ஏன் முறைக்கிறீங்க…. சமந்தாவை பாதுகாப்பாக அழைத்து சென்ற கிரிக்கெட் வீரர்!

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா . தற்போது பாலிவுட்டிலும் தடம் பதிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த அக்டோபர் மாதம் கணவர் நாக சைதன்யாவை பிரிவதாக அறிவித்தார். அதன் பிறகு சமந்தா, என்ன செய்கிறார் என்பதை உற்று கவனித்து வருகின்றனர் ரசிகர்கள். கணவரை பிரிந்த பிறகு தோழிகளுடன் உள்ளூர் மட்டுமின்றி வெளிநாடுகளுக்கும் சுற்றுலா சென்று வருகிறார் சமந்தா. அந்த போட்டோக்களை தனது சமூக வலைதள பக்கத்தில் ஷேர் செய்து வருகிறார். Maaran … Read more

ராதேஷ்யாம் – முதல் நாள் வசூல் ரூ.79 கோடி என அறிவிப்பு

பிரபாஸ், பூஜா ஹெக்டே மற்றும் பலர் நடிக்க ராதாகிருஷ்ணகுமார் இயக்கத்தில் உருவான 'ராதேஷ்யாம்' படம் நேற்று ஐந்து மொழிகளில் வெளியானது. இப்படம் பிரபாஸின் முந்தைய பான்–இந்தியா படமான 'சாஹோ' படத்தின் வசூலை முறியடிக்கும் என பட வெளியீட்டிற்கு முன்பு சொன்னார்கள். ஆனால், படம் காதல் படமாக மட்டுமே இருப்பதால் படத்திற்கான வசூல் எதிர்பார்த்த அளவு இல்லை என்று முதல் கட்டத் தகவல்கள் தெரிவித்தன. இந்நிலையில் படத்தைத் தயாரித்துள்ள யுவி கிரியேஷன்ஸ் அவர்களது சமூகவலைதளத்தில் படத்தின் முதல் நாள் … Read more

ராதே ஷ்யாம் விமர்சனம்: 300 கோடி ரூபாய் கை ரேகை ஜோசியம் பலித்ததா… `பாகுபலி' பிரபாஸா இது?

காதலும் காலமும் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்திருக்கும் உலகில், ஜோசியத்தால் காலக்கெடு குறைவாய் இருக்கும் நபரும்; நோயினால் காலக்கெடு குறைவாய் இருக்கும் நபரும் காதலிக்கிறார்கள். என்ன நடந்திருக்கும் என நீங்கள் யூகிப்பததுதான் ‘ராதே ஷ்யாம்’ படத்தின் ஒன்லைன். 1970-களில் பதவி வகித்த அந்த இந்தியப் பெண் பிரதமரிடம் சென்று, அவரின் கை ரேகையை பார்த்து ‘நீங்கள் எமர்ஜென்சி அறிவிக்கப்போகிறீர்கள்’ என்று முன்கூட்டியே கணித்துச் சொல்லும் அளவுக்கு செல்வாக்குப் பெற்ற கை ரேகை ஜோஷியர் விக்ரமாதித்யா என்கிற ஆதித்யா. … Read more

பாலியல் குற்றங்களை தடுக்க இதுதான் சரியான வழி – நடிகை ரோகிணி சொன்ன அறிவுரை

பாலியல் குற்றங்களை தடுக்க பெண் பிள்ளைகளுக்கு கற்றுக் கொடுக்கும் அனைத்தையும், ஆண் பிள்ளைகளுக்கும் கற்றுக்கொடுத்தால் பாலியல் குற்றங்கள் தடுக்கப்படும் என்று நடிகை ரோகிணி தெரிவித்துள்ளார். திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே இருங்களூர் பகுதியில், எஸ்.ஆர்.எம் கல்விக் குழுமம் சார்பில், மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மைய வளாகத்தில், சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு ‘அக்னி சிறகே’ என்ற தலைப்பில் மகளிர் தின விழா நடைபெற்றது. விழாவில் திரைப்பட நடிகை ரோகிணி பங்கேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:- “சமூகத்தில் பெண்கள் மீதான தவறான பார்வையின் … Read more

எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு மணி மண்டபம் கட்டுகிறது கேரள அரசு

