சூது கவ்வும் 2 விமர்சனம்: அதே டெம்ப்ளேட், அதே புரொபர்ட்டி;இப்படியொரு சுவாரஸ்யமற்ற சீக்குவல் அவசியமா?

2013-ம் ஆண்டு ஆள்கடத்தல் செய்த தாஸ் (விஜய் சேதுபதி) கேங்கிற்கு முன்னோடி இந்த குருவின் (சிவா) கேங். சட்டச் சிக்கலால் பணத்தைக் கொள்ளையடித்து சிறை செல்கிறார் குரு. நிகழ்காலத்தில் அவர் சிறையிலிருந்து வெளியே வர, மீண்டும் தன் கேங்குடன் ஆள்கடத்தல் செய்யத் தொடங்குகிறார். இதே காலகட்டத்தில் நிதியமைச்சராகப் பல சொத்துகளைக் குவித்திருக்கிறார் அருமைபிரகாசம் (கருணாகரன்). ஒரு கட்டத்தில் ஒரு ரிவெஞ்ச் காரணத்துக்காக அருமைபிரகாசத்தைக் கடத்த நினைக்கிறார் குரு. அதற்கேற்றவாறு அருமையும் அருமையாக ஒரு பெரிய அரசியல் சிக்கலில் … Read more

Miss You Review: சூடு (காமெடி) ஓகே; சுகர் (எமோஷன்) கம்மி; மிஸ் யூ சொல்ல வைக்கிறதா இந்த பெல்லா காஃபி?

திரைத்துறையில் இயக்குநராக முயன்றுவரும் நாயகன் வாசுவை (சித்தார்த்) தேடுகிறார்கள் மந்திரி வில்லனின் அடியாட்கள். வாசுவோ கூர்க் மலையில் காஃபி குடித்துவிட்டு கூலாக இந்த விஷயத்தை டீல் செய்கிறார். அப்போது நடக்கும் ஒரு விபத்தில் அவருக்கு சமீபத்திய நிகழ்வுகள் மறந்துபோகின்றன. பின்னர் மாற்றத்துக்காக பெங்களூரு செல்பவர், அங்கே நாயகி சுப்புலட்சுமியை (ஆஷிகா ரங்கநாத்) பார்த்ததும் காதல் கொள்கிறார். ஆனால் மொத்த குடும்பமும் சுப்புலட்சுமி வேண்டாம் எனச் சொல்கிறது. வாசு மறந்துவிட்ட அந்த இரண்டு வருடங்களில் நடந்தவை என்ன, வில்லன் … Read more

Ilayaraja: "அண்ணன் ஆசையை நான் நிறைவேற்றிட்டேன்’’ – யேசுதாஸிற்காக இளையராஜா செய்த செயல்

ஜே.யேசுதாஸின் ஆசையை நிறைவேற்றிவிட்டேன் என்று சொல்லி இளையராஜா மலையாளத்தில் பேசி வீடியோ ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார். அந்த வீடியோவில், “அன்புக்குரிய கேரள மக்களே,சொந்தங்களே வணக்கம். இந்தச் செய்தி என்னுடைய ஜே.சி.( ஜே.யேசுதாஸ்)அண்ணனுக்கானது மட்டும்தான். ஜே.சி. அண்ணனுக்குக் கொச்சியில் வைத்து, பாராட்டு விழா நடந்தபோது, அண்ணன் என்னிடம் தன்னுடைய ஆசையை சொன்னார். அது என்னவென்றால், கேரளாவிற்கு வந்து நிறைய பாடல்களைப் பாடி இருக்கிறீர்கள், இசையமைத்திருக்கிறீர்கள். ஆனால் நீங்கள் சிம்பொனி செய்ததில்லை. இளையராஜா – யேசுதாஸ் நீங்கள் ஒருநாள் கேரளாவில் சிம்பொனி … Read more

Allu Arjun Arrest : நடிகர் அல்லு அர்ஜுன் கைது! என்ன காரணம்?

Allu Arjun Arrest Reason Behind It: பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன், கைது செய்யப்பட்டுள்ளார். இதற்கு பின்னால் இருக்கும் காரணம் என்ன?

கைவிடப்படும் இளையராஜாவின் பயோபிக் படம்? வெளியான லேட்டஸ்ட் தகவல்!

அருள் மாதேஸ்வர் இயக்கத்தில் தனுஷ் நடிக்க இருந்த இளையராஜாவின் பயோ பிக் படம் கைவிட்டதாக கூறப்படுகிறது. இந்த செய்தி கோலிவுட்டில் வேகமாக பரவி வருகிறது.

