ஆத்தி, ஆரம்பிச்சுட்டாங்களே: ஐஸ்வர்யா விஷயத்தில் உஷாரான சிம்பு

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தன் காதல் கணவரான தனுஷை பிரிந்துவிட்டார். இதையடுத்து தனுஷை கடுப்பேற்ற தன் முன்னாள் காதலரான சிம்புவை வைத்து படம் பண்ணப் போகிறார் என்று தகவல் வெளியாகி தீயாக பரவியது. தன் முன்னாள் காதலிகளுடன் சேர்ந்து படம் பண்ண சிம்பு தயங்குவது இல்லை. காதல் முறிவுக்கு பிறகு ஹன்சிகா, நயன்தாராவுடன் சேர்ந்து நடித்தார் சிம்பு. அதே போன்று ஐஸ்வர்யாவின் இயக்கத்தில் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார் போன்று என்று பேச்சு கிளம்பியது. இந்நிலையில் ஐஸ்வர்யா இயக்கத்தில் சிம்பு … Read more

‛சினிமாவில் ஜெயிக்க… மனசாட்சியை கழற்றி வச்சிரணும்': அனுபவங்களை விவரிக்கிறார் இயக்குனர் தசரதன்

அனுபவம்: 1''அந்தக் காலத்துல நடிகருக்கு ஒரு நாள் சம்பளம் 25 ரூபா தான்! ஆனா, எம்.ஜி.ஆர்., போட்ட 'திருப்பூர் குமரன்' நாடகத்துல குமரனா நடிச்சதால, 50 ரூபா சம்பளம் கிடைக்கும்னு நினைச்சேன். போலீஸ் தடியால அடிக்கிறதுல என் தலையில இருந்து ரத்தம் தெறிக்கிற காட்சியில, முன்னாடி உட்கார்ந்திருந்த முதல்வர் காமராஜர் சட்டையில ரத்தம் தெறிச்சிருச்சு.உடனே, 'அடிச்சிட்டாங்கிறேன். நாடகத்தை நிறுத்துங்கிறேன்'ன்னு, மேடை ஏறிட்டாரு. மேல வந்த பிறகு அது நடிப்பு, ரத்தம் மாதிரி ஒரு திரவம்னு சொன்னதும் என்னைக் … Read more

எதற்கும் துணிந்தவன்: பிசுபிசுத்துப்போன மிரட்டல் அரசியல்

சூர்யா நடித்த ‘எதற்கும் துணிந்தவன்’ படம் கடந்த பத்தாம் தேதி வெளியானது. அதற்கு முன் ஏழாம் தேதி, ‘ இப்படத்தை கடலூர் மாவட்டத்தில் உள்ள எந்த திரையரங்கிலும் வெளியிடக் கூடாது’ என பாமக சார்பில் கடிதம் அனுப்பப்பட்டது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதற்கான காரணம் நாம் அறிந்ததே. ஜெய்பீ்ம் – வில்லன் – அக்னி சட்டி காலண்டர். 20 ஆண்டுகளுக்கு முன்பு பாமகவினர் எதிர்ப்பால் வட மாவட்டங்களில் ரஜினியின் பாபா படத்தைத் திரையிட முடியாமல் போனது. ஒரு … Read more

துபாய் புர்ஜ் கலிபாவில் 'ஆர்ஆர்ஆர்' விழா

ராஜமவுலி இயக்கத்தில், ஜுனியர் என்டிஆர், ராம்சரண், ஆலியா பட் மற்றும் பலர் நடித்துள்ள பிரம்மாண்டப் படமான 'ஆர்ஆர்ஆர்' படம் மார்ச் 25ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது. முதலில் ஜனவரி 7ம் தேதி வெளியாவதாக அறிவிக்கப்பட்டு, அதற்கு முன்பாக இப்படத்திற்காக ஒவ்வொரு மொழி வெளியீட்டிற்கும் பிரம்மாண்டமான விழாக்களை படக்குழு நடத்தியது. ஆனால், கொரானோ பாதிப்பு காரணமாக பட வெளியீடு திடீரென தள்ளி வைக்கப்பட்டது. தற்போது மார்ச் 25ம் தேதி வெளியாவதால் அதற்கு முன்பாக மீண்டும் சில விழாக்களை … Read more

Aishwarya Rajinikanth:ஐஸ்வர்யாவை பற்றி எனக்கு அப்பவே தெரியும்: சொன்னது யார்னு பாருங்க

முசாபிர் எனும் காதல் பாடல் வீடியோவை தயாரித்து, இயக்கியிருக்கிறார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். அந்த வீடியோ இந்தி தவிர்த்து தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் ரிலீஸாகவிருக்கிறது. தமிழில் பாடியிருப்பது ஐஸ்வர்யாவின் தம்பி இசையமைப்பாளர் அனிருத். இந்நிலையில் திரையுலகை சேர்ந்தவர்கள் ஐஸ்வர்யா ரஜினிகாந்தை வாழ்த்தும் வீடியோக்கள் தொடர்ந்து வெளியாகி வருகிறது. எங்கு, எப்படி புது காதல் ஏற்பட்டது?: வீடியோ வெளியிட்ட ஐஸ்வர்யா பிரபுதேவா, குஷ்புவை அடுத்து சுஹாசினி மணிரத்னம் ஐஸ்வர்யாவை வாழ்த்தி வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் சுஹாசினி … Read more

துல்கருடன் ரொமான்ஸ் செய்த சிவாங்கி!

