சஞ்சீவ் – ஆல்யா வீட்டில் இரட்டைக் கொண்டாட்டம்

விஜய் டிவியின் ராஜா ராணி சீரியலில் நடிகர்களாக ஜோடியாக அறிமுகமான சஞ்சீவ் கார்த்திக் மற்றும் ஆல்யா மானசா தற்போது நிஜ வாழ்விலும் அழகான ஜோடியாக வலம் வருகின்றனர். இந்த தம்பதியருக்கு அய்லா என்ற அழகான பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் ஆல்யா தற்போது இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருக்கிறார். இது அவருக்கு ஒன்பதாவது மாதம். எனினும், ராஜா ராணி 2 சீரியலில் சந்தியா கதாபாத்திரத்தில் சூப்பராக நடித்து வருகிறார். தற்போது ஆல்யாவின் கணவர் சஞ்சீவ் ஒரு மகிழ்ச்சியான … Read more

ஐஸ்வர்யா எது பண்ணாலும் காரணம் இருக்கும்: வைரலாகும் குஷ்புவின் வீடியோ..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யா ‘ முசாபிர் ‘ என்ற ஆல்பம் பாடலை இயக்கி முடித்துள்ளார். இந்தப்பாடலை வெளியிடும் பணிகளில் தீவிரமாக இறங்கி வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பாக உடல்நலக்குறைவு காரணமாக மருத்துமனையில் ஓய்வில் இருந் ஐஸ்வர்யா, தற்போது மீண்டும் வீடு திரும்பியுள்ளார். இந்திய சினிமாவில் பிரபல நடிகராக திகழும் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கும், நடிகர் தனுஷுக்கும் கடந்த 2004ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு யாத்ரா, லிங்கா என்ற இரண்டு … Read more

ஹிந்தி ரசிகர்களை ஏமாற்றிய 'ராதேஷ்யாம்'

'பாகுபலி, சாஹோ' ஆகிய படங்கள் தெலுங்கு நடிகரான பிரபாஸை பான்-இந்தியா நடிகர் என்று சொல்ல வைத்தன. அந்தப் படங்களின் வசூலும் ஹிந்தியில் 100 கோடியைத் தாண்டியது. 'சாஹோ' படம் தென்னிந்தியாவில் தோல்வியடைந்தாலும் ஹிந்தியில் 100 கோடியைத் தாண்டி ஆச்சரியப்படுத்தியது. அதற்கடுத்து பிரபாஸ் நடித்த 'ராதே ஷ்யாம்' ஐந்து மொழிகளில் நேற்று வெளியானது. ஒரு ஆக்ஷன் படமாகவும் இருக்கும் என்று எதிர்பார்த்த ரசிகர்களை இந்தப் படம் ஏமாற்றியுள்ளது. ஹிந்தியில் இந்தப் படத்தை முற்றிலுமான ஆக்ஷன் படமாகவே ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளார்கள். … Read more

என்ன சொல்றீங்க… நயன் – விக்கி திடீர் திருமணமா..?: ஷாக்கில் ரசிகர்கள்..!

தமிழ் சினிமாவில் டாப் நடிகையாக வலம் வரும் நடிகை நயன்தாரா ரஜினி, அஜித், விஜய், தனுஷ், சூர்யா, விஷால் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் அனைவருடனும் இணைந்து நடித்து விட்டார். தற்போது கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதைக்களங்களை தேர்ந்தெடுத்து நடித்து வரும் நயன்தாரா, தெலுங்கு மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் முன்னணி நாயகியாக வலம் வந்து கொண்டிருக்கிறார். நயன்தாரா விக்னேஷ் சிவன் இயக்கத்தில் காதம்பரியாக ‘நானும் ரவுடிதான்’ படத்தில் நடித்த போது இருவருக்குள்ளும் காதல் மலர்ந்துள்ளதாக பரபரப்பு செய்திகள் வெளியாகின. … Read more

மீண்டும் படம் இயக்குகிறார் உபேந்திரா

முன்னணி கன்னட நடிகர் உபேந்திரா. தமிழில் சத்யம் உள்பட சில படங்களில் நடித்துள்ளார். உபேந்திரா நடிகர் மட்டுமல்லாது பாடகர் மற்றும் இயக்குனர். 10க்கும் மேற்பட்ட படங்களை இயக்கிய உபேந்திரா கடைசியாக உப்பி 2 என்ற படத்தை இயக்கினார். தற்போது 7 வருடங்களுக்கு பிறகு மீண்டும் படம் இயக்குகிறார். இது இந்திய மொழிகளில் உருவாகும் பிரமாண்ட படம். தென்னிந்தியாவின் மிகப்பெரிய இசை நிறுவனமான லஹரி நிறுவனம் லஹரி பிலிம்ஸ் என்ற நிறுவனத்தை தொடங்கி முதல் படமாக உபேந்திரா படத்தை … Read more

வெளியானது வைபவ்வின் புதிய பட டீசர் குறித்த முக்கிய அப்டேட்…!

