அஜித்துடன் மங்காத்தா 2 எப்போது? – வெங்கட் பிரபு பதில்

அஜித் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கிய படம் மங்காத்தா. இப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதால் மங்காத்தா படத்தின் இரண்டாம் பாகம் மீண்டும் தொடங்கப்படுமா என்று தொடர்ந்து அஜித்தின் ரசிகர்கள் வெங்கட் பிரபுவிடத்தில் கேள்வி விடுத்து வருகிறார்கள். இது குறித்து சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில், மங்காத்தா-2 படத்திற்கான கதை எப்போதோ தயாராகி விட்டது. அதனால் அஜித் எப்போது அழைத்தாலும் உடனடியாக அந்த படத்தை தொடங்குவதற்கு தயாராக இருக்கிறேன் என்று கூறியுள்ள வெங்கட்பிரபு, விஸ்வாசம் படத்திற்கு பிறகு வலிமை … Read more

'பிச்சைக்காரன் 2' படம் பற்றிய தகவலை வெளியிட்ட விஜய் ஆண்டனி

2016-ம் ஆண்டு இயக்குனர் சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான 'பிச்சைக்காரன்' திரைப்படம் சூப்பர் ஹிட்டானது. விஜய் ஆண்டனிக்கு இப்படம் திருப்புமுனையாக அமைந்தது. இந்த படத்தில் விஜய் ஆன்டனிக்கு ஜோடியாக சட்னா டைட்டஸ் நடித்திருந்தார். இப்படத்தின் இரண்டாம் பாகத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. விஜய் ஆண்டனியே இரண்டாம் பாகத்தை இயக்குகிறார். கடந்த சில நாட்களாக யார் பிகிலி , யார் ஆன்டி பிகிலி என்ற கேள்வி சமூகவலைத்தளங்களில் படக்குழுவினரால் ப்ரோமோஷன் செய்யப்பட்டது . இந்நிலையில் பிச்சைக்காரன் … Read more

கையில் துப்பாக்கியுடன் கீர்த்தி சுரேஷ்

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் செல்வராகவன் – கீர்த்திசுரேஷ் முக்கிய வேடங்களில் நடித்துள்ள படம் சாணிக்காயிதம். விரைவில் வெளியாக இருக்கும் இந்தப் படத்தில் செல்வராகவன் கையில் துப்பாக்கி வைத்துக்கொண்டு நிற்கும் புகைப்படம் ஒன்று சமீபத்தில் வெளியானது. அதை அடுத்து கீர்த்தி சுரேஷ் தனது கையில் துப்பாக்கி வைத்துக் க்கொண்டிருக்கும் போட்டோ ஒன்று இப்போது வெளியாகி வைரலாகி வருகிறது. அந்தவகையில் இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரு ஆக்ஷன் கலந்த வேடத்தில் நடித்திருப்பது தெரியவந்துள்ளது. இந்த … Read more

'மாறன்' படத்துல என்னதான் பஞ்சாயத்து..?: சர்ச்சைகளை கிளப்பிய கார்த்தி நரேனின் பதிவு..!

கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘ மாறன் ‘. நேற்று மாலை ஐந்து மணிக்கு டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் இந்தப்படம் வெளியாகியுள்ளது. பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகியுள்ள ‘மாறன்’ படம் பலவிதமான எதிர்மறை விமர்சனங்களை பெற்று வருகிறது. நடிகர் தனுஷ், மாளவிகா மோகனன் நடிப்பில் உருவாகியுள்ள படம் மாறன். கார்த்திக் நரேன் இயக்கியுள்ள இந்தப்படத்தில் சமுத்திரகனி, காளி வெங்கட், மாஸ்டர் மகேந்திரன் உள்பட பலர் நடித்துள்ளனர். ஜிவி பிரகாஷ் இசையில் … Read more

நடிகர் சங்கத் தேர்தல்: வரும் 20 ஆம்தேதி வாக்கு எண்ணிக்கை

’நடிகர் சங்கத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை வரும் 20-ஆம் தேதி நடைபெறும்’ என ஓய்வு பெற்ற நீதிபதி பத்மநாபன் அறிவித்துள்ளார். தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் 2019 ஆம் ஆண்டு ஜூன் 23ஆம் தேதி நடைபெற்றது. இத்தேர்தலில், தங்களின் வாக்களிக்கும் உரிமை பாதிக்கப்பட்டதாக ஏழுமலை, பெஞ்சமின் ஆகியோர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். இதை விசாரித்த நீதிபதிகள் இறுதித் தீர்ப்பு வரும்வரை தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணுவதற்கு தடை விதித்தனர். இதனால் தேர்தல் நடத்திய அதிகாரி பத்மநாபன், பதிவான … Read more

