சிறையில் இருந்து வெளியே வந்தவுடன் அல்லு அர்ஜுன் சொன்ன விஷயம்! என்ன தெரியுமா?

Allu Arjun First Reaction After Coming Out Of Jail : பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன், நேற்று கைது செய்யப்பட்டதை தொடர்ந்து தற்போது அவருக்கு ஜாமீன் கிடைத்து வெளியே வந்திருக்கிறார். 

RDX படத்தின் தயாரிப்பாளர் மானுவல் குரூஸ் டார்வின் அடுத்த படம் இது தான்!

Malayalam Movie Updates:மானுவல் குரூஸ் டார்வின் தயாரிப்பில் டி குரூப் நிறுவனம் தயாரித்து வரும் ‘App Kaise Ho’ திரைப்படம் வெளியீட்டிற்கு தயாராகி வருகிறது.

சூது கவ்வும் 2 படம் எப்படி இருக்கு? திரை விமர்சனம் இதோ!

Soodhu Kavvum 2 Review: மிர்ச்சி சிவா நடிப்பில், அர்ஜுன் இயக்கத்தில் உருவாகியுள்ள சூது கவ்வும் படத்தின் இரண்டாம் பாகம் இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.

Mysskin: "சூர்யாவ பத்திரமா பாத்துகணும்…" – கங்குவா விமர்சனம் குறித்து மிஷ்கின் சொல்வதென்ன?

சூர்யா நடிப்பில் சிவா இயக்கத்தில் கடந்த வியாழனன்று (நவம்பர்14) கங்குவா திரைப்படம் வெளியானது. படம் வெளியான முதல் நாளே, ரசிகர்கள் பலரும் நெகட்டிவ் விமர்சனம் தரும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியது. குறிப்பாக, படத்தில் வரும் ஒலி அளவைக் குறிப்பிட்டு கடுமையாக விமர்சிக்கப்பட்டது. ஜோதிகா, சூரி, சுசீந்திரன், இரா. சரவணன் உள்ளிட்ட சில திரைப்பிரலங்கள் சூர்யாவிற்கு ஆதரவாகப் பேசியிருந்தனர். இந்நிலையில் சூர்யாவுக்கு ஆதரவாக மிஷ்கினும் பேசியிருக்கிறார். Kanguva | கங்குவா எஸ்.பி.சக்திவேல் இயக்கத்தில் செம்பன் வினோத், … Read more

Once Upon a Time in Madras Review: எல்லோரிடமும் வந்து சேரும் துப்பாக்கி; நிஜமாகவே சுடுகிறதா?

தன் சாதியின் மீது அதீத வெறி கொண்டவரான தலைவாசல் விஜய், தன்னுடைய மகள் பவித்ரா வேறு சமூகத்தைச் சேர்ந்த இளைஞரைப் பதிவுத் திருமணம் செய்யப்போவதை அறிந்து, பெரும் கோபத்துடன் அதைத் தடுக்க கிளம்புகிறார். புதிதாகத் திருமணமாகி தன் கணவனின் வீட்டிற்கு வரும் அஞ்சலி நாயரின் வாழ்க்கையையே புரட்டிப்போடும் சம்பவங்கள், அவ்வீட்டில் நிகழ்கின்றன. முன்னாள் ரவுடியான பரத், ஆஸ்பத்திரியில் உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கும் தனது காதல் மனைவியைக் காப்பாற்றப் பணமில்லாமல் அல்லல்படுகிறார். தன் மகளின் மருத்துவப் படிப்பிற்காக, கந்துவட்டிக்காரரிடம் கடன் … Read more

Rajinikanth: `அருமை நண்பர் ஸ்டாலின், அன்பு தம்பி விஜய்; வாழ்த்திய அனைவருக்கும்..'- நன்றி சொன்ன ரஜினி

நடிகர் ரஜினிகாந்த் நேற்று (12.12.2024) தனது 74வது பிறந்தநாளைக் கொண்டாடினார். முதலமைச்சர் ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, மத்திய அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட அரசியல் தலைவர்களும் திரையுலக பிரபலங்களும் ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்திருந்தனர். வாழ்த்திய அனைவருக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில் அனைவரது பெயரையும் குறிப்பிட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் ரஜினிகாந்த். அந்த அறிக்கையில், “என்னுடைய பிறந்தநாளன்று என்னை மனமார வாழ்த்திய என்னுடைய அருமை நண்பர் தமிழக முதலமைச்சர் மதிப்பிற்குரிய மாண்புமிகு திரு மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும், … Read more

GV – Selvaragavan: `இது செல்வராகவனின் லவ் ஸ்டோரி!' – செல்வராகவனின் ஹீரோவாகிறார் ஜி.வி!