வைபவ்வின் ‘ பபூன் ’ படத்தின் டீசர் குறித்து புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.தமிழ் திரையுலகில் இளம் நடிகராக வலம் வருகிறார் வைபவ் . தற்போது காமெடி கதைக்களங்களில் திரைப்படங்களில் நடித்து வருகிறது. அந்த வகையில் பாரி கே விஜய் இயக்கத்தில் ஆலம்பனா படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படம் விரைவில் வெளியாகவிருக்கிறது. இந்த படத்தை அடுத்து ‘பபூன்’ என்ற புதிய படத்தில் வைபவ் நடித்து வருகிறார். தனது திருமண வாழ்க்கையை நிறைவு செய்வதாக டிவிட்டரில் பதிவிட்ட ரீமாசென்…! என்ன … Read more

மாறன் விமர்சனம்: டைம் டிராவல் செய்யவைக்கும் பழங்கால சினிமா… ஒரேயொரு கேள்விதான் தனுஷ், ஏன் இப்படி?

நேர்மையான ஊடகவியலாளரான மாறன், அவருக்கு எதிராக நடக்கும் சதித் திட்டங்களை எப்படி முறியடிக்கிறார் என்பதுதான் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகியிருக்கும் ‘மாறன்’ படத்தின் ஒன்லைன். மாறன் விமர்சனம் மாறனின் தந்தை ஒரு நேர்மையான ஊடகவியலாளராக இருக்க, வழக்கம்போல் அவரை எதிரிகள் கொன்றுவிடுகிறார்கள். அதே திருநாளில்தான் சிறுவனாக இருக்கும் மாறனுக்கு தங்கை பிறக்கிறாள். அப்பாவின் மரணம் என்ற கலவரத்தின் இடையே தாய்க்குப் பிரசவ வலி வர, ‘வீல்’ என்னும் சத்தத்துடன் குழந்தை பிறக்கிறது. ஒட்டுமொத்த குடும்ப பாரமும் மாறன் … Read more

தேன் படம் டிவியில் ஒளிபரப்பாகிறது

கடந்த ஆண்டு வெளிவந்து பெரும் பாராட்டை பெற்ற படம் தேன். கணேஷ் விநாயகன் இயக்கத்தில் வெளிவந்த இந்த படத்திலர் தருண் குமார் மற்றும் 'எங்க வீட்டு மாப்பிள்ளை' புகழ் அபர்னதி அருள்தாஸ் மற்றும் பவா லட்சுமணன் நடித்திருந்தார்கள். தேனீ வளர்ப்புப்பணியில் ஈடுபட்டிருக்கும் கிராமப்புறத்தைச் சேர்ந்த, கல்வி கற்காத ஒரு நபரின் வாழ்க்கை மற்றும் அவர் மீது இந்த சமுதாயம் சுமத்துகின்ற சுமைகளையும், பிரச்சனைகளையும் அவர் எப்படி எதிர்த்து போராடுகிறார் என்ற கருப்பொருளைச் சுற்றி பின்னப்பட்டிருக்கும் இத்திரைப்படம் விமர்சன … Read more

ஏன் முறைக்கிறீங்க…. சமந்தாவை பாதுகாப்பாக அழைத்து சென்ற கிரிக்கெட் வீரர்!

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா . தற்போது பாலிவுட்டிலும் தடம் பதிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த அக்டோபர் மாதம் கணவர் நாக சைதன்யாவை பிரிவதாக அறிவித்தார். அதன் பிறகு சமந்தா, என்ன செய்கிறார் என்பதை உற்று கவனித்து வருகின்றனர் ரசிகர்கள். கணவரை பிரிந்த பிறகு தோழிகளுடன் உள்ளூர் மட்டுமின்றி வெளிநாடுகளுக்கும் சுற்றுலா சென்று வருகிறார் சமந்தா. அந்த போட்டோக்களை தனது சமூக வலைதள பக்கத்தில் ஷேர் செய்து வருகிறார். Maaran … Read more

ராதேஷ்யாம் – முதல் நாள் வசூல் ரூ.79 கோடி என அறிவிப்பு

பிரபாஸ், பூஜா ஹெக்டே மற்றும் பலர் நடிக்க ராதாகிருஷ்ணகுமார் இயக்கத்தில் உருவான 'ராதேஷ்யாம்' படம் நேற்று ஐந்து மொழிகளில் வெளியானது. இப்படம் பிரபாஸின் முந்தைய பான்–இந்தியா படமான 'சாஹோ' படத்தின் வசூலை முறியடிக்கும் என பட வெளியீட்டிற்கு முன்பு சொன்னார்கள். ஆனால், படம் காதல் படமாக மட்டுமே இருப்பதால் படத்திற்கான வசூல் எதிர்பார்த்த அளவு இல்லை என்று முதல் கட்டத் தகவல்கள் தெரிவித்தன. இந்நிலையில் படத்தைத் தயாரித்துள்ள யுவி கிரியேஷன்ஸ் அவர்களது சமூகவலைதளத்தில் படத்தின் முதல் நாள் … Read more