Bala 25: "பாலா சாரின் அந்த ஃபோன் கால்; என் வாழ்க்கையை மாற்றியத் தருணம்" – சூர்யா நெகிழ்ச்சி

இயக்குநர் பாலா, தனது திரையுலப் பயணத்தைத் தொடங்கி 25 ஆண்டுகள் நிறைவடைந்ததையும், அவரது ‘வணங்கான்’ பட இசை வெளியீட்டு விழாவையும் இணைந்து கொண்டாடும்படி இன்று சென்னை நந்தம்பாக்கம் ட்ரேட் சென்டரில் ‘பாலா 25’ விழா நடைபெற்று வருகிறது. இவ்விழாவில் நடிகர் சிவக்குமார், சூர்யா, விக்ரமன், மிஸ்கின், சமுத்திரக்கனி உள்ளிட்ட ஏராளமான திரை நட்சத்திரங்கள் கலந்துகொண்டுள்ளனர். இவ்விழாவில் நடிகர் சிவக்குமார் இயக்குநர் பாலாவுக்கு தங்க செயின் ஒன்றை பரிசாக வழங்கினார். இதையடுத்து பாலா குறித்து நெகிழ்ச்சியாகப் பேசியிருக்கும் நடிகர் … Read more

Soori: `தொடங்கியது சூரியின் அடுத்த படம்' பிரசாந்த் பாண்டிராஜ் – 'மாமன்' பட சுவாரஸ்யங்கள்

‘விடுதலை பார்ட் 1’க்குப் பிறகு வியக்க வைக்கும் அவதாரம் எடுத்து வருகிறார் சூரி. ‘கொட்டுக்காளி’, ‘கருடன்’ படங்களை அடுத்து வெற்றிமாறனின் ‘விடுதலை 2’ நாளை மறுதினம் வெளியாகிறது. அதனையடுத்து கதையின் நாயகனாக ‘மாமன்’ என்ற படத்தில் நடிக்கிறார் சூரி. ‘விலங்கு’ வெப்சீரிஸை இயக்கிய பிரசாந்த் பாண்டிராஜ், ‘மாமன்’ படத்தை இயக்குகிறார். இதன் படப்பிடிப்பு டிசம்பரில் தொடங்கும் என முன்பே நம் செய்தியில் குறிப்பிட்டிருந்தோம். நேற்று முன்தினம் படப்பூஜையுடன், படப்பிடிப்பும் தொடங்கியிருக்கிறது. படபூஜையில் ‘விலங்கு’ வெப்சிரீஸை இயக்குவதற்கு முன்னரே, … Read more

Vanangaan: "தனித்து நின்று வெற்றி பெற்ற இயக்குநர்" – பாலாவுக்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து

திரைப்பட இயக்குநர் பாலாவுக்கு வாழ்த்துச் செய்தியை பகிர்ந்துள்ளார் எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி. பாலா திரையுலப் பயணத்தைத் தொடங்கி 25 ஆண்டுகள் முடிவடைவதையும், அவரது வணங்கான் பட இசை வெளியீட்டு விழாவையும் இணைந்து கொண்டாடும்படி இன்று மாலை சென்னை நந்தம்பாக்கம் ட்ரேட் சென்டரில் விழா நடைபெற உள்ளது. பாலாவின் 25 ஆண்டுகால திரைப்பயணத்தை வாழ்த்தி சினிமா நட்சத்திரங்கள் உள்ளிட்ட பிரபலங்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், “தமிழ் … Read more

மஹாராஜாவிற்கு விஜய் சேதுபதி நடிக்கும் புதிய படம்! வெளியான மாஸ் அறிவிப்பு!

Vijay Sethupathi Next Film: விஜய் சேதுபதி நடிக்கும் புதிய படத்தை அட்லி தயாரிக்கிறார் என்றும் பாலாஜி தரணீதரன் இயக்க உள்ளார் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

Pushpa 2: `Kissik' பாடல் கிடைச்சதுக்குக் காரணமே `Golden Sparrow' பாடல்தான் – பாடகி சுப்லாஷினி

வசூலில் வேட்டையாடிக் கொண்டிருக்கிறது `புஷ்பா 2′. அல்லு அர்ஜூன் இத்திரைப்படத்தின் புஷ்பா கதாபாத்திரத்திற்காக அவ்வளவு மெனகெட்டிருக்கிறார். அந்த அசாதாரண உழைப்பும் படத்தில் வெளிப்பட்டிருக்கிறது. கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருக்கிறார். ஒரே ஒரு பாடலுக்கு மட்டும் நடிகை ஶ்ரீ லீலா வந்திருக்கிறார். அவர் படத்தில் வரும் அந்தப் பாடல்தான் தற்போதைய சமூக வலைதளப் பக்க வைரல். அந்தப் பாடலை தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் என நான்கு மொழியிலும் தமிழ் சுயாதீன இசைக்கலைஞர் சுப்லாஷினி பாடியிருக்கிறார். சமீபத்தில் வெளியான … Read more

Samuthirakani: "இவன் சினிமாவ நெனச்சே பார்க்கக் கூடாதுனு காலால் உதைச்சாங்க" – சமுத்திரக்கனி உருக்கம்

