சிம்புவின் கொரோனா குமார் படம் நிறுத்தப்பட்டதா? இயக்குனர் விளக்கம்

கவுதம் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு மற்றும் பத்து தல, கொரோனா குமார் ஆகிய படங்களில் நடித்து வருகிறார் சிம்பு. இந்த நிலையில் கோகுல் இயக்கும் கொரோனா குமார் படத்தில் இருந்து சம்பள பிரச்சனை காரணமாக சிம்பு விலகி விட்டதாக ஒரு தகவல் பரவிக் கொண்டிருக்கிறது. ஆனால் இந்த செய்தியை அப்படத்தின் இயக்குனர் கோகுல் மறுத்துள்ளார். அவர் கூறுகையில், ‛‛வெந்து தணிந்தது காடு படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும் கொரோனா குமார் படத்தில் சிம்பு கலந்து கொள்வார். … Read more

மார்ச் 14ல் வெளியாகும் பபூன் டீஸர்

நடிகர் வைபவ் தற்போது பாரி கே விஜய் இயக்கத்தில் ஆலம்பனா படத்தில் நடித்து வருகிறார் . இந்த படத்திற்கு பிறகு அசோக் வீரப்பன் இயக்கத்தில் 'பபூன்' என்ற புதிய படத்தில் வைபவ் நடித்து வருகிறார். இந்த படத்தில் வைபவ்வுக்கு ஜோடியாக அனகா நடிக்கிறார் . ஸ்டோன்பெஞ்ச் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் கார்த்திக் சுப்பராஜ் இப்படத்தை தயாரித்து வருகிறார் .சந்தோஷ் நாராயணன் இசையில் பாடல்கள் உருவாகி வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் முக்கிய தகவலை படக்குழு வெளியிட்டுள்ளது. பபூன் பட … Read more

உள்ளம் உருகுதய்யா பாடலை நீக்கும்படி போலீசில் புகார்

சூர்யா படங்கள் என்றாலே ரிலீஸ் ஆவதற்கு முன்பும் ரிலீசான பின்பும் ஏதாவது சர்ச்சைகளில் சிக்கிக் கொள்வது வாடிக்கையாகி விட்டது. குறிப்பாக ஜெய்பீம் படத்தில் வன்னியர்களை தவறாக சித்தரித்ததாக கடும் சர்ச்சை எழுந்தது. தற்போது சூர்யா நடிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் வெளியாகியுள்ள எதற்கும் துணிந்தவன் படத்தில் இடம்பெற்றுள்ள உள்ளம் உருகுதய்யா என்கிற பாடலை படத்தில் இருந்து நீக்க வேண்டும் எனக்ெகூறி காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அனைத்திந்திய நேதாஜி சங்கத்தின் தலைவரான ராகுல் காந்தி என்பவர் எதற்கும் துணிந்தவன் படத்தில் … Read more

பிக்பாஸ் 5 பிரபலங்களின் ரீ-யூனியன் புகைப்படங்கள் வைரல்

பிக்பாஸ் சீசன் 5 முடிந்து பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இருப்பினும் பிக்பாஸ் சீசன் 5-ல் விளையாடிய பிரபலங்கள் தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் டிரெண்டிங் டாப்பிக்காக இடம் பிடித்து வருகின்றனர். இதில் பிக்பாஸ் சீசன் 5ல் விளையாடிய பிரியங்கா, பாவனி ரெட்டி, வருண், சிபி மற்றும் அபிஷேக் ராஜா ஆகியோரின் நட்பு பற்றி அனைவருக்கும் தெரிந்ததே. சீசன் 5 நிகழ்ச்சிக்கு பிறகு தங்கள் நட்பை வெளிக்காட்டும் வகையில் அடிக்கடி சந்தித்து கொள்கின்றனர். தற்போது மீண்டும் ஒரு … Read more

அமீருடன் கல்யாணமா? – முதல் முறையாக வாய் திறந்த பாவனி

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு சீசனிலும் ஒரு காதல் ஜோடி பிரபலமாகிவிடும். அந்த வகையில் சீசன் 5-ல் பிரபலமான காதல் ஜோடி தான் அமீர் – பாவனி ரெட்டி. முத்த சர்ச்சை, காதல் விவகாரம் என அமீர் – பாவனியின் பெயர் அடிக்கடி அடிப்பட்டது. ஆனால், அப்போது நாங்கள் இருவரும் நல்ல நண்பர்கள் தான் என இருவரும் பூசி மெழுகி வந்தனர். பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியே வந்த பிறகும் அமீர் – பாவனி நெருக்கமான நண்பர்களாக தான் வலம் … Read more

