அடடா… இதென்ன புது ட்விஸ்ட்: 'தலைவர் 169' படத்தில் இணையும் சிவகார்த்திகேயன் பட நடிகை..!

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான படம் ‘அண்ணாத்த’. இந்தப்படத்தில் ரஜினிகாந்திற்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருந்தார். இவர்களுடன் குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ், ஜகபதி பாபு உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். கடந்த தீபாவளிக்கு வெளியான இந்தப்படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பினை பெற்றது. பலவித நெகட்டிவ் விமர்சனங்களை தாண்டி ‘அண்ணாத்த’ படம் பாக்ஸ் ஆபிஸில் வசூல் சாதனையை படைத்தது. ஆனாலும் ரஜினி ரசிகர்களுக்கு இந்தப்படம் பலத்த ஏமாற்றத்தை அளித்தது. இதனை … Read more

‘அடுத்து ஆரம்பிச்சுட்டாங்க’.. ஸ்டேடியத்தில் ஷமியை அதிரவைத்த விஜய் ரசிகர்கள்

இலங்கைக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில், நடிகர் விஜயின் ‘பீஸ்ட்’ திரைப்படம் குறித்த அப்டேட்டை கேட்டு ரசிகர்கள் அதிரவைத்துள்ளனர். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. நடிகர் அஜித் நடிப்பில் உருவான ‘வலிமை’ திரைப்படம் நீண்ட நாள் எதிர்பார்ப்புக்குப்பின், கடந்த 24-ம் தேதி வெளியானது. படம் வெளியாவதற்கு முன்பு, கடந்த இரண்டு ஆண்டுகளாக அஜித் ரசிகர்கள், பொது இடங்களில் பிரபலங்களிடம் ‘வலிமை’ பட அப்டேட் கேட்டு வந்த விஷயம் வைரலானது.  குறிப்பாக கடந்த ஆண்டு சென்னை சேப்பாக்கத்தில், … Read more

மஞ்சப்பையை கையில் எடுத்த விஜய்

உள்ளாட்சி தேர்தல் மூலம் தமிழக அரசியலில் கால்பதித்துள்ள நடிகர் விஜய், அடுத்தபடியாக சுற்றுச்சூழல் உள்ளிட்ட விஷயங்கள் மூலம் அனைத்து தரப்பு மக்கள் மனதிலும் காலுான்ற திட்டமிட்டுள்ளார். அதன்படி, ஒவ்வொரு வாரமும் மக்கள் பணியில் ஈடுபட தன் ரசிகர் மன்ற நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். நேற்று முன்தினம் பிளாஸ்டிக் ஒழிப்பை ஊக்குவிக்கும் விதமாக மக்களிடம் பிளாஸ்டிக் பைகளை வாங்கிக் கொண்டு இரண்டு மஞ்ச துணிப்பையை விஜய் ரசிகர்கள் கொடுத்து அனுப்பினர்.

தலைவர் பொண்ணு எப்பவும் சந்தோஷமா இருக்கணும்: ஐஸ்வர்யா குறித்து லாரன்ஸ் நெகிழ்ச்சி..!

இந்திய சினிமாவில் பிரபல நடிகராக திகழும் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கும், நடிகர் தனுஷுக்கும் கடந்த 2004ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு யாத்ரா, லிங்கா என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் இவர்கள் இருவரும் பரஸ்பரம் பிரிய உள்ளதாக அண்மையில் அறிவித்தது கோலிவுட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை கிளப்பியது. விவாகரத்து அறிவிப்பிற்கு பிறகு தனது வழக்கமான பணிகளுக்கு திரும்பிய ஐஸ்வர்யா மியூசிக் ஆல்பம் இயக்கும் வேளைகளில் இறங்கினார். இதற்காக ஐதராபாத்தில் தங்கி பணிகளில் ஈடுபட்டு வந்தார். … Read more

“இரவின் நிழல், ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட படமென ஏற்க மறுக்கின்றனர்”-இயக்குநர் பார்த்திபன்

Cannes திரைப்பட விழாவிற்கு அனுப்பப்பட்டுள்ள தன்னுடைய இரவின் நிழல் திரைப்படத்தை, ஒரே ஷாட்டில் எடுத்த படம் என்பதை திரைப்பட விழா குழுவினர் ஏற்க மறுக்கின்றனர் என பார்த்திபன் தெரிவித்துள்ளார். இயக்குநர் எழில் இயக்கத்தில் ஆர்.பார்த்திபன், கவுதம் கார்த்திக் இணைந்து நடித்துள்ள ‘யுத்த சத்தம்’ திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் நடிகர் பார்த்திபன், இயக்குனர் எழில், நாயகி சாய்பிரியா, இயக்குனர் சங்க நிர்வாகிகள் ஆர்.கே.செல்வமணி, ஆர்.வி.உதயகுமார், பேரரசு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அதில் பேசிய … Read more