இயக்குநர் நந்தா பெரியசாமி இயக்கத்தில் சமுத்திரக்கனி, நாசர், வடிவுக்கரசி, பாரதிராஜா, தம்பி ராமையா, கருணாகரன், அனன்யா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘திரு.மாணிக்கம்’. இத்திரைப்படம் டிசம்பர் 27ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. இதையொட்டி இன்று இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் சமுத்திரக்கனி, வடிவுக்கரசி, அமீர், லிங்குசாமி, விக்ரமன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர். இவ்விழாவில் தனது திரைப்பயணம் குறித்து உருக்கமாகப் பேசிய நடிகர் சமுத்திரக்கனி, “முதன் முதல சீரியல் சூட்டிங் ஒன்னுல ஒரு சின்ன கேரக்டர்ல … Read more

Ameer: “விஜய்யை தரம் தாழ்ந்து பேசினால் தி.மு.க வாக்குகளை இழக்கும்" – அமீர்

சமுத்திரக்கனி நடித்திருக்கும் ‘திரு.மாணிக்கம்’ படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் கலந்துகொண்ட இயக்குநர் அமீர், செய்தியாளர்களிடம் பேசியிருக்கிறார். இதுகுறித்து பேசியிருக்கும் இயக்குநர் அமீர், “தி.மு.க மூன்றாம் தர பேச்சாளர்களை வைத்து கட்சியை வளர்க்க வேண்டிய அவசியமில்லை. கருத்தை கருத்தாக எதிர்கொள்ள வேண்டும். ஆபாசமாகப் பேசுவதாலோ, குடும்பத்தை அவதூறாகப் பேசுவதாலோ, அவர்களது தொழிலை இழிவுப்படுத்திப் பேசுவதாலோ எவரையும் வீழ்த்திவிட முடியாது. விஜய்யை தரம் தாழ்ந்து பேசுவதால் நீங்கள் உங்களின் வாக்குகளை இழக்கும் நிலைதான் ஏற்படும். அது உங்களுக்குப் பலவீனத்தைத்தான் கொடுக்கும். விஜய் … Read more

Vidamuyarchi: கடைசி கட்டப் படப்பிடிப்பில் விடாமுயற்சி; வெளியான புதிய லுக்

அஜித் தற்போது `விடாமுயற்சி’, `குட் பேட் அக்லி’ என இரண்டு திரைப்படங்களை தன் கைவசம் வைத்திருக்கிறார். `குட் பேட் அக்லி’ திரைப்படத்தில் அஜித் நடிக்கும் காட்சிகளின் படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது. அதனையொட்டி இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன், “ எனக்கு இப்படியான வாழ்நாள் வாய்ப்பைக் கொடுத்த அஜித் சாருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். என்னுடைய கனவு நிறைவேறிவிட்டது. லவ் யூ அஜித் சார். இது அஜித் சாரின் கடைசி நாள் படப்பிடிப்பு. இதுவொரு அழகான பயணமாக எனக்கு அமைந்தது.” என … Read more

Viduthalai: வெற்றிமாறனின் `விடுதலை 2' படத்தில் நீக்கப்பட்ட அரசியல் வசனங்கள் இவைதான்

வெற்றி மாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி, மஞ்சு வாரியர் உள்ளிட்டோர் நடிப்பில் உருவான திரைப்படம் ‘விடுதலை பாகம் 2’ வரும் டிசம்பர் 20-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது . ஒடுக்கப்பட்ட மக்களுக்காக, உரிமைகளுக்காகப் போராடும், அதிகார வர்க்கத்தை கேள்வி எழுப்பும் போராட்டக்காரர்களின் கதையாக உருவாகியிருக்கும் இத்திரைப்படம் அரசியல் கருத்துடன் எடுக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படத்தின் ட்ரெய்லரிலேயே, ‘வன்முறை எங்க மொழி இல்லை. ஆனா எங்களுக்கு அந்த மொழியும் பேசத் தெரியும்’ மற்றும் ‘தத்துவம் இல்லா தலைவர்கள் ரசிகர்களா மட்டும்தான் … Read more

Viduthalai 2: `அவரின் படங்களில் வரும் காட்சியை அவரே கலாய்ச்சுக்குவாரு.!’ – வெற்றிமாறன் குறித்து சூரி

இயக்குநர் வெற்றி மாறன் இயக்கத்தில், சூரி, விஜய் சேதுபதி, மஞ்சு வாரியர் உள்ளிட்டோர் நடிப்பில், இளையராஜா இசையில் உருவாகியுள்ள ‘விடுதலை- 2’ வரும் டிசம்பர் 20-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. இந்நிலையில் விஜய் சேதுபதி, சூரி, மஞ்சு வாரியர் ஆகியோர் சினிமா விகடனுக்கு பேட்டி அளித்திருந்தனர். அதில் சூரி வெற்றிமாறன் குறித்து நெகிழ்ந்து பேசியிருக்கிறார். ” கதை சொல்லும்போது சில நேரத்தில் ஷார்ட் ஆக சொல்லி முடித்து விடுவார். ஆனால் அதை எடுக்கும்போது சூட்டிங்கில் ஒவ்வொரு ஆர்டிஸ்ட்டுக்கும் … Read more