என்னை தவறாக வழி நடத்தியவர்கள் ஒருநாள் வருத்தப்படுவார்கள் : அட்லீ

ராஜா ராணி படத்தில் இயக்குனரான அட்லீ அதன்பிறகு விஜய் நடிப்பில் தெறி, மெர்சல், பிகில் ஆகிய படங்களை அடுத்தடுத்து இயக்கினார். தற்போது ஹிந்தியில் ஷாருக்கான் நடிக்கும் ஒரு படத்தை அவர் இயக்கி வருவதாக தொடர்ந்து செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இப்படத்தில் நயன்தாரா நடிப்பதாக கூறப்படும் நிலையில் தற்போது அப்பட வேலைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. வழக்கம்போல் இந்த படத்தின் கதையும் வேறொரு படத்தின் கதையை தழுவி அட்லீ தயார் செய்திருப்பதாக சோசியல் மீடியாவில் செய்திகள் வெளியாகி வருகின்றன. … Read more

அஜித்துடன் மங்காத்தா 2 எப்போது? – வெங்கட் பிரபு பதில்

அஜித் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கிய படம் மங்காத்தா. இப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதால் மங்காத்தா படத்தின் இரண்டாம் பாகம் மீண்டும் தொடங்கப்படுமா என்று தொடர்ந்து அஜித்தின் ரசிகர்கள் வெங்கட் பிரபுவிடத்தில் கேள்வி விடுத்து வருகிறார்கள். இது குறித்து சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில், மங்காத்தா-2 படத்திற்கான கதை எப்போதோ தயாராகி விட்டது. அதனால் அஜித் எப்போது அழைத்தாலும் உடனடியாக அந்த படத்தை தொடங்குவதற்கு தயாராக இருக்கிறேன் என்று கூறியுள்ள வெங்கட்பிரபு, விஸ்வாசம் படத்திற்கு பிறகு வலிமை … Read more

'பிச்சைக்காரன் 2' படம் பற்றிய தகவலை வெளியிட்ட விஜய் ஆண்டனி

2016-ம் ஆண்டு இயக்குனர் சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான 'பிச்சைக்காரன்' திரைப்படம் சூப்பர் ஹிட்டானது. விஜய் ஆண்டனிக்கு இப்படம் திருப்புமுனையாக அமைந்தது. இந்த படத்தில் விஜய் ஆன்டனிக்கு ஜோடியாக சட்னா டைட்டஸ் நடித்திருந்தார். இப்படத்தின் இரண்டாம் பாகத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. விஜய் ஆண்டனியே இரண்டாம் பாகத்தை இயக்குகிறார். கடந்த சில நாட்களாக யார் பிகிலி , யார் ஆன்டி பிகிலி என்ற கேள்வி சமூகவலைத்தளங்களில் படக்குழுவினரால் ப்ரோமோஷன் செய்யப்பட்டது . இந்நிலையில் பிச்சைக்காரன் … Read more

கையில் துப்பாக்கியுடன் கீர்த்தி சுரேஷ்

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் செல்வராகவன் – கீர்த்திசுரேஷ் முக்கிய வேடங்களில் நடித்துள்ள படம் சாணிக்காயிதம். விரைவில் வெளியாக இருக்கும் இந்தப் படத்தில் செல்வராகவன் கையில் துப்பாக்கி வைத்துக்கொண்டு நிற்கும் புகைப்படம் ஒன்று சமீபத்தில் வெளியானது. அதை அடுத்து கீர்த்தி சுரேஷ் தனது கையில் துப்பாக்கி வைத்துக் க்கொண்டிருக்கும் போட்டோ ஒன்று இப்போது வெளியாகி வைரலாகி வருகிறது. அந்தவகையில் இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரு ஆக்ஷன் கலந்த வேடத்தில் நடித்திருப்பது தெரியவந்துள்ளது. இந்த … Read more

'மாறன்' படத்துல என்னதான் பஞ்சாயத்து..?: சர்ச்சைகளை கிளப்பிய கார்த்தி நரேனின் பதிவு..!

கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘ மாறன் ‘. நேற்று மாலை ஐந்து மணிக்கு டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் இந்தப்படம் வெளியாகியுள்ளது. பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகியுள்ள ‘மாறன்’ படம் பலவிதமான எதிர்மறை விமர்சனங்களை பெற்று வருகிறது. நடிகர் தனுஷ், மாளவிகா மோகனன் நடிப்பில் உருவாகியுள்ள படம் மாறன். கார்த்திக் நரேன் இயக்கியுள்ள இந்தப்படத்தில் சமுத்திரகனி, காளி வெங்கட், மாஸ்டர் மகேந்திரன் உள்பட பலர் நடித்துள்ளனர். ஜிவி பிரகாஷ் இசையில் … Read more