படி இருக்கும்’னு … Read more

வெற்றி பெற்ற ஃபயர் படம்! பாலாஜிக்கு தங்க செயின் பரிசு..

Balaji Murugadoss Gold Chain Gift : ‘ஃபயர்’ திரைப்படத்தின் வெற்றியை ரசிகர்கள் முன்னிலையில் படக்குழுவினர் கொண்டாட்டம், நாயகன் பாலாஜி முருகதாசுக்கு தங்க சங்கிலியை பரிசாக வழங்கினார் ஜெ எஸ் கே   

`திராவிடர் கழகப் பெண்ணுக்கும், பாஜக ஐ.டி விங் பையனுக்குமான காதல் கதை அது!' – தியாகராஜன் குமாராராஜா

யுகபாரதி எழுதிய `மஹா பிடாரி’ என்ற கவிதை தொகுப்பு நூல் வெளியீட்டு விழாவில் தமிழ் சினிமாவின் ஆளுமைகள் பலரும் பங்கேற்று உரையாற்றினர். நூல் வெளியீட்டு விழாவின் காணொளிகள் அனைத்தும் ஒவ்வொன்றாக சினிமா விகடன் யூட்யூப் தளத்தில் வெளியாகி வருகிறது. தியாகராஜன் குமாரராஜா யுகபாரதி குறித்து கூறுகையில், “மாடர்ன் லவ் சீரிஸ்க்கு பாடல்கள் எழுதலாம் என்று முடிவு செய்தப் பிறகு யாரிடம் கேட்கலாம் என்று என்னுடைய நண்பர் ராஜு முருகனிடம் கேட்டேன். ராஜூ முருகனுக்கு யுகபாரதி சிறு வயதில் … Read more

டிராகன் படத்தில் பிரதீப்பிற்கு சம்பளம் எவ்வளவு? அடேங்கப்பா..இவ்வளவா?

Pradeep Ranganathan Salary In Dragon : இயக்குநராக வலம் வந்த பிரதீப் ரங்கநாதன் லவ் டுடே படம் மூலம் ஹீரோவாக அவதாரம் எடுத்தார். இந்த நிலையில், அவர் தற்போது நடித்திருக்கும் டிராகன் படம் எப்படியிருக்கு என்பது குறித்த விமர்சனத்தை இங்கு பார்ப்பாேம்.  

Dragon Review: `ஃபயர் ஃபயரும்மா…' அட்டகாசமான திரையனுபவமாகிறதா இந்த `டிராகன்'?

தன் வாழ்க்கையின் நலனுக்காக எந்தத் தவற்றையும் செய்யத் துணியும் இளைஞன், அதன் விளைவுகளை உணரும் கமெர்ஷியல் பயணமே இந்த ‘டிராகன்’. 48 அரியர்களுடன் கல்லூரியில் கெத்தாகத் திரிந்த ‘டி. ராகவன்’ என்கிற ‘டிராகன்’ (பிரதீப் ரங்கநாதன்), கல்லூரிக்குப் பின் பித்தலாட்டங்கள் செய்து, தான் வேலைக்குப் போவதாகப் பெற்றோரை நம்ப வைக்கிறார். இதனால், அவரின் காதலி கீர்த்தி (அனுபமா பரமேஸ்வரன்) ப்ரேக் அப் செய்து விட, உடைந்து போன டிராகன், குறுக்கு வழியில் வாழ்க்கையில் செட்டிலாக முடிவு செய்கிறார். … Read more