Jayam Ravi:`டாடா' இயக்குநர், கதாநாயகியாக தமிழக டி.ஜி.பி-யின் மகள் – ஜெயம் ரவி படத்தின் அப்டேட்
தன்னுடைய அடுத்தடுத்த திரைப்படங்களுக்கான வேலைகளில் களமிறங்கிவிட்டார் ஜெயம் ரவி. இவர் நடிக்கவிருக்கும் இரண்டு திரைப்படங்களுக்கான பூஜை நேற்று போடப்பட்டிருக்கிறது. ஒன்று இவரின் 34-வது திரைப்படம், மற்றொன்று சிவகார்த்திகேயனின் 25-வது திரைப்படம். ஜெயம் ரவி-யின் 34-வது திரைப்படத்தை இயக்குநர் கணேஷ் கே.பாபு இயக்குகிறார். `டாடா’ திரைப்படத்தின் மூலம் அறிமுக இயக்குநராக கவனம் பெற்றவர், தற்போது தன்னுடைய இரண்டாவது திரைப்படத்தை ஜெயம் ரவியை வைத்து இயக்குகிறார். படத்தில் ஜெயம் ரவியுடன் தமிழக டி.ஜி.பி ஷங்கர் ஜிவாலின் மகள் தவ்தி ஜிவால் … Read more