பிரபுதேவாவின் 58வது படம் ஆரம்பம்

பிரபுதேவா நடிக்கும் 58வது படம் பூஜையுடன் சென்னையில் தொடங்கப்பட்டது. ரேக்ளா என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ள இப்படத்தை இயக்குனர் மிஷ்கின் கிளாப் அடித்து தொடங்கி வைத்தார். வால்டர் படத்தை இயக்கிய அன்பு இப்படத்தை இயக்க, ஜிப்ரான் இசையமைக்கிறார். இந்த படத்தின் பூஜையில் தயாரிப்பாளர்கள் பைவ் ஸ்டார் கதிரேசன். சி வி. குமார் உள்பட பலர் கலந்து கொண்டார்கள். இப்படத்தில் பிரபுதேவாவுடன் வாணிபோஜன், ரோபோ சங்கர் உள்பட பலர் நடிக்கிறார்கள்.

கங்கை நதிக்கரையில் தொழில் அதிபரை கரம்பிடித்த காயல் பட நாயகி!

தமிழ் சினிமாவில் பாடகியாகவும், நடிகையாகவும் இருப்பவர் ஸ்வாகதா . தமிழில் காயல் மற்றும் இன்ட்ரா ஆகிய படங்களில் ஹீரோயினாக நடித்துள்ளார். அந்தப் படங்கள் இன்னும் ரிலீஸ் ஆகவில்லை. என் நண்பனை பார்க்க முடியவில்லை… விஜயகாந்தின் போட்டோவை பார்த்து கதறி அழுத ராதாரவி! இந்நிலையில் ஸ்வாகதா, பெங்களூரைச் சேர்ந்த தொழிலதிபர் அக்‌ஷய் குமாரை சமீபத்தில் திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணம் இமயமலை அடிவாரத்தில் ரிஷிகேஷில் கங்கை நதிக்கரையில் திறந்தவெளியில் நடைபெற்றுள்ளது. மாமியாரை எதிர்க்க துணிந்த தனுஷ்… முக்கிய … Read more

சஞ்சீவ் – ஆல்யா வீட்டில் இரட்டைக் கொண்டாட்டம்

விஜய் டிவியின் ராஜா ராணி சீரியலில் நடிகர்களாக ஜோடியாக அறிமுகமான சஞ்சீவ் கார்த்திக் மற்றும் ஆல்யா மானசா தற்போது நிஜ வாழ்விலும் அழகான ஜோடியாக வலம் வருகின்றனர். இந்த தம்பதியருக்கு அய்லா என்ற அழகான பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் ஆல்யா தற்போது இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருக்கிறார். இது அவருக்கு ஒன்பதாவது மாதம். எனினும், ராஜா ராணி 2 சீரியலில் சந்தியா கதாபாத்திரத்தில் சூப்பராக நடித்து வருகிறார். தற்போது ஆல்யாவின் கணவர் சஞ்சீவ் ஒரு மகிழ்ச்சியான … Read more

ஐஸ்வர்யா எது பண்ணாலும் காரணம் இருக்கும்: வைரலாகும் குஷ்புவின் வீடியோ..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யா ‘ முசாபிர் ‘ என்ற ஆல்பம் பாடலை இயக்கி முடித்துள்ளார். இந்தப்பாடலை வெளியிடும் பணிகளில் தீவிரமாக இறங்கி வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பாக உடல்நலக்குறைவு காரணமாக மருத்துமனையில் ஓய்வில் இருந் ஐஸ்வர்யா, தற்போது மீண்டும் வீடு திரும்பியுள்ளார். இந்திய சினிமாவில் பிரபல நடிகராக திகழும் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கும், நடிகர் தனுஷுக்கும் கடந்த 2004ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு யாத்ரா, லிங்கா என்ற இரண்டு … Read more

ஹிந்தி ரசிகர்களை ஏமாற்றிய 'ராதேஷ்யாம்'

'பாகுபலி, சாஹோ' ஆகிய படங்கள் தெலுங்கு நடிகரான பிரபாஸை பான்-இந்தியா நடிகர் என்று சொல்ல வைத்தன. அந்தப் படங்களின் வசூலும் ஹிந்தியில் 100 கோடியைத் தாண்டியது. 'சாஹோ' படம் தென்னிந்தியாவில் தோல்வியடைந்தாலும் ஹிந்தியில் 100 கோடியைத் தாண்டி ஆச்சரியப்படுத்தியது. அதற்கடுத்து பிரபாஸ் நடித்த 'ராதே ஷ்யாம்' ஐந்து மொழிகளில் நேற்று வெளியானது. ஒரு ஆக்ஷன் படமாகவும் இருக்கும் என்று எதிர்பார்த்த ரசிகர்களை இந்தப் படம் ஏமாற்றியுள்ளது. ஹிந்தியில் இந்தப் படத்தை முற்றிலுமான ஆக்ஷன் படமாகவே ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளார்கள். … Read more