Vikram 63: விக்ரம் நடிக்கும் அடுத்த படத்தின் அப்டேட்! – வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு

விக்ரம் நடிக்கும் அடுத்த படத்திற்கான அப்டேட் வெளியாகி இருக்கிறது. கடைசியாக விக்ரம் தங்கலான் படத்தில் நடித்திருந்தார். இதனைத்தொடர்ந்து ‘வீர தீர சூரன்’ படத்தில் நடித்திருக்கிறார். இப்படத்தை சித்தா பட இயக்குநர் அருண்குமார் இயக்கி இருக்கிறார். இப்படம் வருகிற ஜனவரி மாதம் வெளியாகவிருக்கிறது. இந்நிலையில், விக்ரமின் 63-வது படத்திற்கான அப்டேட் அதிகாரப்பூர்வமாக வெளியாகி இருக்கிறது. அதன்படி ‘விக்ரம் 63’ படத்தை ‘மண்டேலா’, ‘மாவீரன்’ படங்களை இயக்கிய மடோன் அஸ்வின் இயக்குகிறார். Vikram 63 இந்தப் படத்தை சாந்தி டாக்கீஸ் … Read more

கீர்த்தி சுரேஷ் திருமணத்திற்கு ஒன்றாக சென்ற த்ரிஷா-விஜய்? லீக் ஆன புகைப்படங்கள்!!

Vijay Trisha Travelled Together To Attend Keerthy Suresh Wedding : பிரபல நடிகை கீர்த்தி சுரேஷிற்கு, சமீபத்தில் கோவாவில் திருமணம் நடைப்பெற்றது. இந்த நிலையில், இந்த திருமணத்திற்கு விஜய்யும் த்ரிஷாவும் ஒன்றாக சென்றதாக கூறப்படுகிறது. 

Coolie: `ஏய்ய்ய் நவுர்றா…' – 'கூலி' படத்தின் க்ளிம்ஸ் வீடியோ இதோ

 லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் படம் ‘கூலி’. பரபரப்பாக நடந்து வரும் இதன் படப்பிடிப்பை ஜனவரி மாதத்தோடு முடிக்கத் திட்டமிட்டுள்ளனர். இப்படத்தில் தேவா எனும் பாத்திரத்தில் நடித்து வருகிறார் ரஜினி. ஸ்ருதிஹாசன், நாகார்ஜூனா, உபேந்திரா, சத்யராஜ், ஷோபின் ஷாகிர், ரெபா மோனிகா ஜான் என பலரும் நடித்து வருகின்றனர். சென்னை, ஹைதராபாத்தில் நடைபெற்ற இதன் படப்பிடிப்பு இப்போது ராஜஸ்தானில் நடந்து வருகிறது. பாலிவுட் ஸ்டாரான அமீர் கான், இந்த ஷெட்யூலில் ரஜினியுடன் இணைகிறார் என்கிறார்கள். நடிகர் … Read more

HBD Rajini: `1991-ல் வெளியான `தளபதி' ; `அட… வெரிகுட்’ ஆனந்த விகடன் விமர்சனத்தின் ஹைலைட்ஸ்!

1991-ல் விகடனில் வெளிவந்த `தளபதி’ படத்தின் விமர்சனத்தின் முக்கிய பாயின்ட்ஸ் இங்கே! * அதிரடியாய் ஆயுத அரசாங்கம் நடத்தி, பாதிக்கப்பட்ட ஏழைகளுக்கு நியாயம் வழங்குகிற ‘தாதா’ மம்மூட்டி! அவரது அடியாளாக வரும் ஒருத்தன் அநியாயம் செய்ய, ரஜினி கொஞ்சம் ஒங்கித் தட்டிவிடுகிறார். ஆள் அவுட்… ரஜினி கம்பிகளுக்குப் பின்னால்! தன்னுடைய ஆள் செய்த அராஜகத்தைத் தெரிந்துகொண்ட பிறகு அடிமனசு நியாயம் உந்தித்தள்ள, ரஜினியை வெளியே கொண்டுவந்துவிடுகிறார் மம்மூட்டி! * மம்மூட்டியும் ரஜினியும் ஆரம்பத்தில் பரம வைரிகளாய் மோதுகிறபோது. … Read more

Rajini: “பேரன்பிற்குரிய சூப்பர் ஸ்டார் அவர்களுக்கு..'' – பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த விஜய்

திரையுலகில் முன்னணி நடிகராக திகழும் ரஜினிகாந்த் இன்று தனது 74- வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் ரஜினிகாந்திற்கு பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்திருக்கின்றனர். அந்தவகையில் நடிகரும், தவெக தலைவருமான விஜய் ரஜினிகாந்திற்கு தன்னுடைய பிறந்தநாள் வாழ்த்தைத் தெரிவித்திருக்கிறார். அவர் பதிவிட்டிருந்த எக்ஸ் பதிவில், “பேரன்பிற்கும் மரியாதைக்கும் உரிய சூப்பர் ஸ்டார் திரு. ரஜினிகாந்த் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். ரஜினிகாந்த் தாங்கள் நல்ல ஆரோக்கியத்துடன் நீடூழி வாழ … Read more