தமிழ் சினிமா சரித்திரத்தில் சாதனை படைத்த இசை அமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன். மெல்லிசை மன்னர் என்று புகழப்பட்ட அவர் கர்நாடக சங்கீதத்திற்குள் முடங்கி இருந்த திரைப்பாடல்களை வெகுஜன மக்களுக்கான இசையாக மாற்றியவர். தென்னிந்திய மொழிகளில் ஆயிரம் படங்களுக்கு மேல் இசை அமைத்திருக்கிறார். தமிழ் இசை அமைப்பாளர் என்று எம்.எஸ்.விஸ்வநாதன் அறியப்பட்டாலும் அவர் ஒரு மலையாளி. கேரளாவின் எலப்புள்ளி கிராமத்தில் 1928 ஆம் ஆண்டு ஜூன் 24 ஆம் தேதி பிறந்தவர். தனது மண்ணின் மைந்தன் எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு மணி மண்டபம் … Read more

தனது திருமண வாழ்க்கையை நிறைவு செய்வதாக டிவிட்டரில் பதிவிட்ட ரீமாசென்…! என்ன ஆச்சுனு தெரியலையே…?

தனது 10 ஆம் ஆண்டு திருமண நாளை நெருங்கி இருக்கிறார் ரீமா சென் : தமிழில் விஷால் அறிமுகமான ‘ செல்லமே ‘ படத்தில் அறிமுகமானவர் நடிகை ரீமா சென், 1981ஆம் ஆண்டு கொல்கத்தாவில் ஒரு நடுத்தர குடும்பத்தில் பிறந்தவர். கொல்கத்தாவில் பள்ளிப்படிப்பை முடித்த ரீமா சென் மும்பையில் தனது கல்லூரி படிப்பை முடித்தார். அதன்பின்னர் மாடலிங் துறையில் சில காலம் இருந்தார் ரீமா சென். உண்மையை சொல்லப் போனால் 90ஸ் கிட்ஸ்களுக்கு ரீமா சென் மற்றும் … Read more

”லைகாவிடம் பெற்ற கடனுக்காக ரூ.15 கோடியை விஷால் செலுத்தவேண்டும்” : நீதிமன்றம்

”லைகா நிறுவனத்திடம் பெற்ற கடனுக்காக ரூ.15 கோடியை நிரந்தர வைப்பீடாக செலுத்த வேண்டும்” என்று நடிகர் விஷலுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விஷால் ஃபிலிம் பேக்டரி நிறுவனத்தின் படத் தயாரிப்புக்காக அன்புச்செழியனிடமிருந்து பெற்ற ரூ. 21.29 கோடியை லைகா நிறுவனம் செலுத்தியிருந்தது. அந்தத் தொகையை செலுத்தாமல் “வீரமே வாகை சூடும்” படத்தை வெளியிடவும், சாட்டிலைட் மற்றும் ஓடிடி உரிமையை விற்க தடை விதிக்கவும் கோரி லைகா வழக்கு தொடர்ந்திருந்தது. மூன்று வாரங்களில் நிரந்தர வைப்பீடாக டெபாசிட் … Read more

வலிமை படத்திற்கு எதிராக மெட்ரோ தயாரிப்பாளர் வழக்கு

போனி கபூர் தயாரிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் அஜீத் நடிப்பில் வெளிவந்த படம் வலிமை. கலவையான விமர்சனத்தை பெற்ற இந்த படம் வசூலில் சாதனை படைத்தது. இந்த படத்தின் கதையும் சில ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த மெட்ரோ என்ற படத்தின் கதையும் ஒரே சாயலை கொண்டிருப்பதாக விமர்சனம் எழுந்தது. படம் வெளியாகி விட்ட நிலையில் வலிமை திரைப்படத்தின் கதை, கதாபாத்திரங்கள், தங்களின் மெட்ரோ படத்தில் இருந்து எடுக்கப்பட்டுள்ளதாக கூறி, அந்த படத்தை தயாரித்த ஜே.கே.கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளர் ஜெயகிருஷ்ணன் … Read more

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலுக்கான வாக்கு எண்ணும் தேதி அறிவிப்பு!

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் கடந்த 2019ஆம் ஆண்டு ஜூன் மாதம் நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சவுத் இந்தியன் வங்கி கிளையில் லாக்கரில் வைக்கப்பட்டது. இதனிடையே தேர்தலை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில் இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் தென்னிந்திய நடிகர் சங்கத்தை நிர்வகிக்க சிறப்பு அதிகாரியையும் நியமித்தது. நான் இருக்கேன்மா… முத்துமணி மனைவிக்கு ஆறுதல் கூறிய ரஜினி! இந்த வழக்கில் சமீபத்தில் தீர்ப்பளித்த சென்னை உயர்நீதிமன்றம் … Read more