ஆராய்ச்சிக் குழுவுடன் ஆலோசனையில் நாக் அஸ்வின்

நடிகையர் திகலம் சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்றை 'மகாநடி' என்ற பெயரில் தெலுங்கில் இயக்கி பலரது கவனத்தையும் ஈர்த்தவர் இயக்குனர் நாக் அஸ்வின். தற்போது பிரபாஸ், தீபிகா படுகோனே, அமிதாப்பச்சன் மற்றும் பலர் நடிக்கும் சயின்ஸ் பிக்ஷன் படமான 'பிராஜக்ட் கே' படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்திற்காக மிகவும் மாடர்ன் டெக்னாலஜியுடன் கூடிய வாகனங்கள் தேவைப்படுவதாகவும், அதற்கு உதவி செய்தால் நாட்டுக்குப் பெருமையாகவும் இருக்கும் என்றும் பிரபல மோட்டார் வாகன தொழிலதிபரான ஆனந்த் மஹிந்திராவுக்கு பத்து நாட்களுக்கு … Read more

மீண்டும் மீண்டும் அதே தப்பை செய்யும் தனுஷ்: கவலையில் ரசிகர்கள்..!

கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘ மாறன் ‘. டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ள இந்தப்படம் குறித்து பலவிதமான எதிர்மறை விமர்சனங்கள் இணையத்தில் குவிந்து வருகிறது. மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகியுள்ள இந்தப்படம் தோல்வியடைந்துள்ளது ரசிகர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் தனுஷ், மாளவிகா மோகனன் நடிப்பில் உருவாகியுள்ள படம் மாறன். கார்த்திக் நரேன் இயக்கியுள்ள இந்தப்படத்தில் சமுத்திரகனி, காளி வெங்கட், மாஸ்டர் மகேந்திரன் உள்பட பலர் நடித்துள்ளனர். ஜிவி … Read more

திருக்குறளுடன் பேச்சை தொடங்கிய கதாநாயகி – நெகிழ்ந்து பாராட்டிய இயக்குநர்

தமிழ்சினிமாவின் தமிழச்சிகளின் காலம் தலைதூக்கும் என நம்புவதாக ஆர்.கே.செல்வமணி கூறியுள்ளார். எழில் இயக்கத்தில் நடிகர்கள் பார்த்திபன், கவுதம் கார்த்திக் நடித்துள்ள `யுத்த சத்தம்’ என்ற படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னை பிரசாத் ஸ்டுடியோவில் நடைபெற்றது. இதில் பார்த்திபன், கவுதம் கார்த்தி, நாயகி நடித்த சாய்பிரியா மற்றும் இயக்குனர் சங்க தலைவர் ஆர்.கே.செல்வமணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதில் பேசிய கதாநாயகி சாய்பிரியா, படத்தைப் பற்றிய தகவல்களை பகிர்ந்தபின் ‘உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்’ என்ற திருக்குறளை கூறினார். மேலும் “விவசாயிகள் … Read more

ரூ.150 கோடி வசூலைக் கடந்த 'ராதேஷ்யாம்'

ராதாகிருஷ்ணகுமார் இயக்கத்தில், பிரபாஸ், பூஜா ஹெக்டே மற்றும் பலர் நடித்த 'ராதேஷ்யாம்' படம் கடந்த வாரம் ஐந்து மொழிகளில் உலகம் முழுவதும் வெளியானது. படத்தின் வசூல் மிகக் குறைவாக இருப்பதாக ஆரம்ப கட்டத்திலேயே செய்திகள் வர தயாரிப்பு நிறுவனம் அவற்றிற்கு பதிலடி கொடுக்கும் விதமாக வசூல் விவரங்களை வெளியிட ஆரம்பித்தது. முதல் நாள் வசூல் 79 கோடி ரூபாய், இரண்டாவது நாளில் 119 கோடி ரூபாய் என்றும் அறிவித்தார்கள். நேற்றைய மூன்றாவது நாளையும் சேர்த்து வசூல் 150 … Read more

சிவகார்த்திகேயனுக்காக தனுஷ் செய்த காரியம்..குவியும் பாராட்டுக்கள்..!

நடிகர் சிவகார்த்திகேயன் இன்று தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர். முதலில் பல வெற்றிகளை கொடுத்து முன்னணி நடிகராக உயர்ந்துகொண்டிருந்த சமயத்தில் சில தோல்விகள் அவரின் மார்க்கெட்டை ஆட்டம் காண வைத்தது. இதைத்தொடர்ந்து கட்டாய வெற்றியை எதிர்நோக்கி காத்திருந்த சிவகார்த்திகேயனுக்கு டாக்டர் படம் கைகொடுத்தது. நூறு கோடி வசூல் செய்து மெகாஹிட் ஆனா டாக்டர் படத்தினால் சிவகார்த்திகேயன் மீண்டும் வெற்றிப்பாதைக்கு திரும்பியுள்ளார். கிரிக்கெட் வீரரிடம் பீஸ்ட் அப்டேட் கேட்ட விஜய் ரசிகர்கள்..தீயாய் பரவும் வீடியோ..! தற்போது இவரின் … Read more