விஜய் டிவியின் குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சியும் முந்தைய சீசன்களை போலவே மக்களின் வரவேற்பை பெற்று வருகிறது. இந்த சீசனில் அம்மு அபிராமி, ரோஷ்ணி ஹரிப்பிரியன், சந்தோஷ் பிரதாப், ஸ்ருத்திகா, வித்யுலேகா ராமன், உள்ளிட்ட பல பிரபலங்கள் போட்டியாளர்களாக கலந்து கொண்டுள்ளனர். கோமாளிகள் வரிசையில் சிவாங்கி, புகழ், மணிமேகலை உள்ளிட்ட அனைவரும் ரிட்டர்ன் அடித்து நிகழ்ச்சியை சுவாரசியமாக மாற்றி வருகின்றனர். இந்த வார குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் ஹே சினாமிகா படத்தின்புரோமோஷனுக்காக நடிகர் … Read more

எங்கு, எப்படி புது காதல் ஏற்பட்டது?: வீடியோ வெளியிட்ட ஐஸ்வர்யா

காதல் கணவரான தனுஷை பிரிந்த கையோடு ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கியிருக்கும் காதல் பாடல் வீடியோ தான் முசாபிர் . தமிழில் பயணி என்கிற பெயரில் வெளியாகவிருக்கிறது. தென்னிந்திய திரையுலக சூப்பர் ஸ்டாரின் மகளுக்கும், மும்பையை சேர்ந்த பையனுக்கும் இடையேயான காதல் கதை. இந்நிலையில் முசாபிர் உருவான விதம் குறித்த வீடியோவை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார் ஐஸ்வர்யா. முசாபிர் வீடியோவை காதலர் தினத்தன்று வெளியிட திட்டமிட்டனர். அதற்குள் ஐஸ்வர்யாவுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால் ஷூட்டிங் … Read more

எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் காஜல் அகர்வால்

தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் காஜல் அகர்வால், 2020ம் ஆண்டு அக்டோபர் மாதம் கவுதம் கிச்லு என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். கொரானோ தாக்கம் இருந்ததால் அவருடைய திருமணம் மும்பையில் மிகவும் எளிமையாக நடந்தது. தமிழ், தெலுங்கு, ஹிந்தியில் கைவசம் இருந்த படங்களில் உடனடியாக நடித்து முடித்தார் காஜல் அகர்வால். ஒரு தெலுங்குப் படத்தில் நடிப்பதிலிருந்தும் விலகினார். அதற்குப் பின் காஜல் கர்ப்பமாக இருப்பதாக செய்திகள் வெளிவந்தன. ஆனால், சமீபத்தில்தான் அவர் கர்ப்பமாக இருப்பது பற்றி … Read more

அந்த மாதிரி பெண்ணை தான் மறுமணம் செய்வேன்: டி. இமான்

இசையமைப்பாளர் டி. இமான் தன் மனைவியை பிரிந்துவிட்டார். இந்நிலையில் மறுமணம் குறித்து பேட்டில் ஒன்றில் இமான் கூறியதாவது, நான் யாரை காட்டினாலும் எங்கள் வீட்டில் திருமணம் செய்து வைப்பார்கள். என் திருமணம் பெற்றோர் பார்த்து செய்து வைத்தது. எனக்கு திருமணமான ஒரு மாதத்தில் அம்மா இறந்துவிட்டார். நாம் செய்து வைத்த திருமணம் இப்படி விவாகரத்தில் முடிந்துவிட்டதே என்கிற என் அப்பாவின் தவிப்பு புரிகிறது. எனக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது என்று நம்புகிறேன். அனைவர் வாழ்விலும் பிரிவும், விவாகரத்தும் … Read more

ஆடை குறித்து ட்ரோல் செய்தவர்களுக்கு பதிலடி கொடுத்த சமந்தா

”பெண்கள் அணியும் ஆடையை வைத்து அவர்களை விமர்சிப்பதை விட்டுவிட்டு உங்களை மேம்படுத்துவது குறித்து கவனம் செலுத்தினால் நன்றாக இருக்கும்” எனப் பதிலடி கொடுத்துள்ளார் நடிகை சமந்தா. நடிகை சமந்தா சமீபத்தில் விருது வழங்கும் விழா ஒன்றில் பச்சை நிற கவுன் அணிந்து கலந்து கொண்டார். அவ்விழாவில் எடுக்கப்பட்ட அவரது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. இந்த புகைப்படங்களுக்கு ஏராளமான பாசிட்டிவ் கமெண்ட்கள் வந்தாலும் ஒரு சில நெகட்டிவ் கமெண்ட்ஸ்களும் பதிவாகியுள்ளது இந்த நிலையில் … Read more