செல்வராகவன் திரைப்படத்தின் கதாநாயகனாகிறார் ஜி.வி. பிரகாஷ்! செல்வராகவான் இயக்கத்தில் ஜி.வி. பிரகாஷ் நடிக்கும் திரைப்படம் குறித்தான அறிவிப்பு தற்போது வெளியாகியிருக்கிறது. இப்படத்திற்கு `மெண்டல் மனதில்’ எனப் பெயரிட்டிருக்கிறார்கள். செல்வராகவன் இயக்கத்தில் கடந்த 2022-ம் ஆண்டு `நானே வருவேன்’ திரைப்படம் வெளியானது. இத்திரைப்படத்திற்குப் பிறகு இந்தப் ப்ராஜெக்ட்டை கையில் எடுத்திருக்கிறார் செல்வராகவன். இதில் இன்னொரு சுவாரஸ்யமான தகவல் என்னவென்றால் இத்திரைப்படத்திற்கு ஜி.வி இசையமைக்கிறார். அதுமட்டுமல்ல, அவரே இத்திரைப்படத்தை தயாரிக்கிறார். செல்வராகவன் இயக்கத்தில் வெளியான `ஆயிரத்தில் ஒருவன்’, `மயக்கம் என்ன’ … Read more

சூது கவ்வும் 2 விமர்சனம்: அதே டெம்ப்ளேட், அதே புரொபர்ட்டி;இப்படியொரு சுவாரஸ்யமற்ற சீக்குவல் அவசியமா?

2013-ம் ஆண்டு ஆள்கடத்தல் செய்த தாஸ் (விஜய் சேதுபதி) கேங்கிற்கு முன்னோடி இந்த குருவின் (சிவா) கேங். சட்டச் சிக்கலால் பணத்தைக் கொள்ளையடித்து சிறை செல்கிறார் குரு. நிகழ்காலத்தில் அவர் சிறையிலிருந்து வெளியே வர, மீண்டும் தன் கேங்குடன் ஆள்கடத்தல் செய்யத் தொடங்குகிறார். இதே காலகட்டத்தில் நிதியமைச்சராகப் பல சொத்துகளைக் குவித்திருக்கிறார் அருமைபிரகாசம் (கருணாகரன்). ஒரு கட்டத்தில் ஒரு ரிவெஞ்ச் காரணத்துக்காக அருமைபிரகாசத்தைக் கடத்த நினைக்கிறார் குரு. அதற்கேற்றவாறு அருமையும் அருமையாக ஒரு பெரிய அரசியல் சிக்கலில் … Read more

Miss You Review: சூடு (காமெடி) ஓகே; சுகர் (எமோஷன்) கம்மி; மிஸ் யூ சொல்ல வைக்கிறதா இந்த பெல்லா காஃபி?

திரைத்துறையில் இயக்குநராக முயன்றுவரும் நாயகன் வாசுவை (சித்தார்த்) தேடுகிறார்கள் மந்திரி வில்லனின் அடியாட்கள். வாசுவோ கூர்க் மலையில் காஃபி குடித்துவிட்டு கூலாக இந்த விஷயத்தை டீல் செய்கிறார். அப்போது நடக்கும் ஒரு விபத்தில் அவருக்கு சமீபத்திய நிகழ்வுகள் மறந்துபோகின்றன. பின்னர் மாற்றத்துக்காக பெங்களூரு செல்பவர், அங்கே நாயகி சுப்புலட்சுமியை (ஆஷிகா ரங்கநாத்) பார்த்ததும் காதல் கொள்கிறார். ஆனால் மொத்த குடும்பமும் சுப்புலட்சுமி வேண்டாம் எனச் சொல்கிறது. வாசு மறந்துவிட்ட அந்த இரண்டு வருடங்களில் நடந்தவை என்ன, வில்லன் … Read more